9 May 2013

இவர்கள் எதிரிகள் அல்ல!


இவர்கள் எதிரிகள் அல்ல!

இஸ்லாத்தை அறியாத கோடிக்கணக்கான மக்கள் நம்மிடையே உள்ளனர்.

அவர்களில் சிலர் நாத்திகர்களாகவும் இருக்கலாம்; சிலர் அறிந்தும் புரிந்தும் இஸ்லாத்தின்பால் பகைமை பாராட்டுபவர்களாய் இருக்கலாம்.

ஆனால் பெரும்பாலான மக்கள் இஸ்லாத்தை அறியாதவர்களாவே இருக்கின்றார்கள் . ஒழுங்கான முறையில் இவர்களுக்கு சத்திய அழைப்பை எடுத்துரைத்தால் - இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினால் - அதனை மனமார மேற்கொள்பவர்களும் இருக்கின்றனர்.

*
பலர் இது நேர்மையான நியாயமான கருத்துதான்என்று ஆதரிக்கக் கூடியவர்களாய் உள்ளனர்.

*
சிலர் செயலளவில் அக்கொள்கையைப் பேண முடியவில்லை என்றாலும் அதன் வளர்ச்சிக்கு துணை போகக் கூடியவர்களாய் இருக்கின்றனர்.

*
இஸ்லாமியக் கொள்கையைக் கேட்டவுடன் கண்களில் நீர் மல்க, இதுதான் உண்மை; ஆனால் நம்முடைய சூழ்நிலை இதனை ஏற்றுக் கொள்ள அனுமதிக்கவில்லையே! என்று ஏங்கி நிற்பவர்களும் உண்டு.

*
திறந்த மனதுடன் இஸ்லாத்தை ஆராய வேண்டும்; பிறகு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கருதுபவர்களும் உண்டு.

-
இப்படி மக்களில் பல வகையினர் உள்ளனர். இவர்கள் அனைவரையும் ஒரே தட்டில் வைத்து எடை போட்டு விடக் கூடாது. இவர்கள் எல்லாருமே சத்தியநெறிக்கு எதிரிகள் என்றும் கூறி விட முடியாது.

ஆகவேம் பெறுப்புணர்வுடன் ஒவ்வொருவரின் நிலையையும் அறிந்து அவர்களின் மனோபாவங்களைப் புரிந்து நாம் சத்திய அழைப்பை எடுத்துரைக்க வேண்டும்.

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர் வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன். அல்குர்ஆன் 16:125

பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நீர் பொறுமையாக இருப்பது அல்லாஹ் விடமே உள்ளது. அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! அவர்கள் சூழ்ச்சி செய்வதால் சஞ்சலத்துக்கும் ஆளாகாதீர்!
16 :127



 அழகிய அழைப்பு பணியை ஆரம்பிக்கும் அடிச்சுவடு இது... இஸ்லாத்தை முழுதாக தெரியாதவர்க்கு எடுத்துவைக்கும் அரிச்சுவடி இது

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!அல்குர்ஆனின் வழிகாட்டுதல் நபியின் வாழ்க்கை!இந்த இரண்டையும் பின் தொடர்வது ஒரு முஃமினின் வாழ்க்கை! இதை காணும் இறைநம்பிக்கை அல்லாதவருக்கு ஒரு உதாரணம்!இஸ்லாம் தூய்மையானது!இன்ஷாஹ் அல்லாஹ் நம்மையும் வழி தவறாமலும்!வழி தவறியவர்களையும்!நேர்வழி அறியாதவர்களையும்,நேர் வழி செலுத்துவானக ஆமீன்!








அஷ்ரஃப் 



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home