மதவெறிக்கு எதிராக மக்கள் ஒற்றுமை
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன் னாவோ என்னுமிடத்தில்
தங்கம் இருப்பதாக சாமியார் பேச்சைக் கேட்டு மத்திய, மாநில அரசாங்கங்கள் அந்த இடத்தை தோண்ட
ஆரம்பித்ததை ஆரம்பத்தில்
கிண்டல் செய்த பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி பின்னர் சங் பரிவாரத்தின் கட்டளைக்குக் கீழ்ப்ப
டிந்து வாயை மூடிக்கொண்டுவிட்டார். உள் ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்
ஆர்எஸ்எஸ்/பாஜகவின் இரட்டை நாக்கு குணத்திற்கு இது மேலும் ஓர் உதாரணமாகும்,
சோபன் சர்க்கார்
என்னும் ஒரு `மதகுரு’
ஒர் இடத்தில் தங்கம்
இருப்பதாகத்தான் கனவு கண்டதாகக் கூறியதை நம்பி, இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை அரசின்
அனுமதியுடன் அந்த இடத்தைத் தோண்டத் துவங்கியுள்ளது.
இதைத்தான் மோடி ஆரம்பத்தில் கிண்டலடித்தார்,
நாட்டுமக்களும் “பரவாயில்லையே மோடி பகுத் தறிவுடன் பேசுகிறாரே.’’
என்று மகிழ்ச்சியுடன்
கூறினார்கள். ஆயினும் இது ஒரு கணம்தான். இப்போது மோடி மேற்படி
சாமியாரின் கனவுக்காக அவரைக் கிண்டல் செய்ததை மன்னிக்குமாறும், தான் கூறிய கூற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும்
கூறி சாமியாருக்கு வணக்கம் செய்திருக்கிறார்.2014 பொதுத் தேர்தலையொட்டி. “இந்து வாக்கு வங்கியை’’ ஒருமுனைப்படுத்த வேண்டும் என்ற
நோக்கத்துடன் மதவெறித் தீயைவிசிறிவிட வேண்டும் என்ற அடிப்படையில் தங்கள்
பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ்/பாஜககூடாரம் முன்னெடுத்துச் செல்ல தீர்மானித்திருப்பதால். மோடியின்
இத்தகைய தலைகீழ் மாற்றம் புரிந்து கொள்ளக் கூடியதேயாகும், பாஜகவின் தேர்தல் அறிக் கையை
உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் புதிய தலைவர் ஒரு செய்தியாளர்கள்
கூட்டத்தில் கூறியதாவது:
“ராமன் பிறந்த
இடத்தில் நாங்கள் கோவில் கட்டியே தீருவோம். இதில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை.’’
அவர் மேலும்.
பாஜகவின் உயிர்மூச்சாக இருக்கக் கூடிய ராமர் கோவில் கட்டுதல்,
ஜம்மு-காஷ்மீர்
மக்களுக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்குதல், அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான
சிவில் சட்டத்தைக் கொண்டுவருதல், பசுக்களைப்
பாதுகாத்தல், ராம்
சேது (அதாவது சேமு சமுத்திரத்திட்டத்தை எதிர்த்தல்), கங் கை நதியைப் புனிதப்படுத்துதல் ஆகிய
பாஜகவின் உயிர்மூச்சாக இருக்கக்கூடிய கொள்கைகள் குறித்தும்
எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் கூறியிருக்கிறார். வேறு
வார்த்தைகளில் சொல்வதானால், தற்போதைய மதச்சார்பற்ற
ஜனநாயக நவீன இந்தியக் குடியரசின் குணாம்சத்தையே முற்றிலுமாக ஒழித்துக்கட்டிவிட்டு அதற்குப் பதிலாக
ஆர்எஸ்எஸ்-இன் அடிப்படைக் கொள்கையான `இந்து ராஷ்ட்ரம்’ என்னும் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் நிகழ்ச்சி
நிரலை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக கூறுகிறது. நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் இவர்களின்
இத்தகைய கேடுகெட்ட கொள்கையை மக்கள் நிராகரித்து சுதந்திர இந்தியாவுக்கு,
தற்போதைய இந்தியக்
குடியரசுக்கான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்கள். ஆயினும் அவர்கள்
தங்கள் ’இந்து ராஷ்ட்ரம்’
என்னும் வெறிபிடித்த
