"மோடியை எதிர்க்கும் சென்னை பொதுக்கூட்டம் – ஆதரவு தாரீர் !
அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
இராமனுக்கு கோயில் கட்டுவதுதான் தேசத்தின் தலையாய பிரச்சினை என்று கூறி பாபர் மசூதியை இடித்து, நாடு முழுவதும் இந்து மதவெறியைத் தூண்டி, 1998-இல் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது பாரதிய ஜனதா கட்சி. இன்றோ, அயோத்தி தொகுதியில் கூட பாஜக வால் வெற்றி பெற முடியவில்லை.
வரவிருக்கும் தேர்தலில் இராமனைக் காட்டி ஓட்டு வாங்க முடியாது என்பதால், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சிங்காரித்து தேசிய நாயகனாக சித்தரிக்கிறது பாரதிய ஜனதா கட்சி. 2009-ல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நடத்திய ராஜபக்சேவைப் போல, 2002-ல் குஜராத் முஸ்லிம் மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிதான் மோடி. இந்த உண்மையை மறைத்து, குஜராத்தில் பாலும் தேனும் ஆறாக ஓடுவது போலவும், மோடியைப் பிரதமராகி விட்டால், மறுநாள் இந்தியா வல்லரசாகி விடும் என்றும் ஒரு மாயை திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது.
modi-rajapakse
மன்மோகன் அரசின் தனியார்மயக் கொள்ளைகள், ஊழல்கள், விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அதிருப்தியுற்றிருக்கும் மக்கள் பலர் இந்தப் பொய்ப் பிரச்சாரத்துக்குப் பலியாகியிருக்கிறார்கள். ஆதாரபூர்வமான விவரங்களுடன் மோடியின் முகமூடியை அகற்றி உண்மை முகத்தை மக்களுக்குக் காட்டுவதுதான் இந்தப் பொதுக்கூட்டத்தின் நோக்கம்.
தமிழகத்தையும் மற்ற மாநிலங்களையும் காட்டிலும் குஜராத் முன்னேறிய மாநிலம் என்பது உண்மையா?
திறமையான நிர்வாகம், ஊழலில்லாத ஆட்சி, தடையற்ற மின்சாரம் – என்று குஜராத்தைப் பற்றிக் கூறப்படுபவையெல்லாம் உண்மையா?
அங்கே முஸ்லிம்களே மோடியை ஆதரிக்கிறார்கள் என்று கூறப்படுவது உண்மையா? குஜராத்தில் தலித் மக்களின் நிலை என்ன?
2002 முஸ்லிம் மக்கள் படுகொலையும் அடுக்கடுக்கான போலி மோதல் கொலைகளும் மோடிக்குத் தெரியாமல் நடந்தவையா? மோடியால் திரை மறைவிலிருந்து இயக்கப்பட்டவையா?
பாரதிய ஜனதா தனி ஈழத்துக்கு ஆதரவானதா? ராஜபக்சேவைத் தண்டிக்க குரல் கொடுக்குமா? கச்சத்தீவை மீட்டுத்தருமா? தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டிவிடுமா?
மோடியின் பொருளாதாரக் கொள்கை, மன்மோகனின் கொள்கையிலிருந்து வேறுபட்டதா?
மோடி என்ற பலூனை ஊதிப் பெரிதாக்குபவர்கள் யார்? டாடா, அம்பானி, மித்தல், அதானி, பிர்லா போன்ற தரகு முதலாளிகள் மோடியைப் பிரதமராக்க வேண்டும் என்று துடிப்பது ஏன்?
விடை காண்போம், வாருங்கள்!
00 இந்து மதவெறி பாசிஸ்டு இந்தியாவின் இராஜபக்சே மோடியின் முகமூடியைக் கிழித்தெறிவோம்! பொதுக்கூட்டம்
நேரம் : 18.10.2013, வெள்ளி மாலை 6 மணி இடம் : எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகில், சென்னை. தலைமை : தோழர் முகுந்தன், தலைவர், பு.ஜ.தொ.மு சிறப்புரை : தோழர் மருதையன், பொதுச்செயலர், ம.க.இ.க புரட்சிகர கலைநிகழ்ச்சி ம.க.இ.க வின் மையக்கலைக்குழு மக்கள் கலை இலக்கியக் கழகம் புரட்சிக மாணவர் இளைஞர் முன்னணி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பெண்கள் விடுதலை முன்னணி
00
நரேந்திர மோடி 18.10.2013 அன்று சென்னை வருகிறார். அருண் ஷோரி எழுதிய ஒரு நூலை வெளியிடவிருக்கிறார். நிகழ்ச்சியில் சோ, அருண் ஷோரி ஆகியோர் பங்கேற்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதே நாளில் நமது பொதுக் கூட்டமும் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் மோடி எதிர்ப்பை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் பற்றி கூற வேண்டியிருக்கிறது.
