உடல் பருமனை குறைக்க....
உடல் பருமன்
கொண்டவர்கள், தங்களையும் அறியாமல் தங்களது உணவுக்
கட்டுப்பாட்டை மீற நேரிடலாம். அத்தகைய புறச் சூழல்களை இனம் கண்டு தவிர்ப்பது, உடல் பருமனைக் குறைப்பதற்கான முயற்சிக்குப்
பக்கபலமாக அமையும்.
குறிப்பாக, உடல் பருமன் கொண்டவர்கள், டிவி முன்னால் உட்கார்ந்து சாப்பிடுவதை அறவே தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில், டிவி-யின் மீதே நம் மொத்த கவனமும் குவிந்து விடுவதால், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்கிற அளவே தெரியாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது. எப்போதும், சாப்பிடும் உணவின் அளவை, ருசியை அறிந்து ருசித்துச் சாப்பிடுவதே நல்லது.
நண்பர்களையோ அல்லது சொந்தங்களையோ வெளியில் சந்திக்க முடிவு செய்கிறீர்கள். நல்ல விஷயம்தான். அந்தச் சந்திப்பை உணவுக் கூடங்களில் வைத்துக் கொள்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஏனெனில், உணவு கூடத்தின் சூழலும், நண்பர்களின் நெருக்கமும், உங்களது டயட்டை மறக்கடித்துவிடும். தவிர ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய்யும், சுவைக்காக சேர்க்கப்படும் மசாலா வகைகளும், உங்களுக்கு அதிக கலோரியை அள்ளி வழங்கிவிடும் என்பதை மறக்காதீர்கள்.
நண்பர்கள், உறவனர்கள் வீட்டுக்குச் செல்லும்போது இனிப்புகளைத் தவிர்த்து பழங்களை வாங்கிச் செல்லுங்கள். அவர்கள் உங்களின் வீட்டுக்கு வரும்போதும், இனிப்புகளுக்குப் பதிலாக பழங்களை வாங்கி வரும்படி நாசூக்காகச் சொல்லுங்கள். இனிப்பில் கெட்ட கொழுப்பு வகையான பூரிதமாகாத கொழுப்பு அதிகமாக உள்ளது. எனவே தவிர்ப்பது நல்லது.
வேலைப்பளு, பயணம் போன்ற காரணங்களால், சில சமயங்களில் சரியான நேரத்துக்கு உங்களால் சாப்பிட இயலாமல் போகலாம். அப்போது பிஸ்கட், பழம், ஜூஸ் அல்லது நீராகாரம் என எதாவது ஒன்றை சாப்பிட்டுக் கொள்ளலாம். இதனால் அடுத்த வேளை அதிக அளவு உண்பதைத் தடுக்க முடியும்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home