நடைமுறையில் உள்ள மிக மோசமான துஆவும் அதன் பொருளும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு
......
இந்த பதிப்பை தெளிவாக நமக்கு வழங்கிய சகோதரர் அப்துல் ஹமீத் அவர்களுக்கு அல்லாஹ் பேரருள் புரிவானாக........!
திருமண வைபவங்களில் இன்று மிக முக்கியமாக ஓதப்பட்டு வரும் “”நபிமார்களைப் போல் வாழ்க” என்ற வாழ்த்துத் தொடரின் பின்னணியைப் பலரும் புரியாது ஓதி அதற்கு ஆமீன் கூறி வருவதைப் பார்க்கிறோம். அதை ஓதாவிட்டால் திருமணமே கூடாது என்ற ஒரு மாயையே மக்களிடையே ஏற்படுத்தி விட்டனர். ஓதித்தான் தீர வேண்டுமென பிடிவாதம் பிடிப்போர் “அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம் வஹவ்வா வநூஹ் வ பாரிஸா வ இப்றாஹீம் வஸாரா வயூஸுஃப் வ ஸுலைஹா …” இவர்களைப் போல் வாழ்க என்ற வாழ்த்துவதின் பின்னணியைக் கவனியுங்கள்.
## 1. நபி ஆதம் ஹவ்வா போல் வாழ்க!##
1. ஆதமும் ஹவ்வாவும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
2. இறைவன் தடுத்த சுவர்க்கத்துக் கனியை உண்டத ற்காக இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள்.
3.அதனால் சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு வீசப் பட்டார்கள்.
4.பின்னர் கணவனும் மனைவியும் பல்லாண்டுகள் பிரிந்து வாழ்ந்தார்கள்.இந்த மணமக்களும் துன்பத்திற்கும், இறைக் கோபத்திற்கும் ஆளாகி பிரிந்து வாழ வேண்டுமா?
## 2.நபி நூஹும் ஃபாரிஸாவும் போல் வாழ்க! ##
நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்; எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்; எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை; இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.
அல் குர்-ஆன் 66:10.
இவ்வசனத்தின் மூலம் நூஹ் நபி, லூத் நபி இருவரின் மனைவியர் இருவருமே நரகவாசிகள் என மிகத் தெளிவாகவே குர்ஆன் அறிவித்து விட்டது. இவ்வசனத்தில் இரு நபிமார்களின் இரு மனைவியரும் இறை மறுப்பாளர்களாக இருந்து தங்கள் கணவர்களுக்குத் துரோகம் செய்து நரக வாசியாகவும் ஆகிவிட்டதை இறைவன் உலகோருக்குப் பிரகடனப்படுத்துகிறான். இதைத் தெரிந்தும் நரகவாசியான மனைவியோடு வாழ்வது போல் வாழ்க என வாழ்த்தலாமா?
## 3. நபி இப்றாஹீம், ஸாரா போல் வாழ்க! ##
இப்றாஹீம் நபி-ஸாரா தம்பதியருக்கு நீண்ட நெடுங்காலமாகவே (முதுமை வரை) குழந்தைப் பேறே இல்லாதிருந்தது.
அதற்கு அவர் கூறினார்: “ஆ கைசேதமே! நான் முதியவளாகவும், இதோ என் கணவர் முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்தான்!”
என அல்குர்ஆன் 11:72 கூறுகிறது.
வயது முதிர்ந்து கிழப்பருவம் வரும் வரை குழந்தைப்பேறே இல்லாதிருந்ததைத்தெரிந்தும் இவ்வாறு வாழ்த்தலாமா? எந்தத் தம்பதியர் வயது முதிரும்வரை குழந்தைப் பேறில்லாதிருப்பதை விரும்புவர்? ஆசையோடு எதிர்பார்க்கும் புதுமணத் தம்பதியரை இப்படி வாழ்த்தலாமா?
## 4. நபி யூஸுஃப்-ஸுலைஹா போல் வாழ்க! ##
1. குர்ஆனிலோ ஹதீஸிலோ ஸுலைஹாவைப் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை. இந்த ஸுலைஹா யார்?
2. அறிமுகமே இல்லாதவரை மனைவியாக்க முன் வந்தது எப்படி?