நரேந்திர மோடியை தங்களது பிரதமர் வேட்பாளர் என்று பாரதிய ஜனதா கட்சி அறிவிப்பதற்கு வெகு காலம் முன்னரே தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல் அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கி விட்டது.
“குஜராத் படுகொலைக்கு மோடியைக் குற்றம் சுமத்த முடியாது” என்று முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ராகவன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு சமர்ப்பித்த அறிக்கை, திருட்டுத்தனமாகவும் சட்ட விரோதமாகவும் சோ மற்றும் குருமூர்த்தியின் பார்வைக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட விசயம் அம்பலமான போது, குஜராத் கொலை வழக்குகளை முறியடிப்பதில் தமிழ்நாட்டு குல்லுக பட்டர்கள் ஆற்றிய பாத்திரம் அம்பலமானது.
பிறகு, மோடி பிரதமராவதற்கு அதிமுக ஆதரவு கொடுக்க வேண்டும் என்று துக்ளக் ஆண்டு விழாவில் சோ ஜெயலலிதாவுக்கு பகிரங்கமாகவே வேண்டுகோள் விடுத்தார். துக்ளக் மற்றும் குமுதம் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவரும் மோடி புராணம் அனைவருக்கும் தெரியும்.
தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு மரபையும், பெரியாரையும் வீழ்த்துவதற்கு தமிழ் அவதாரம் எடுக்க வேண்டியது அவசியம் என்பதைப் புரிந்து கொண்டு, தினமணி வைத்தியநாதன் ஆற்றி வரும் “தமிழ்த் தொண்டு”, அர்ஜுன் சம்பத் போன்ற பேரறிஞர்கள் தினமணியில் பெற்று வரும் முக்கியத்துவம் ஆகியவை தனி.
ஆர் எஸ் எஸ் இன் பத்திரிகையான ஆர்கனைசரின் ஆசிரியர் தருண் விஜய் எம்.பி, தமிழின் பெருமை குறித்து திடீரென்று மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசுவதும், தமிழை இந்தியாவின் இரண்டாவது ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்று கூறுவதும் மேற்படி “தமிழ் ஆர்.எஸ்.எஸ் புராஜெக்ட்” சார்ந்த விடயங்களே.
அதே நேரத்தில், தில்லைக் கோயிலின் சிற்றம்பல மேடையில் தமிழ் பாடக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கும் சுப்பிரமணியசாமியும் மோடியை பிரதமராக்குவதில் முன் நிற்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்ல, ராஜபக்சேவின் நண்பரும், புலிகளின் எதிரியுமான சுப்பிரமணிய சாமியும், தீவிர புலி ஆதரவாளர்களான வைகோ, நெடுமாறன், தமிழருவி மணியன் போன்றோரும் ஒரே மேடையில் நின்று மோடிக்கு ஜே போடும் காட்சியையும் தமிழகம் காணக்கூடும்.
அதிகம் விவரிக்கத் தேவையில்லை. இந்துத்துவ அரசியல் பேசி தமிழகத்தில் கால் ஊன்ற முடியாத பாரதிய ஜனதாவையும் மோடியையும், கேடு கெட்ட பிழைப்புவாதிகளும் துரோகிகளும் தம் முதுகில் சுமந்து வருகிறார்கள்.
அரசியல் சமூக அறிவோ ஈடுபாடோ இல்லாமல், சுய முன்னேற்றம், நுகர்வு மோகம் என்ற இரட்டை மயக்கங்களுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ள இளைய தலைமுறையோ அப்துல் கலாம் என்ற கோமாளிக்கு பதிலாக மோடி என்ற கொடூரனை மீட்பனாக கருதி மயங்கியிருக்கிறது.
இந்த அபாயகரமான சூழ்நிலையைப் புரிந்து கொண்டிருப்பதன் காரணமாகத்தான், மோடியின் முகமூடியைக் கிழிக்கும் பொதுக்கூட்டத்தை சென்னையிலும் நடத்துகிறோம்.
திருச்சியில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. யு டியூபில் மட்டுமே 25,000 பேருக்கு மேற்பட்டோர் தோழர் மருதையனின் உரையைக் கேட்டிருக்கின்றனர். பொதுக்கூட்ட உரைகளும் கலை நிகழ்ச்சியும் ஒளிக் குறுந்தகடாகவும் வெளியிடப்படுகின்றன. இருந்த போதிலும், மோடிக்கு ஊடகங்கள் மூலம் அளிக்கப்படும் விளம்பரத்தை ஒப்பிடும்போது இது மிக மிக குறைவே.
