9 June 2013

உலகை அச்சுறுத்த வரும் தஜ்ஜால் பற்றிய வர்ணனை

* குறிப்பு :- படம் அடையாளத்திற்காக மட்டுமே .! *

*** உலகை அச்சுறுத்த வரும் தஜ்ஜால் பற்றிய வர்ணனை ****

###########################################

பெயர் ; தஜ்ஜால்

புனைப்பெயர் ; மஸீஹ் தஜ்ஜால்

குடும்பம் ; குழந்தை பிறக்காத மலடன்

தோன்றும் காலம் ; இறுதி நாளின் சமீபம்

தோன்றும் இடம் ;மதீனா நகரின் கீழ்த்திசையில் ஈராக், சிரியா

நாடுக்களுக்கிடையே உள்ள "குரஸான்"
(ஆப்கானிஸ்தான்) என்னும் பகுதியில்

அவனது இனம் ; யூத இனம்

வாழும் காலத்தின் அளவு ; நாற்பது நாட்கள் விளக்கம் ; அவன் வாழும் நாற்பது
நாளில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றும்,
இன்னொரு நாள் ஒரு மாதம் போன்றும்,
மற்றொரு நாள் ஒரு வாரம் போன்றும்
இருக்கும்.மீதமுள்ள நாட்கள் சாதாரண
நாட்களைப் போன்றும் இருக்கும் .

அவனது தோற்றம் ;

1. திடகாத்திரமான இளைஞன்,
சிவப்பானவன் .

2. மரக்கிளை போன்று அடர்த்தியான
சுருட்டை முடி உடையவன் .

3. ஒரு கண் ஊனமுற்று, மற்றொரு கண்
நிலை குத்திய நிலையில் பச்சை நிறக்
கண்ணாடி போன்று பார்வை உடையவன் .

4. குட்டையானவன், குண்டானவன் .

5.அதிக இடைவெளி உள்ள கால்களைக்
கொண்டவன்.

6. நெற்றியில் காஃபீர் என எழுதப்பட்டவன்
அவன் பிரவேசிக்கும் இடம் ; மக்கா, மதீனா ஆகிய இடங்களைத் தவிர
உலகின் அனைத்து பகுதிகளும்

அவனது அதிசய வித்தைகள் ;

1. பொய்யான சுவனம் நரகம் வைத்திருப்பான் .

2. சுவையான நீர் நதிகளும் நெருப்பு நதிகளும்
வைத்திருப்பான் .

3. மலை போன்ற ரொட்டிகளை (உணவுப்
பொருட்களை) வைத்திருப்பான்.

4. மழை பொழிய வைப்பான்.

5. பிறவிக் குருடு மற்றும் வெண்குஷ்ட
நோய்களை குணப்படுத்துவான்.

6.ஒருவனை ஒரு முறை மட்டும் கொன்று விட்டு
மீண்டும் உயிர்ப்பிப்பான்(மறுமுறை செய்ய
இயலாது)

7. மேய செல்லும் கால்நடைகளை ஒரே பகலில்
கொழுக்க வைப்பான்.

8. பூமியில் புதையல் உள்ள இடங்களை
அறிந்திருப்பான்.

அவனது கொள்கை ;

தானே இறைவன் என வாதிட்டு,
மக்களை ஈமான் கொள்ளச் செய்வது.

அவனது மரணம் ;

இஸ்ரேலின் தலைநகரான டெல்
அவிவ்வுக்கு அருகில் உள்ள லுத்து
என்னும் இடத்தில் வைத்து மர்யம்
(அலை) அவர்களின் மகன் ஈஸா நபி
அவர்கள் அவனைக் கொள்வார்கள்
************************************************

சகோதரர்கள் அனைவருக்கும் என்னுடைய வேண்டுகோள், தினமும் உங்களின் தொழுகையில் அல்லாஹ்விடம் தஜ்ஜாலின் தீங்கில் இருந்து பாதுகாப்பு தேடுங்கள், அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக !

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home