23 October 2013

இலவச மருத்துவ ஆலோசனைக்கு 104.....!!



108 எண்ணை அழைத்தால் இலவச ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பது போன்று இலவச மருத்துவ சேவையும் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

எங்கிருந்தும் இலவச மருத்துவ ஆலோசனை பெறக்கூடிய வகையிலான இத்திட்டம் இப்போது சோதனை முறையில் இருக்கிறது. இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் முழு நேரச் சேவை வழங்கப்பட இருக்கிறது.

இச்சேவையில், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை '104' என்ற எண்ணை டயல் செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். எந்த நோயை குறித்த ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். அலோபதி மட்டுமல்லாமல் ஹோமியோபதி மற்றும் சித்த மருத்துவம் முறைகள் குறித்த ஆலோசனைகளும் கிடைக்கும்.

இதற்கென சென்னையில் அழைப்பு மையம் அமைக்க்ப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் இச்சேவை தற்போது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வழங்கப்படுகிறது. இச்சேவை தமிழக அரசால் முறைப்படி தொடங்கப்பட்ட பின், பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் இச்சேவை கிடைக்கும். இது தொடர்பாக சேவை மையத்தினர் தெரிவிக்கும் போது, தினசரி 300 அழைப்புகள் வருவதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இச்சேவைகள் மூலம் என்னென்னத் தகவல்களை பெற இயலும் என்று விபரங்களை கேட்டு வருகிறது" என்று கூறினர்.

இச்சேவை எண்ணில் பேசப்படும் அனைத்து பேச்சுக்களும் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home