12 October 2013

# படித்ததில் பிடித்தது #



இருபது வயது வரை என் அம்மா என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார்.

அவர் முதுமையடைந்தவுடன் அவர் மரணம் வரை இருபது ஆண்டுகள் நான் அதை விட நன்றாகப் பார்த்துக் கொண்டேன்.

கணக்கு நேராகி விட்டதல்லவாஎன்று ஒருவர் கேட்டார்.

நபிகள் சொன்னார், ”கணக்கு நேராகாது. உன் அம்மா உன்னை வளர்த்தது, உன்னை வாலிபனாக்கும் எண்ணத்தில்.

நீ பார்த்துக் கொண்டதோ அவர்கள் மரணம் வரை அவர்களைப் பராமரிக்கும் எண்ணத்தில்.

அவர் உன்னை வாழ்வுக்காக வளர்த்தார்.
நீ அவரை சாவுக்காக பராமரித்தாய்.
இரண்டும் ஒருபோதும் ஈடாகாது.

-
நபிகள் நாயகம்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home