நாகரீகம்
நாகரீகம்
என்பது வாழ்க்கையைப் பற்றிய அனைத்து சிந்தனைகளையும் உள்ளடக்கியதாகும்.
ஆனால் பொருளியல் முன்னேற்றம் என்பது வாழ்வியல் நடவடிக்கைகளில் பயன்படுத்தும் புலன் உணர்வுக்கு உட்பட்ட (Sensed Objects) பொருட்களின் தொகுப்பு ஆகும்.
நாகரீகத்திற்கும், பொருளியல் முன்னேற்றத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டினை நாம் எப்பொழுதும் கவனிக்க வேண்டும். மேலும் நாகரீகத்தின் விளைவாக ஏற்படும் பொருளியல் முன்னேற்ற அம்சங்களுக்கும், அறிவியல் மற்றும் தொழிற்சாலைகளால் உருவாகும் பொருளியல் முன்னேற்ற அம்சங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டினையும் நிச்சயமாக நாம் கவனிக்க வேண்டும்.
மேற்கத்திய நாகரீகத்தை ஏற்றுக் கொள்வதற்கு நமக்கு அனுமதியில்லை. இதற்கு காரணம் அந்த நாகரீகம் நிறுவப்பட்டிருக்கும் அடித்தளத்தின் முதற்படியோடும், வாழ்க்கையைப் பற்றிய அதன் கண்ணோட்டத்தோடும், மனிதனின் மகிழ்ச்சி தொடர்பாக அதன் அர்த்தத்தோடும் இஸ்லாம் முற்றாக முரண்பட்டு நிற்கிறது.
மார்க்கத்தை வாழ்வியலிலிருந்து பிரிக்கும் கொள்கையிலிருந்து மேற்கத்திய நாகரீகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் வாழ்வியல் விவகாரங்களில் மார்க்கம் ஆதிக்கம் செலுத்துவதை அது மறுக்கிறது. எனவே அரசியலிலிருந்து மார்க்கத்தை அது பிரித்து வைத்திருக்கிறது.
வாழ்க்கையிலிருந்து மார்க்கத்தை பிரித்து, வாழ்வியல் விவகாரங்களில் அதன் பங்களிப்பை மறுப்பவர்களுக்கு இந்த பிரிவினை இயல்பான ஒன்றாக இருக்கக்கூடும். இந்த அடித்தளத்தில்தான் அதன் வாழ்வியலும், வாழ்வியல் செயலாக்க அமைப்புகளும் (System of life) நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாகரீகம், மனிதனின் முழு வாழ்க்கையையும், உலக பயன்களை மட்டும் தேடி அடைந்து கொள்ளும் செயல்பாட்டுத் தளமாக கருதுகிறது.
இஸ்லாமிய நாகரீகத்தைப் பொருத்தவரை அது மேற்கத்திய நாகரீகம் கட்டமைக்கப்பட்டுள்ள அடிப்படைக்கு முற்றிலும் முரண்பட்ட அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் வாழ்வியல் கண்ணோட்டமும், மகிழ்ச்சி பற்றி அது கொண்டிருக்கும் அர்த்தமும் மேற்கத்திய நாகரீகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
இஸ்லாமிய நாகரீகத்தில் வாழ்க்கை முறை என்பது இஸ்லாமிய அகீதாவிலிருந்து பிறக்கும் இஸ்லாமிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
அஹ்காம் ஷரிஆவினால் மனிதனின் செயல்பாடுகள் வழிநடத்தப்படும் இந்த வழிமுறைதான் வாழ்க்கையின் அடிப்படையாக விளங்குகிறது.
அதே வேளையில் மனிதனின் செயல்பாடுகள் பொருளியல் அடிப்படையில் இருக்கும் நிலையில் அவன் செயல்பாடுகளை ஹராம் ஹலால் அடிப்படையில் மேற்கொள்ளும்போது அல்லாஹ்(சுபு)வுடன் அவனுக்கு இருக்கும் தொடர்பை அவன் கவனத்தில் கொள்வதுதான் ஆன்மா (Spirit - RUH) எனப்படுகிறது.
இதன்படி, அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகள் முஸ்லிம்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறன. அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக தன் செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு முஸ்லிமுடைய இறுதி லட்சியம் அல்லாஹ்(சுபு)வின் உவப்பை எய்துவதே அல்லாமல் உலக பயன்களாக இருக்க முடியாது.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home