11 June 2013

ஒசாமா பின்லேடனை, கொல்லப் பயன்படுத்தப்பட்ட, "நைட்விஷன்' டெக்னாலஜியை கண்டுபிடித்த, அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு, அமெரிக்க அரசின் சார்பில், "சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ஜ்' விருது வழங்கப்பட்டுள்ளது.


ஒசாமா பின்லேடனை, கொல்லப் பயன்படுத்தப்பட்ட, "நைட்விஷன்' டெக்னாலஜியை கண்டுபிடித்த, அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு, அமெரிக்க அரசின் சார்பில், "சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ஜ்' விருது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், ஆண்டு தோறும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும், சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கும், அந்நாட்டு அரசு, "சாம்பியன்ஸ் ஆப் சேன்ஜ்' விருது வழங்கி, கவுரவிக்கிறது.இந்த ஆண்ட, அமெரிக்க வாழ் இலங்கை தமிழரான, சிவலிங்கம் சிவனாதனுக்கு, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச பயங்கரவாதியான, ஒசாமா பின்லேடனை கொல்ல மேற்கொள்ளப்பட்ட, "நைட்விஷன்' தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக இந்த விருது, இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர், யாழ்பாணத்தில் உள்ள, சாவகசேரியில் பிறந்தவர். தன் உயர் கல்விக்காக, 1982ம் ஆண்டு அமெரிக்கா சென்ற சிவனாதன், இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்று, இலினாய்ஸ் பல்கலையில், முனைவர் பட்டமும் பெற்றார்.

அதன் பின், அதே பல்கலையில் பேராசியராக பணியாற்றிக் கொண்டே, நுண் இயற்பியலில் தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார். இவரது ஆராய்ச்சியின் பயனாக, மிகக்குறைந்த ஒளியையும் லட்சம் மடங்கு பெருக்கிக் காட்டும் தொழில் நுட்பத்தை கண்டறிந்தார். அமெரிக்க படையினர், இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தியே, அமாவாசை இரவிலும், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா மீது தாக்குதல் நடத்தி அவனை கொன்றனர்.இதற்காக, இலங்கைத் தமிழரான சிவனாதனுக்கு, "சாம்பியன்ஸ் ஆப் சேன்ஜ்' விருது வழங்கப்பட்டுள்ளது.இவ்வளவு நாட்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த உண்மையும், இந்த விருது வழங்கும் விழாவில் தான் வெளிப்பட்டது.

Thanks Dinamalar.


அஷ்ரஃப் 


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home