13 October 2013

அரஃபா நோன்பு பற்றிய ஒரு நினைவூட்டல்



எனதருமை சகோதர சகோதரிகளே !... சிறப்புக்குரிய அரஃபா நோன்பை வளைகுடா நாடுகள் மற்றும் சில நாடுகளில் நாளையும் (திங்கள் 14.10.2013) இன்னும் ஒரு சில நாடுகளில் (செவ்வாய் 15.10.2013) கடைபிடிக்க இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் ....

அரஃபா நாளின் சிறப்பு

அரஃபா நாளும் அதில் உள்ளது. அரபா நாள் பாவங்களுக்கு மன்னிப்பும், நரகவிடுதலையும் நிடைக்கும நாளாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- அல்லாஹ் நரகிலிருந்து தனது அடியார்களை அதிகமாக விடுதலை செய்யும் நாள் அரபா நாளாகும்.இதைத் தவிர வேறு எந்த நாட்களிலும் இவ்வாறு விடுதலை செயவதில்லை.அல்லாஹ் அந்நாளில் இறங்கி வந்து,இவர்கள் என்ன விரும்புகின்றனர்? என்று தனது வானவர்களிடம் பெருமையாகக் கேட்பான். (அறிவிப்பவர் ஆயிஷா(ரலி), ஆதாரம்: முஸ்லிம்.) துல்ஹஜ் பத்து நாட்களின் சிறப்புக்கும்,மாண்புக்கும் அரபாத் நாள் அந்நாளில் இருப்பது ஒன்றே போதுமானது.

அரஃபா நோன்பின் சிறப்பு ....

அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்

எல்லாம் வல்ல ரஹ்மான் அல்லாஹ் நமது பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பானாக

"
அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ "

இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன்.
மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக.....

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home