மக்கா நகரின் புனிதம்
ஹரம் எல்லையை அடையாளம் காட்டுவதற்காக ஐந்து இடங்களில் ஒரு மீட்டர் உயரத்தில் தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஐந்து எல்லைகளுக்கும் உட்பட்ட இடங்கள் புனிதமான இடங்களாகும். மக்காவுக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘தன்யீம்’ என்ற இடம். வடக்கே பனிரெண்டு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ‘அளாஹ்’ என்ற இடம். கிழக்கே பதினாறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ‘ஜியிர்ரானா’ என்ற இடம். வடமேற்கே பதினான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ‘வாதீ நக்லா’ என்ற இடம். மேற்கே பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘ஹுதைபியா’ எனும் இடம் ஆகியவையே அந்த ஐந்து எல்லைகளாகும். இந்த ஐந்து எல்லைகளுக்கு உட்பட்ட இடங்கள் ஹரம் எனும் புனிதமான இடங்களாகும்.
இந்த இடங்களின் புனிதத்தை எவ்வாறு மதிப்பது?
“நிச்சயமாக அல்லாஹ் மக்கா நகரை புனித பூமியாக்கியிருக்கிறான். மனிதர்கள் அதைப் புனிதமானதாக ஆக்கவில்லை. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் அங்கே இரத்தத்தை ஓட்டுவதும், இங்குள்ள மரங்களை வெட்டுவதும் ஹலால் இல்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ
மக்காவுக்குச் செல்லும் ஒழுங்குகள்
மக்காவுக்குள் நுழைவதற்கு முன் குளித்துக் கொள்வது நபி வழியாகும். ஹரம் எல்லையை அடைந்ததும் தல்பியாவை நிறுத்திக் கொள்ளவேண்டும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரமை அடைந்ததும் தல்பியாவை நிறுத்திக் கொள்வார்கள். ‘தூதுவா’ என்ற இடத்தில் இரவில் தங்கிவிட்டு அந்த இடத்திலேயே சுப்ஹு தொழுது, பிறகு குளிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர் : நாபிவு நூல் : புகாரி
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home