முதலாவதாக,
நமது பிரச்சாரத்தை விரிவாகக் கொண்டு செல்ல இயலாமைக்கு மிக முக்கியக் காரணம் நிதிப் பற்றாக்குறை. திருச்சி பொதுக்கூட்ட செலவின் கடனே அடைபடாமல் இருக்கும் போது, தற்போது சென்னையிலும் பொதுக்கூட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.
மீண்டும் மீண்டும் சாதாரண மக்கள் மத்தியில்தான் நிதி திரட்டுகிறோம். பொதுக் கூட்டத்திற்கான செலவு இலட்சங்களில் ஆகும் போது, இரண்டு ரூபாய் – ஐந்து ரூபாய் என உண்டியலேந்தி நிதி திரட்டுவது அதிக நேரம் பிடிப்பதாக இருக்கிறது. நிதி திரட்டும் பணியே பெரும்பகுதி நேரத்தை விழுங்கி விடுகிறது. பிரச்சாரம் என்ற வகையில் உண்டியல் ஏந்தி மக்களிடம் நிதி வசூல் செய்வதை தொடர்ந்து செய்கிறோம்.
எனினும் குறுகிய காலத்தில் ஒரு பொதுக்கூட்டத்திற்கான செலவை வசூல் செய்ய வேண்டிய இந்த கடினமான நிலைமையைப் புரிந்து கொண்டு நன்கொடை அளிக்குமாறு உங்களிடம் கோருகிறோம். நீங்கள் அளிப்பது மட்டுமின்றி உங்கள் நண்பர்களிடமும் இதன் முக்கியத்துவத்தை உணர்த்தி நிதி பெற்றுத் தருமாறு கோருகிறோம்.
இரண்டாவதாக,
சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் தவறாமல் பொதுக்கூட்டத்திற்கு வாருங்கள். நண்பர்களை அழைத்து வாருங்கள். மதவெறியை எதிர்க்கும் மக்கள் பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள் என்று நிறுவுவது, எதிரியை முறியடிப்பதற்கு மிகவும் அவசியமானது. காங்கிரசு எதிர்ப்பு என்ற போர்வையில் மோடிக்கு காவடி எடுக்கும் பிழைப்புவாதிகளையும் சந்தர்ப்பவாதிகளையும் எச்சரிப்பதற்கும் அது அவசியமானது.
மூன்றாவதாக,
இந்து மதவெறிப் பாசிசம் என்ற இந்த அபாயத்தை புரிந்து கொள்ளாமல்,
மோடியின் என்னென்ன பொய்ப் பிரச்சாரங்களுக்கெல்லாம் மக்கள் பலியாகியிருக்கிறார்கள். எத்தகைய கருத்துகள் அவர்களிடம் நிலவுகின்றன. மோடியை நியாயப்படுத்துபவர்கள் என்ன கருத்துகளை முன்வைக்கிறார்கள்
என்பது பற்றி எங்களுக்கு மின் அஞ்சல் (vinavu@gmail.com) அனுப்புங்கள். பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் தோழர்களுக்கு அவற்றைத் தெரிவிக்கிறோம்.
கூட்டத்தின் வெற்றிக்கு உங்களுடைய ஆலோசனைகள் எதுவாயினும் தெரியப்படுத்துங்கள்.
நன்கொடை அளிப்போர் பணம் அனுப்ப வேண்டிய விவரங்கள்
நெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் (vinavu@gmail.com) அல்லது தொலைபேசி (Mobile – (91) 97100 82506) மூலம் தெரிவிக்கவும்.
Name: KANNAIAN RAMADOSS Bank Name: ICICI BANK LTD Account Number: 6 1 2 8 0 1 1 0 7 3 8 9 IFSC Code: I C I C 0 0 0 6 1 2 8 Branch Location: TANJORE IFSC-ICIC0006128 Postal Pincode : 613007 MICR Code: NONMICRLO Account Type: Savings ____________________________
பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:
KANNAIAN RAMADOSS PUTHIYA KALACHARAM, NO.16, MULLAI NAGAR SHOPPING COMPLEX, SECOND AVENUE, ASHOK NAGAR, CHENNAI, 600 083. PHONE : 044- 23718706. செல்பேசி : அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876 __________________________________
வெஸ்டர்ன் யூனியர்ன் மூலம் பணம் அனுப்புபவர்கள் KANNAIAN RAMADOSS என்ற பெயருக்கு அனுப்பி விட்டு மின்னஞ்சல் மூலம் (vinavu@gmail.com) விவரங்களைத் தெரிவிக்கவும்.
http://www.vinavu.com/2013/10/11/chennai-pala-meeting-opposing-modi/
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home