பாசிசக் கொள்கையை விடுவதாக இல்லை. இதன் ஒரு பகுதியாகத்தான் அவர்கள் நாட்டில் மதவெறி
என்னும் நஞ்சை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
விளைவு, நாடுமுழுவதும் மிகப்பெரிய அளவில் வன்
முறைச் செயல்களைக் கட்டவிழ்த்து விடுதல், கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டிருக்
கிறார்கள். அவர்களின் வெறிபிடித்த கொள்கையானது நாகரிகத்துடன்
முன்னேறிக்
கொண்டிருக்கும் நம் நாட்டிற்கு முற்றிலும் எதிரானதாகும். இந்தியாவின் இன்றைய ஒற்றுமைக்கு வேட்டு
வைக்கக்கூடியதாகும். பிரிட்டிஷார் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் தங்கள்
காலனியக் கொள்ளைக்காக ஒன்று படுத்திய அதே சமயத்தில், அவர்களை எதிர்த்து தொடர்ந்த பல ஆண்டு
காலம் எண்ணற்ற தியாகங்களுடன் மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்களானவை
நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வை உருவாக்கி உயர்த்தியுள்ளன. விடுதலைப்
போராட்டம் வெற்றி
பெற்றதும், அதனைத்
தொடர்ந்து நாட்டில் இருந்த நூற்றுக்கணக்கான நிலப்பிரபுத்துவ மன்னர் சமஸ்தானங்கள்
இந்தியாவுடன் இணைக்கப் பட்டதும், மக்கள்
மத்தியில் நாம் பல்வேறு தேசிய இனங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் நான்
அனைவரும் இந்திய மக் கள் என்னும் ஒற்றுமை உணர்வினை உரு வாக்கித் தந்துள்ளன.
இந்திய நாகரிகம் என்பதே நம்மண்ணில் பல்வேறு மதங்கள் பயணம் செய்ததன் விளைவாக ஏற்பட் டுள்ள
ஒருவிதமான கலவைதான், பல்வேறு சோதனைகளுக்காளாகி,
பின்னர்செழுமையடைந்து
உருவாகி முன்னேறி யுள்ள நாகரிகம்தான் இந்திய நாகரிகம்.
ஜவஹர்லால் நேரு தன்னுடைய “கண்டு
ணர்ந்த இந்தியா’’
என்னும்
நூலில்குறிப்பிட்டிருப்பதைப்போல, “இந்தியா
என்பதே பல்வேறு
சிந்தனை அடுக்குகளைக் கொண்ட ஒரு நாடுதான். ஒரு சிந்தனையோட் டத்தை அழித்துவிட்டு
அதன்மீது மற்றொரு சிந்தனையோட்டம் எழுதப்பட்டிருக்கிறது, பின்னர் மறுபடியும் அதனை அழித்துவிட்டு,
அதன்மீது மற்றொரு
சிந்தனையோட்டம் எழுதப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் எந்தவொரு சிந்தனையும்
முழுமையாக, முற்றிலுமாக
அழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. இவ்வாறு பல்வேறு சிந்தனைத் தொகுப்புகளின் கலவைதான் இந்திய
நாகரிகம்.’’மேலும்,
ரவீந்திரநாத் தாகூர்,
“ஆரியர்கள், ஆரியரல்லாதவர்கள், திராவிடர்கள், சீனர்கள், மொகலாயர்கள் மற்றும் பல்வேறு இனத்தைச்
சேர்ந்தவர்களின் ஒரு கலவைதான் இந்தியர்’’ என்று கூறியிருக்கிறார், இதுதான் இந்தியாவாகும். இவ்வாறு இந்திய சமூகம்
என்பது பல்வேறு நாகரிகங்களின் வளமான அம்சங்களை உள்வாங்கிக்கொண்டு முன்னேறியுள்ள
ஒன்று என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு
இனத்தினருக்கும் இடையே வேற்றுமைகள் இருந்தபோதிலும் அவ்வாறான
வேற்றுமைகளுக்கு மத்தியிலேயே சமூக நல்லிணக்கத் துடன் வாழவும் கற்றுக்கொண்ட
சிறந்ததொரு நாகரிகமாகவும் இந்திய நாகரிகம் விளங்கி வருகிறது. இத்தகைய
நாகரிக சிந்தனையை ஆர்எஸ்எஸ் எதிர்க்கிறது. அதனால்தான் அதுஇந்திய
விடுதலைப்போராட்ட காலத்திலும் அதனுடன் தன்னை இணைத் துக் கொள்ளாமல் தனியே
நின்றது. ஆர்எஸ் எஸ் இயக்கத்துடனும் விடுதலைப் போராட் டத்துடனும் இணைப்பு
கொண்டிருந்த அல்லது பிணைக்கப்பட்ட ஒரே நபர் எனில் அது வீ.டி. சாவர்கர்
மட்டுமே. புகழ் பெற்ற வரலாற்றாசிரியரும், இந்துத்துவா கொள் கையுடன் இணக்கமாக இருந்தவருமான ஆர்.சி.
