1 November 2013

நம் கனவு நனவாகுமா ?



இந்தியாவை 800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய சமுதாயம் இந்திய சுதந்திர போராட்டத்தில்...

சொத்தை இழந்து, சுகத்தை இழந்து, கல்வியை இழந்து, தமது சதவீதத்துக்கும் அதிகமான உயிர்களை இழந்து...

நாட்டிலுள்ள பள்ளிவாசல்களை சுதந்திர போராட்ட தளமாக பயன்படுத்திய ஒரே சமுதாயமாக இருக்க கூடிய முஸ்லிம் சமுதாயம்...

இன்று கல்வி, வேலைவாய்ப்பு இல்லாமல் ராஜ்ஜியத்தை ஆண்ட சமுதாயம், பூஜ்ஜியமாய் வீதியில் முடங்கி போய் நிற்கிறோம்.

ராஜ்ஜியத்தை கேட்கவில்லை, பூஜ்ஜியத்தை மாற்ற சொல்லி போராடி வருகிறோம்.

காட்டி கொடுத்த கூட்டமெல்லாம் அதிகாரத்தை சுவைக்கிறது, தியாகம் செய்த கூட்டமோ சாலையோரத்தில் தவிக்கிறது.

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ராஜேந்தர் சச்சார் மற்றும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆகியோரின் அறிக்கை படி இந்தியாவிலேயே வறுமை கோட்டுக்கும் கீழ் நிலையில் வாழும் அதிகபட்ச சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் இருந்து வருகிறது.

இந்நிலை மாறி முஸ்லிம்களும் கல்விகற்று, வேலைவாய்ப்பில் ஈடுபட்டு தலைநிமிர்ந்து வாழ அரசு ஆவணம் செய்ய வேண்டும்.

நாங்களும் காவல் அதிகாரிகளாகவும், மருத்துவர்களாகவும், நீதிபதிகளாகவும் வாழ்வோம் என்ற கனவு நனவாகுமா ?

இந்த புகைப்படத்தில் உள்ளது போல் நாங்களும் இந்த காட்சிகளை நிஜ வாழ்வில் காண வேண்டும்.

இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக...

மரத்தை வெட்ட தெரியாது, சாலையை மரிக்க தெரியாது, பஸ்ஸை கொளுத்த தெரியாது...

எங்களுக்கு தெரிந்ததெல்லாம்...

பொதுக்கூட்டம், பேரணி, மாநாடு, ஆர்ப்பாட்டம், போராட்டம் இவைகள் மட்டும் தான்.

எங்கள் கனவை நனவாக்குங்கள்...

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home