24 April 2013

உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா என்று உலக வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.


உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா என்று உலக வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.


உலகின் பெரும் பணக்காரர்கள் வாழும் இந்தியாவில் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள 27 மாடிகள் கொண்ட‌ வீட்டை கட்டி வசிக்கும் போது இந்த செய்தி ஒன்றும் ஆச்சரியமில்லை தான்.

உலக நாடுகளில் மொத்தம் 120 கோடி ஏழைகள் வாழ்வதாகவும், அவர்களில் மூன்றில் ஒரு பகுதி மக்களான 40 கோடி பேர் இந்தியாவில் உள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

2030
ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகளில் ஏழ்மையை ஒழிக்கும் திட்டத்திற்காக உலக வங்கி நடத்திய ஆய்வின் மூலம், உலகில் ஏழ்மை அதிகமாக உள்ள நாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியா, ஆசிய கண்டம் மற்றும் பசுபிக் பெருங்கடலை சுற்றியுள்ள ஆசிய நாடுகளில் பலர் நாளொன்றுக்கு ரூ.65க்கும் குறைந்த செலவில் வாழ்ந்து வருவதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

#
ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்யும் நாட்டில் 40 கோடி பேர்கள் ஏழைகளாக இல்லையென்றால் தான் அதிசயம்



அஷ்ரஃப் 



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home