மஜூம்தார் அந்தமான்
சிறையில் தண்டனைக் கைதிகளாக இருந்தவர்கள் தொடர்பாக எழுதியுள்ள ஆவணங்களில்,
அந்தமான் செல்லுலர்
சிறையிலிருந்து வெளியே வருவதற்காக வி.டி.சாவர்கர் வெள்ளைக்காரர்களுடன்
நடத்திய கடிதப் போக்குவரத்துகள் குறித்து எழுதியிருக்கிறார். இந்த
சாவர்கர்தான் இந்து மகா சபை மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்துகையில் முதன்முறையாக
இந்தியாவில் இரு தேசங் கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவை
இந்து தேசம் மற்றும் இஸ்லாமிய தேசம்என்றும் முன் வைத்தார்.
இரு தேசக் கொள்கையை முகமது அலி ஜின்னா கூறுவதற்கு
ஈராண்டுகளுக்கு முன்னரே கூறியது வி.டி.சாவர்கர்தான். இதனை பிரிட்டிஷார் மிகவும் இலாவகமாகப் பயன்
படுத்திக் கொண்டு இந்தியாவை இரு நாடு களாகப் பிரித்தார்கள். இதே சாவர்கர்தான்
இந்துத்துவா என்னும் சொற்றொடரையும் அறிமுகப்படுத்தினார். அவ்வாறு அவர்
அறிமுகப்படுத்தும்போது இந்து மதத்திற்கும் இதற்கும் எவ்விதச்
சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்தார். இந்து தேசத்தை
உருவாக்குவதற்கு, “ராணுவத்தை இந்துமயமாக்குங்கள்,
இந்துதேசத்தை
ராணுவமயமாக்குங்கள்’’ என்ற
கோஷத்தை முழங்கினார்,
சமீபத்தில் நடைபெற்ற
இந்துத்துவா பயங்கரவாத நடவடிக்கைகளில் இத்தகைய கோஷங்கள் உத்வேகத்துடன்
எழுப்பப்பட்டதைப் பார்க்க முடிந்தது.எனவே, நாட்டில் உள்ள நாம் அனைவரும் நவீனக் குடியரசை நிறுவிட வேண்டும்
என்று கோருகிற
அதே சமயத்தில், ஆர்
எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மற்றும் இந்துத்துவா சக்திகள் மட்டும் `இந்து ராஷ்ட்ரம்’ உருவாக்கிட வேண்டும் என்று வேலைகளைச் செய்து
கொண்டிருக்கின்றன. இவர்களின் இத்தகைய குறிக்கோள் வெற்றிபெற வேண்டுமானால் அதற்கு நாட்டில் மதவெறிக் கலவரங்களை
உரு வாக்க வேண்டியதும், பல்வேறு
மதத்தின ருக்கிடையே வெறுப்பை உமிழக்கூடிய விதத்தில் இந்து மக்களை மாற்றியமைப்பதும்
அவசியம். அந்த விதத்தில் இவை நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய
அடிப்படைகள்தான் மதவெறி சக்தி களுக்கு பல்வேறு மதத்தைச் சேர்ந்த மக்கள் மத்தியில்
வெறுப்பையும், குரோதத்தையும்
வளர்க்க வழிவகுத்துத்
தந்துள்ளன. இப்போதுகூட வகுப்புவாத வன்முறைச் சட்டமுன்வடிவுக்கு எதிராக, பாஜகவின் செய்தித் தொடர்பாளர்
சமீபத்தில் வெளியிட்ட
கருத்துக்களை இந்தப் பின்னணி யில்தான் நாம் பார்க்க வேண்டும். மேற்
படி சட்டமுன்வடிவு ஐ.மு.கூட்டணி 1அரசாங்கத்தின்
காலத்திலிருந்தே நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின் றது. குஜராத்
