21 November 2013

நம் இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை..



இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கம் பெறுவது இருக்கட்டும். 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி இன்று புதுக்கோட்டை மாவட்ட செங்கல் சூளையில் தினக்கூலி 200 ரூபாய்க்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் செய்தியைத் தெரிந்துகொள்வோம். ஹார்மோன் பிரச்சினையால் சாந்தி பெண்ணா, ஆணா என்ற குழப்பத்தில் அவருடைய பதக்கம் பறிக்கப்பட்டது. அவர் பெண்தான் என்று நிரூபிக்கவோ, அவருக்குரிய வாய்ப்புகளை வழங்கவோ இந்திய விளையாட்டுத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரைப் போலவே சர்ச்சைக்குள்ளான தென்னாப்பிரிக்க விளையாட்டு வீராங்கனை கேஸ்டர் செமன்யாவை அந்நாட்டு விளையாட்டுத் துறை பெண் என நிரூபித்திருப்ப துடன், லண்டன் ஒலிம்பிக்கில் தென்னாப்பிரிக்காவின் கொடியை ஏந்திச் செல்லும் பெருமையையும் வழங்கியிருக்கிற து. நம் நாட்டில் அரசியல் விளையாட்டு மட்டுமே கொடிக்கட்டிப் பறக்கிறது...! இதில நீங்கள் இந்தியாவை வல்லரசாக்க வேற போறீங்க.. முதல்ல எங்க சோத்துக்கு வழி பண்ணுங்க அரசியல் மூடர்களா...
-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home