உண்மையான வீரன்...விளையாட்டில் மட்டுமில்லை நிஜத்திலும்...
ரஷ்யாவில்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடத்த உலக குங் பு போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற எகிப்தின் முஹம்மது யூசுப் .போட்டியில்
வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வாங்கும் போது எகிப்தின் முதல் அதிபர் முர்சிக்கு ஆதராவாகவும் மக்கள் போராட்டங்களில் ரானுவத்தின்சரவதிகார்த்தால்
கொல்லப்பட்ட ரபா மக்களுக்கு ஆதரவாகவும் டி - ஷர்டை அணிந்திருந்தது
உலகத்தின் பார்வையை
வெகுவாக ஈர்த்தது..இது குறித்து கருத்து
தெரிவித்த யூசுப் எகிப்து மக்களின்
போராட்டத்தை உலக மக்களுக்கு தெரியவேண்டும்
உலக மக்களின் பார்வையை எகிப்து
மக்கள் போராட்டத்தில் ஈர்க்க இந்த உடையை
அணிந்தேன் என்று தெரிவித்தார்
.இதனிடையே அடுத்து வரும் போட்டிகளில்
இவரை எகிப்து ராணுவ சர்வாதிகாரத்தின் கட்டுப்பாட்டில்
உள்ள குங்பு சங்கம் தடை செய்துள்ளது .இது குறித்து கருத்து தெரிவித்த யூசுப் .எனது இந்த நடவடிக்கைக்காக எகிப்து குங் பு
அமைப்பு என் மீது நடவடிக்கை எடுக்கும் என்பது எனக்கு முன்பே தெரியும் என்று தெரிவித்திருந்தார்.மேலும் கருத்து தெரிவித்த யூசுப் எனது இந்த
செயலுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்..இதற்கு முன்னர் ராபியாவின் எகிப்து ராணுவம் நடத்திய படுகொலையில்
எகிப்தின் சார்பாக
ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம்
வாங்கிய வீரர் ஒருவர் கொடூரமாக
கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது
..எகிப்தின் மக்கள் போராட்டம் 3
மாதத்தை கடந்தும்
ஆயிரக்கணக்கான மக்களை ராணுவ சர்வாதிகாரம் கொன்றும் ஆயிரக்கணக்கான மக்களை கைது செய்தும் கூட இன்றுவரை போராட்டம் ஓய்வதாக
இல்லை.மாறாக இந்த போராட்டத்தின் புதிய தொடக்காமாக கல்லூரி மாணவர்கள் தற்பொழுது
கல்லூரிகளில் புதிய போராட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது
குறிப்பிடத்தக்கது..ராணுவ
சர்வாதிகாரம் ஒழிக்கப்படும் பட்சத்தில்
எகிப்தின் ஓராண்டுகள மக்களாட்சி
மீண்டும் நிலை பெரும்..மற்றபடி 60 ஆண்டுகால
சர்வாதிகாரமே மீண்டும் ஆட்சியை
அனுபவிக்கும்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home