சதீதுத்தீன் பாகவி அவர்கள் ஜும்மா சொற்பொழிவுகள.
சதீதுத்தீன்
பாகவி அவர்கள் ஜும்மா சொற்பொழிவுகள.
http://www.adyaralim.com/jumma.php
http://www.adyaralim.com/jumma.php
அடையார் ஆலிம் என்று இத்தளத்தில் குறிப்பிடப்படும் மவ்லவி, ஹாஃபிழ், சதீதுத்தீன் பாகவி அவர்கள் 1971 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிறந்தார்கள்.இவர்களின் பெற்றோர்களான முஹம்மது இப்ராஹீம்-ருகையா பீவி ஆகியோரின் சொந்த ஊர் திருப்பூர் அருகே உள்ள வடுகன்காளிபாளையம் என்னும் கிராம்மாகும்.
சதீதுத்தீன் பாகவி அவர்கள் +1 வரை மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்த பின்னர் கோவை மன்பஉல் உலூம் அரபிக் கல்லூரியில் இரண்டாண்டுகளில் திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்தார்கள்.
இதே கல்லூரியில்மேலும் இரண்டாண்டுகளும் ஈரோடு தாவூதிய்யா அரபிக்கல்லூரியில் மூன்றாண்டுகளுமாக மவ்லவி ஆலிம்படிப்பின் ஏழு ஆண்டுகளில் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்தபின் தென்னகத்தின் தாய்க்கல்லூரியான அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத்தில் மேலும் இரண்டண்டுகள் படித்து மவ்லவீ-ஆலிம் பாகவி பட்டம் பெற்றார்.
மீண்டும் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் முதுகலைப் பட்டப் படிப்புக்காக மேலும் இரண்டாண்டுகள் பயின்று “ஃபாஜில்” பட்டம் பெற்றார்.இதனிடையே அரபிக் கல்லூரியில் பயின்று கொண்டே சென்னைப் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர மாணவராக தன்னை இணைத்துக் கொண்டு “அஃப்ஜலுல் உலமா” பட்டமும், தொடர்ந்து நவீன அரபியில் முதுகலைப் பட்டமும் பெற்ற அவர் அதன்பின் எம்.ஃபில் பட்ட்த்திற்காக ஹதீஸ் கிரந்தமான “ஜாமிஉத் திர்மிதீ” யில் காணப்படும் ஹதீஸ் குத்ஸிகளை ஆய்வு செய்து “ஆய்வியல் நிறைஞர்” பட்டமும் பெற்றார்.
தற்சமயம் சென்னைப் பல்கலையில் “ உலகப் புகழ்பெற்ற ஹதீஸ் நூல்களான ஸஹீஹுல் புஹாரீ, ஸஹீஹுல் முஸ்லிம் உடைய விரிவுரைகளைக் குறித்து கடந்த இரண்டாண்டுகளாக (”முனைவர்)ஆய்வு செய்து வருகிறார்.
பணி:
சென்னை அடையார் பள்ளியின் தலைமை இமாமாகவும்,சென்னை,பனையூர் நூருல் ஹிதாயா ஆங்கிலோ அரபிக் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றி வருகிறார்.
திண்டுக்கல் ஜாமிஆ தய்யிபா அரபிக் கல்லூரியின் கவுரவ முதல்வராகவும், சென்னை கிழக்குக் கடற்கரை சாலை மஸ்ஜிதுன் நூர் பள்ளியில் அமைந்துள்ள “ஜாமிஆ தய்யிபா இஸ்லாமியக் கல்லூரியின் வருகைதரு முதல்வராகவும் செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்திலும் மலேசியா,தாய்லாந்து,துபாய்,அபுதாபி, ஷார்ஜா குவைத்,உள்ளிட்ட வெளிநாடுகளிலும் மார்க்க சொற்பொழிவுகள்,ஷரீஅத் மாநாடுகள் ஆகியவற்றில் பங்கேற்றுப் பேசியுள்ளார்.
http://www.adyaralim.com/
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home