மாநிலத்தில் முஸ்லிம்
மக் களுக்கு எதிராக படுகொலைகள் நடைபெற்ற பின்னணியில், வகுப்புக் கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
இழப்பீடு வழங்குவதில் சட்டத்தில் ஓட்டைகள் இருந்ததை அடைப்பதற்காகவும்,
பாதிக்கப்பட்ட
வர்களுக்கு விரைந்து இழப்பீடு மற்றும் புனர் வாழ்வு அளிப்பதற்காகவும், அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நீண்ட நெடிய ஆலோ சனைகள்
நடத்தியபின்னர் 2001ஆம்
ஆண்டு வகுப்புவாத
மற்றும் குறிப்பிட்ட இனத்தினர் மீதான வன்முறை (நீதி வழங்குதல் மற்றும்
நிவாரணம்) தடைச் சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இச்சட்டமுன்வடிவில்
சில ஆழமான பிரச் சனைகள் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
துல்லியமான திருத்தங்கள் சில வற்றை முன்மொழிந்திருக்கிறது. இந்தச்
சட்டமுன்வடிவிற்குத்தான் இப்போது பாஜக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
“இது வகுப்புவாத குறிக்கோளுடன் கொண்டுவரப்பட்டுள்ள
சட்டமுன்வடிவு’’ என்று
அது கூறுகிறது. மேலும், இச்சட்டமுன்வடிவானது
சமூகத்தை வகுப்புவாத அடிப்படையில் பிரித்து விடுவதற்கான முயற்சியே என்றும் அது
கூறுகிறது. வேடிக்கையாக இல்லை? பாஜகவானது
தான் கட்டவிழ்த்து விட்ட மதவன்முறை நிகழ்வுகளை நியாயப்படுத்து வது
மட்டுமல்ல, அதனால்
பாதிக்கப் பட்டவர்களுக்கு எவ்வித இழப்பீடோ, நிவாரணமோ அளித்திடக்கூடாது என்பதி லும் உறுதியாய்
இருக்கிறது என்பதும் தெள்ளத் தெளிவாய்த் தெரிகிறது.அலகாபாத்தில்
கிறித்துவ மிஷனரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐந்து நாள்
நிகழ்ச்சிகளுக்கு எதிராக அங்கே இருக்கும் பாஜகவினர் விஸ்வ இந்து பரிசத்தின் ஆதர
வுடன் கலக நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். இந்நிகழ்ச்சிகள் மக்களை கிறித்
துவ மதத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடு என்று அவை குற்றம் சுமத்தி
இருக்கின்றன. “ஒரு
மதம் மற்றொரு மதத்தைவிடச்
சிறந்தது என்று கூறுவதற்காக நாங்கள் இந்த நட்புத் திருவிழாவை
இங்கே நடத்தவில்லை’’
என்று அதனை
நடத்துவோர் எழுத்துப் பூர்வமாகத் தெரிவித்தபோதிலும்கூட அதனை நடத்தவிடாமல்
அதற்கு மாசு கற்பித்திடும் சூழ்ச்சிகளை அவர்கள் செய்து
வருகிறார்கள். தேர்தல்கள் நெருங்கி வருவதைத் தொடர்ந்து மதவெறித் தீயை மிகவும் வேகமாக
விசிறிவிட ஆர்எஸ்எஸ்/பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் மிகவும்
வெறித்தனமாகச் செயல்களில் இறங்கி யுள்ளன. இவ்வாறு இவர்கள் மதவெறித் துவேஷத்தைக்
