6 June 2013

இஸ்லாம் பெண் கல்வியை தடுக்கிறதா?



*ஒருமுறை ஒரு சஹாபிய பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எப்போதும் உங்களை சுற்றி ஆண்களே இருக்கிறார்கள் அதனால் எங்களால் உங்களை நெருங்கி வந்து மார்க்கத்தில் எங்களுக்கு தோன்ற கூடிய சந்தேகத்தை கேட்க முடிய வில்லை என சொன்னதும் நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு என்று வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கினார்கள் என்பது இஸ்லாம் பெண் கல்வியை தடுக்கிறது என்று கூப்பாடு போடும்... ஒரு சிலருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.. 

*
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் கல்வி ஞானத்தின் காரணமாக அவர்கள் மார்க்கம் குறித்த அடிப்படை சட்டங்கள் ஷரியத் சட்டங்கள் ஆகியவற்றை நன்கு அறிந்தவர்களாகவும் ,நல்ல ஆலோசனை சொல்ல கூடியவர்களாகவும் ,நன்கு விவாதம் செய்ய கூடியவர்களாக விளங்கினார்கள்.அவர்கள் மூலமாக நமக்கு கிடைத்த நபி மொழிகளின் எண்ணிக்கை 2210 ஹதீஸ்கள் ஆகும்.(நாயகம் (ஸல்) அவர்கள் தன் மனைவி கல்வி அறிவில் சிறந்து இருப்பதை தடை செய்யவில்லை .

*
அலீ (ரலி) அவர்களது சந்ததியில் வந்த நஃபீஸா எனும் பெண் ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தார்..அவரின் போதனை வகுப்புகளில் இமாம் ஷாபிஈ (ரஹ்)அவர்களும் கலந்து கொண்டு அறிவை பெற்றுள்ளார்.

*
பாக்தாத்தில் வாழ்ந்த ஷெய்கா சுஹதாஅவர்கள் இலக்கியம் அணியிலக்கணம் ,கவிதை,போன்றவற்றில் தேர்ச்சி பெற்று திகழ்ந்தார்.

*
இது எல்லாவற்றுக்கும் மேலாக பதினெட்டாம் நூற்றாண்டில் நைஜீரியாவில் ஒரு மிகபெரும் கல்வி புரட்சி ஏற்பட காரணமான, முஸ்லிம் பெண்களுக்கு தன் வாழ்க்கையை அசத்தலான முன்னுதாரணமாக்கிய நானா அஸ்மா என்ற புரட்சிப்பெண்... !!

*
இவ்வாறு வாழ்வில் பல்வேறு துறைகளில் கற்று தேர்ச்சி பெற்று ஜெயித்து காட்டிய இஸ்லாமிய பெண்களின் எண்ணிக்கையை வரையறுத்து இவ்வளவு தான் என்று அறிதியிட்டு கூற முடியாது.. 
கல்வியின் மூலமாக அவர்கள் சமூகத்திலும் அவர்களால் முடிந்த பல்வேறு பணிகளை மார்க்கத்தின் வரைமுறையில் வாழ்ந்து காட்டி உள்ளார்கள்..

உலகில் வேறு எந்த மதமோ,அல்லது சமுதாயமோ வழங்கிராத சிறப்பும்,மதிப்பும்,மரியாதையும்,கண்ணியமும்,உரிமையும்,இஸ்லாத்தில் பெண்களுக்கு உண்டு ..

இதில் கல்வி கற்பது மட்டும் எப்படி விதி விலக்காகும்..? இங்கு கல்வி கற்பதில் ஆண் என்றும் பெண் என்றும் எந்த பேதமும் இல்லை..! 
ஆணுக்கு கல்வி கற்க எந்தளவுக்கு உரிமை இருக்கிறதோ அதே அளவு சம உரிமை பெண்களுக்கும் உண்டு!. 
குர் ஆனில் எங்கும் பெண்கல்வியை மறுத்த்தற்கான வசனம் இருக்காது. அதே போல மார்க்க கல்வி என்றும் உலக கல்வி என்றும் எந்த இடத்திலும் பிரித்து காட்டப்பட வில்லை.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home