பேய் பிசாசு பயத்தை விரட்டும் மனிதநேயப்பணி!
கடந்த 18.10.13 அன்று தி ஹிந்து தமிழ் நாளேட்டின் நிர்வாகத்திலிருந்து டிஎன்டிஜே தலைமையை தொடர்பு கொண்டனர்.
பெண்களே பெண்களுக்கான இறுதி சடங்குகளை செய்வதற்கு பயிற்சியளிக்கும் ஜனாஸா பயிற்சி முகாம் டிஎன்டிஜே சார்பாக நடத்தப்படுவது குறித்த விளம்பரம்
கண்டோம். மூடநம்பிக்கைகளில் பெண்கள் மூழ்கியுள்ள இந்த
காலகட்டத்தில் இறந்துபோனவரது சடலங்களுக்கு
இறுதிச்சடங்கு செய்ய பெண்கள்
படையை தயார் செய்யும் இந்த உங்களது மனிதநேயப்பணி குறித்தும், அந்த பெண்மணிகளது அனுபவங்கள்
குறித்தும் தி ஹிந்து நாளேடு அவர்களிடம் பேட்டி காண விரும்புவதாக அவர்கள் தெரிவிக்க, அதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டு கடந்த 19.10.13 சனிக்கிழமை அன்று அந்த நேர்காணல் நடத்தப்பட்டு 21.10.13 அன்று வெளியான
தி ஹிந்து நாளேட்டின் தமிழ் பதிப்பில் டிஎன்டிஜே பிரச்சாரகர் சகோதரி ஃபாத்திமா தாஹிரா அவர்களின் நேர்காணல் வெளியானது. அல்ஹம்துலில்லாஹ்....
பேய் பிசாசு பயம் போக்கி பெண்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது குறித்தும், இறந்தவரது சடலங்களுக்கு செய்யக்கூடிய மனிதநேயப்பணிகளை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும் நமது சகோதரிகள் குறித்தும் ஆச்சர்யத்துடன் பிறமத சகோதரர்கள் உற்றுநோக்குகின்றார்கள் என்ற செய்தி இதன் மூலம் நமக்கு தெரியவருகின்றது.
ஒருபுறம் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டதால் அடக்கம் செய்ய மறுக்கப்படும் ஜனாஸாவோடு போராட்டத்தில் குதிக்கும் நமது ஏகத்துவ சொந்தங்கள்; மறுபுறம் எங்களை எவ்வளவுதான் எதிர்த்தாலும் மறுமை வெற்றிக்காக ஜனாஸாக்களுக்கான இறுதிச்சடங்குகளை நபி வழியில் நடத்த தாமாக நாங்கள் முன்வருவோம் என்ற நமது சகோதர, சகோதரிகளின் கொள்கை உறுதி.
சில நாட்களுக்கு முன்புதான் டிஎன்டிஜேவினரை தீவிரவாதிகளாக சித்தரித்து ஹெச்.பீ முஹம்மது என்ற அரைவேக்காடு எழுதிய கட்டுரை தி ஹிந்து நாளேட்டின் தமிழ் பதிப்பில் வெளியானது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இவர்கள் தீவிரவாதிகளல்ல; மனிதநேயத்திற்கு விதைபோட்டவர்கள்; மனிதநேயத்தை போதிப்பவர்கள் என்பதை பறைசாற்றும் விதமாக வல்ல இறைவன் இந்த நிகழ்வை நிகழ்த்திக்காட்டியுள்ளானோ என்று நினைத்து வல்ல இறைவனை போற்றிப் புகழுகின்றோம்.
இது குறித்து அலசுகின்றது இன்றைய தினம் ஒரு தகவல்.....

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home