3 May 2013

2006/11 மும்பை வெடிகுண்டு தாக்குதல் வழக்கு! காவல் துறையின் முகமூடி அவிழ்ந்தது!!!


2006/11 மும்பை வெடிகுண்டு தாக்குதல் வழக்கு! காவல் துறையின் முகமூடி அவிழ்ந்தது!!!



2006ல் மும்பை தொடர்வண்டியில் வெடிகுண்டை வெடிக்க செய்தார்கள் என்று காவல் துறையால் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட
இஃப்திசாம் சித்திகீ,பைஃசல் சேக்,ஆசிஃப் கான்,கமால் சர்தாரி ஆகியோர்கள் வெடிகுண்டு வெடித்த நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்தார்கள் என்று ஏ.டி.எஸ்ஸின் வாதம் பொய் என்று நிறுபனமாகியது.
சர்ச் கேட் ரெயில் நிலையத்தில் இவர்கள் தான் குண்டுகளை வைத்தார்கள் என்று ஏ.டி.எஸ் குற்றம் சாட்டி இருந்தது.

இதனை மறுத்து குற்றம் சாட்டப்பட்ட பிரதிகளின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கான் அப்துல் வஹாப், ஆதாரமாக சமர்பித்த அவர்களின் அலைபேசி தொடர்பு இயக்க அலையை பரிசோதித்து உண்மையை அறிந்து கொண்ட நீதிமன்றம் இவர்கள் வெடிகுண்டு வெடித்த சமயமான ஜூலை 11 ம் தேதி 3.45 மணியில் இருந்து 5.20 மணிவரை வரையிலான நேரத்தில் சம்பவ இடத்தில் இல்லை என்பதனை உறுதிபடுத்தி உள்ளது.

தடை செய்யப்பட்ட சிமி அமைப்பின் மும்பை மாநில தலைவர் என குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட சித்திக்கி வெடிகுண்டு வெடித்த நேரத்தில் மீரட் ரோட்டில் இருந்தார் என்றும்

லஷ்கரே தொய்பா மும்பை தலைவர் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சேக் சம்பவ இடத்தில் இருந்து தொலை தூரத்தில் உள்ள பாந்த்ராவில் லக்கி ரெஸ்டாரண்ட்டில் இருந்தார் என்றும்

ஆசிப் கான் காண்டியாவில் அலுவலகத்தில் பணியில் இருந்தார் என்றும்

கமால் சர்தாரியோ வெடிகுண்டு வெடித்த சமயத்தில் பீகாரில் இருந்தார் என்றும் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மும்பைக்கு வருகை தந்து இருக்கவில்லை என்றும்

பிரதிகளின் வழக்கறிஞர் கான் அப்துல் வஹாப் தெரிவித்தார்.
இதில் மற்றொரு பிரதியான நவதீபின் விவரங்களை அலைபேசி நிறுவனம் இன்னும் சமர்பிக்கவில்லை.

தொடக்கம் முதலே மும்பை ஏ.டி.எஸ் பல கற்பனைக்கு எட்டாத வாதங்களை முன் வைத்து நீதிமன்றத்தில் நிறுபிக்க முடியாமல்
தோல்வி அடைந்து நீதிமன்றத்தின் கோபத்திற்கு ஆளாகியது.
தற்போது கூட,அலைபேசியை வேறு ஒருவரிடம் கொடுத்து விட்டு வெடிகுண்டை வைக்க சென்றார்கள் என்று ஏ.டி.எஸ் (பிடி)வாதத்துடன் முன்னெடுத்து சென்ற போதும் யாரிடம் கொடுத்துவிட்டு சென்றார்கள் என்ற நீதிமன்றம் கேள்வியை உயர்த்தியபோது ஏ.டி.எஸ்ஸால் பதிலளிக்க முடியவில்லை...
இந்த வழக்கின் மீதான விசாரனைகள் வரும் வாரங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது!!!


##ஒவ்வொரு வழக்கிலும் இசுலாமியர்கள் நிரபராதிகள் என்று நீதிமன்றத்தால் விடுதலையாகி வெளியே வருகின்றனர்.
இசுலாமியர்களை பிடிப்பதும் பின்பு அவர்களை விடுதலை செய்வதோடு அந்த வழக்குகள் என்ன ஆகின்றன என்று தெரியவில்லை?

*வெடிகுண்டுகளை வைப்பது யார்?
*வெடிகுண்டுகள் வெடிப்பதன் நோக்கம் என்ன?
*உண்மை குற்றவாளிகளை காவல்துறையால் ஏன் கைது செய்ய முடியவில்லை?என்ற கேள்விகளை ஒருவரும் உயர்த்துவதில்லை.
இது பற்றி பொது சமூகத்திற்கும் கவலை இல்லை சட்டம் ஒழுங்கின் பாதுகாவலர்களுக்கும் கவலை இல்லை.
பழி ஏற்க இசுலாமிய சமூதாயம் இருக்கிறது என்பதற்காக அப்பாவிகளை தொடர்ந்து வெடிகுண்டுகளுக்கு காவு கொடுக்கும் பயங்கரவாதிகளை மறைமுகமாக பொது சமூகம் ஆசிர்வதிக்கிறது என்றே குற்றம் சாட்டம் வேண்டும்.

மக்களை பிரித்தாளும் அரசியல்வாதிகள் அவர்களுக்கு துனை போகும் அதிகாரிகள் எதை பற்றியும் கவலைபடாத மக்கள் இவர்களை பகடை காய்களாக முன்வைத்து இறுதியில் அவர்களையே கொல்லும் பயங்கரவாதிகள்.............
இவர்களின் மீது பொது சமூகம் கோபம் கொள்ளாதவரை வெடிகுண்டுகள் வெடிக்க தான் செய்யும் அதன் பழி இசுலாமியர்களின் மீது விழத்தான் செய்யும்!!!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home