3. குர்ஆனில் யூஸுஃப் நபியை அடிமையாக வளர்த்தவர் தான் பிற்காலத்தில் நபியின் மனைவியாக சித்தரிக்கப்படுகிறார். அது எப்படி?அல்குர்ஆனே அந்த பெண் தவறு செய்து விட்டார் என கூறுகிறது. தவறு செய்தவள், முன்னைய கணவனுக்குத் துரோகம் செய்தவள் நபியின் மனைவியாக முடியுமா?
4.இந்த பெண்ணை நபியுடன் இணைத்து ஓர் காதற் காவியம் இயற்றியது அபாண்டமான பழியல்லவா?
5. திருமணம் நடந்ததாக ஆதாரமே இல்லாத பொழுது - அவர்களை ஒரு தம்பதியாக குறிப்பிட்டு வாழ்த்தலாமா? இது முறையா?
தீமை செய்த ஒரு பெண்ணை ஒரு நல்லடியாருக்கு அதுவும் ஒரு நபிக்கு மனைவியாக்க வேண்டுமென்ற நிர்பந்தம் என்ன?
6. இன்னொருவரின் மனைவியை அதுவும் வயது முதிர்ந்த கிழவியை கன்னிப் பெண்ணாக உருமாற்றி திருமணம் செய்து வைக்க வேண்டுமென்ற அவசியம் என்ன?
7. அப்படி ஒரு அதிசயம் நடந்திருந்தால் அதை அல்லாஹ் குர்ஆனிலேயே அறிவித்திருப்பானே?
8. அஹ்ஸனுல் கஸஸ்-அழகிய வரலாறு என்று கூறி ஒரு அத்தியாயம் முழுவதிலும் யூசுஃப் நபியின் அற்புத வரலாற்றை சுவைபட பிறப்பு முதல் இறுதி வரை கூறிய இறைவன் இதை எவ்வாறு கூறாது விட்டிருப்பான்?
## 5.நமது நபிகளாரின் பெயரை குறிப்பிட்டு வாழ்த்தும்போது ##
அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன முஹம்மதின் வஹதீஜதுல் குரா, வஆயிஷத்தத் துஹ்ரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்//
....அவர்களின் மனைவிமார்களாக கதிஜா (ரலி) அவர்களையும் ஆயிஷா (ரலி) அவர்களின் பெயரை மட்டும் குறிப்பிடுகிறார்கள் ...மற்ற மனைவிமார்களின் பெயரை குறிப்பிடுவதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த மனைவிக்கும் குறை வைக்கவில்லை எல்லோரிடமும் நடு நிலையாக நடந்து கொண்டார்கள்.....என்பதையும் நாம் நன்றாக அறிவோம்.
இப்படி ஒரு வாழ்த்து தேவை தானா??
இவ்வளவு பிரச்சனைக்குரிய விசயத்தை கட்டாயமாக அதுவும் மகிழ்ச்சிகரமான மண விழாவில் புதுத் தம்பதியை வாழ்த்துவதற்காகக் கூறித்தான் ஆக வேண்டுமா? மார்க்க ஞானமுள்எவரும், மார்க்கத்தைத் தெரிந்து கொள்ள விரும்புபவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
அல்லாஹ்வின் தூதரால் கற்று தரப்படாத இந்த துவாவை ஓதினால் புதுமையான ஒரு செயலை செய்த குற்றமும் வந்து சேரும் என்பதை நினைவில் நிறுத்தி. மணமக்களை வாழ்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் கற்று தரப்பட்ட இரத்தின சுருக்கமான துவாவை ஓதி பிரார்தித்தாலே அல்லாஹ்வின் அருள் அவர்களுக்கு கிட்டும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் கற்று தரப்பட்ட துவா....!
பாரகல்லாஹுலக வ பாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீகைர்’-
அல்லாஹ் உங்களுக்கு உள்ளும் புறமும் அருள் புரிந்து நல்லக் காரியங்களில் உங்கள் இருவரையும் ஒன்றிணைத்து வைப்பானாக…
அபூஹு ரைரா(ரழி) அறிவிக்கும், இந்த ஹதீஸ் அஹ்மத், அபூ தாவூத், திர்மிதி, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
அல்லாஹ் நன்கறிந்தவன்.....!
ஜஸாக்கல்லாஹ் :- @ தர்கா வழிகேடு @
மார்க்கத்திற்கு முரண் இல்லாத செய்திகளை அறிந்து கொள்ளhttps://www.facebook.com/waikarai

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home