கிளப்புவது வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் நாட்டின் மாண்புக்கு
எதிரானது என்பதில் எள்ளளவும் ஐய மில்லை. மகாகவி பாரதியார், இத்தகைய மனிதர்களை மனதில் கொண்டுதான்,
“தெய்வம் பலபல சொல்லிப்
– பகைத்தீயை வளர்ப்பவர்
மூடர்.உய்வ தனைத்திலு மொன்றாய் – எங்கும்ஓர்
பொருளானது தெய்வம்.தீயினைக் கும்பிடும் பார்ப்பர் – நித்தந்திக்கை வணங்கும் துருக்கர்
கோயிற் சிலுவையின் முன்னே நின்று கும்பிடும் ஏசு மதத்தார். யாவரும்
பணிந்திடும் தெய்வம் – பொருள்
யாவினும் நின்றிடும்
தெய்வம்.பாருக்குள்ளே தெய்வ மொன்று; இதில்பற்பல சண்டைகள் வேண்டாம்.’’என்று பாடியிருக்கிறார்.மேலும், சுவாமி விவேகானந்தர் 1893 செப்டம்பர் 27 அன்று அனைத்து மதங்களின் மாநாட்டின்
கடைசி அமர்வின்போது உரை நிகழ்த்துகையில் தன்னுடைய எழுச்சிமிகு
உரையில், “இந்த
மதங்களின் மாநாடு உலகிற்கு அறிவிப்பது என்னவென்றால் புனிதம், தூய்மை, கருணை என்பவை உலகில் உள்ளஎந்த
தேவாலயத்திற்கும் தனிப்பட்ட உடைமை அல்ல, உலகில் உள்ள ஒவ்வொரு அமைப்புமுறையும் தலைசிறந்த ஆண் –
பெண்களை உருவாக்கித்
தந்திருக்கிறது. இவ்வாறு உண்மை நிலைமைகள் இருக் கின்றபோது, தங்கள் மதம்தான் உலகில் இருக்க வேண்டும்,
மற்ற மதங்கள் எல்லாம்
அழிய வேண்டும் என்று எவரேனும் கனவு காண்பார்களேயானால் அவர்களுக்காக நான்
என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து மிகவும் இரக்கப்படுகிறேன், அவர்களுக்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட நான் விரும்புகிறேன்.
“ஒவ்வொரு மதத்தின் பதாகையின் மீதும் –
எதிர்ப்புகள்
உண்டானாலும் அதனை முறி யடித்துவிட்டு – ’’ உதவிடு, சண்டையிடாதே’’
என்றும், “கிரகித்துக்கொள், அழிக்காதே’’ என்றும் “மதநல்லிணக்கமும் அமைதியுமே தேவை,
சண்டையும் சச்சரவும்
அல்ல என்றும் எழுதப்பட
வேண்டும்” என்றார்.
இந்தியாவில் அனைத்து மதத்தினரும் சொந்தச் சகோதரர்கள்போல் வாழ்ந்து வந்த நம் வளமான
கலாச்சார மாண்பிற்கு இப்போது ஆபத்து வந்துள்ளது. இந்தப் பின்
னணியில்தான் நவீன இந்தியாவின் மதச் சார்பற்ற, ஜனநாயக அடித்தளங்களை உயர்த்திப்
பிடிக்கும் நாட்டுப் பற்றாளர்கள் அனைவரும் இத்தகைய சவாலுக்கு எதிராக
அணிதிரள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. மதவெறிக்கு எதிராக மக்கள் ஒற்றுமைக் கான
சிறப்பு மாநாடு இந்தத் திசைவழியில் ஒருமுயற்சியாகும்.
வரவிருக்கும் காலங்களில் இதனை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
(தமிழில்: ச. வீரமணி)
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home