20 October 2013

உலகில் இஸ்லாம் கோலோச்சிய முறையும் அதன் வெளிநாட்டுக் கொள்கையும்!



உலகில் இஸ்லாம் கோலோச்சிய முறையும் அதன் வெளிநாட்டுக் கொள்கையும்!

இஸ்லாமிய தலைமைத்துவம் மீள முஸ்லிம் உலகில் நிறுவப்படுமானால் அது இஸ்லாத்தை முழுமையாக அதன் ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்தில் அமுல்படுத்துவதுடன் (இஸ்லாமிய அரசியல் பொருளாதார மற்றும் சமூக ஒழுங்கு மற்றும் கல்வி) அது தாவா மூலமும் ஜிஹாத் மூலமும் உலக முழுக்க எடுத்துச்செல்லும்!

மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிக இஸ்லாமிய அரசுமுதல் உதுமானிய கிலாபாவரை இஸ்லாம் இவ்வாறுதான் எடுத்துச்செல்லப்பட்டதுடன் முஸ்லிம்களது பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் அவர்கள் இஸ்லாத்தின்படிவாழ்வதற்கான வழிவழிவகைகளை உலக முழுக்க ஏற்படுத்தியது.

ஆனால் இன்றைய முஸ்லிம் இராணுவம் மேற்கினது கைபொம்மைகளாக தொழிற்படும் முஸ்லிம் ஆட்சியாளர்களால் துஸ்பிரயோகம் செய்யப்படும் துர்பாக்கிய நிலையில் முஸ்லிம் உம்மத் இருப்பது மிகவும் வேதனைக்குரியது. மாத்திரமன்றி "நோட்டா" போன்ற குப்பார்களது அணியில் சேர்ந்து முஸ்லிம் நாடுகள் ஆக்கிரமிக்கப்படுவதிலும் பங்காளிகளாக மாறியிருப்தனையும் காணலாம்.

இந்த இழிநிலையில் இருந்து முஸ்லிம் உம்மத் விடுபட முஸ்லிம் இராணுவத்திடம் "அவர்களது பொறுப்பும் கடமைகளும்" இஸ்லாத்தை வாழவைப்பதில் எத்தகையது என்பது பற்றியும் உண்மையான எதிரிகளை யார் என்பதுபற்றியும் தஃவா செய்து இஸ்லாம் மீண்டும் கோலோச்ச வழிவகுக்க நாம் முடிந்த தஃவாக்களை முன்னெடுக்க வேண்டியது எமது பொறுப்பு என்பதனை உணர்வோம்!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home