குர்பானி
குர்பானியின்
நோக்கம்
இந்த மாபெரும் தியாகத்திலிருந்து படிப்பினைகளை பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதத்தில் ஆடு, மாடு ஒட்டகங்களை அறுத்துப் பலியிடுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். குர்பானியின் நோக்கத்தைப் புரியாத பலர் புகழுக்காக இந்த வணக்கத்தை நிறைவேற்றுகிறார்கள். ஒரு வருடம் கொடுத்து அடுத்த வருடம் கொடுக்காவிட்டால் மற்றவர்கள் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறார்கள். படைத்தவனின் திருப்தியை விட மனிதர்களின் திருப்திக்கே முன்னுரிமை தருகிறார்கள். நம்மிடம் இறைவன் எதை மிக முக்கியமாக எதிர்பார்க்கிறானோ அதில் தவறிழைத்து விடுகிறார்கள். அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!
அல்குர்ஆன் (22 : 37)

குர்பானி கொடுக்க நாடுபவர்
"நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும்வரை முடியையும் நகத்தையும் வெட்ட வேண்டாம்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா , பைஹகீ.)
"குர்பானி கொடுக்கும் பிராணிகள் ஆரோக்கியமாகவும், ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும். தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறைவு, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் சதைப்பற்று இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மதீ ,அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)
பிராணிகளின் கண்களையும், காதுகளையும், கவனித்துத் தேர்வு செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். "சிறிதளவு காது வெட்டப்பட்டவை, காது கிழிக்கப்பட்டவை, காதில் துவாரமிடப்பட்டவை ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது" என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (திர்மிதீ அஹ்மத், அபூதாவூத், நஸயீ).
குர்பானி கொடுக்கும் நாட்கள்
"தஷ்ரிக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரிய நாட்களாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தாரகுத்னி, இப்னு ஹிப்பான், அஹ்மத்).

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home