29 November 2013

‪#‎தாடிக்காக_வேலையை_இழக்கும்_சீக்கிய_சமுதாயமும்‬ வேலைக்காக தாடியை இழக்கும் ‪#‎முஸ்லிம்_சமுதாயமும்‬ !!!



தாடியை விட்டு விடுங்கள் மீசையக்
கத்தரியுங்கள், யூத கிரிஸ்தவர்களுக்
கு மாறு செய்யுங்கள்

என நபி ஸல் அவர்கள்
கட்டளையை மறந்து..........இன்று

மனைவிக்கு பிடிக்கவில்லை,
மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை ,

மேலதிகாரிக்கு பிடிக்கவில்லை என்பதற்காகவும்,

நேர்முகத் தேர்வுக்கு செல்லும்
போது வேலைக்காக விசாவுக்காக...............

என
தாடியை மழித்து விட்டு இஸ்லாமிய
அடையாளம் ஏதுமின்றி மாற்றாருக்கு ஒப்பாக
மழுமழுவென்ற முகத்துடன் வலம்
வருகின்றனர்!

ஆனால் ....

சீக்கியர்கள் இதில் உறுதியுடன்
நின்று போராடுவதால் சட்டங்கள் அவர்களிடம்
சரணடைகின்றன!


உலகம் முழுதும் சட்டப் போரட்டங்களின்
மூலமாக தங்கள்
போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டு வருவதை அன்றாடம்
அறிகின்றோம்!

உலக நாட்டில் உள்ளராணுவங்களும், காவல்துறையும்
அவர்களுக்காக தங்கள் விதிகளைத்
தளர்த்தி கொள்கிறார்களேயன்றி
அவர்கள் ஒரு போதும் தங்களின்
மதத்தை விட்டுக் கொடுப்பதில்லை!


தாடியால் தங்கள் முன்னேற்றம் பாதிக்கப்படும்
என இன்றைய இளைஞர்கள் கருதுகின்றனர்!


உலக நாடுகளில் எல்லாம் சீக்கியர்கள் உயர்
பதவிகளை வகிப்பதற்கும் மன்மோகன் சிங்,
மாண்டெக் சிங்,ஜைல் சிங்
போன்றோருக்கு அவர்களின் தாடி தடையாக
இல்லை என்பதை உணர வேண்டும்!

கொள்கைக்காக உறுதியுடன் போராடினால்
உலகம் உங்களிடம் பணியும்
என்பதற்கு பின்வரும் சம்பவம் சாட்சியாக
இருக்கிறது!

இதோ ... இந்த செய்தியை படியுங்கள்...

நியூயோர்க்: தாடி வைத்திருப்பதைக்
காரணம் காட்டி, ஒரு நிறுவனத்தால்
பணி இல்லை என்று நிராகரிக்கப்பட்
டவருக்கு இழப்பீடு தர குறித்த நிறுவனம்
முன்வந்துள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய
வம்சா வழியை சேர்ந்த சீக்கியரான குர்ப்ரீத்
கெர்ஹா என்பவர், நியூஜெர்சி நகரில் உள்ள
கார் நிறுவனத்தின் பணிபுரிவதற்காக
நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற
அதே வேளையில், அவர் வைத்திருந்த
தாடியை நீக்கிவிட்டு 'டிரிம்மாக'
வேலைக்கு வர வேண்டும் என
அந்நிறுவனத்தின் மேலாளர் உத்தரவிட்டார்.


ஆனால்
"தாடியை எடுக்க முடியாது" என
குர்ப்ரீத் கெர்ஹா மறுத்துவிட்டார்.
"அப்படியென்றால்,
உங்களுக்கு இங்கே வேலை தர முடியாது"
என்று அந்நிறுவனம் மறுத்துவிட்டது.

இதனையடுத்து, அமெரிக்காவில் வாழும்
சீக்கியர் அமைப்புகள் ஒன்றிணைந்து,
பாதிக்கப்பட்டவர் சார்பில்
நியூஜெர்சி நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தனர்..

மேலும் மத கோட்பாடுகளில் தலையிட்டு கார்
டீலர் நிறுவனம்
தன்னை வஞ்சித்து விட்டதாகவும்,
தனக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட
வேண்டும் எனவும் குர்ப்ரீத் கெர்ஹா சார்பில்
வாதாடப்பட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வரும்
இவ்வழக்கின் திருப்புமுனையாக,
பாதிக்கப்பட்டவருக்கு 50 ஆயிரம் அமெரிக்க
டாலர்கள் இழப்பீடு தருவதாகவும்,
வழக்கை மீளப்பெற்றுக் கொள்ளுமாறும்,
பணியை நிராகரித்த கார் நிறுவனம் குர்ப்ரீத்
கெர்ஹாவைக் கேட்டுக்கொண்டுள்ளது!

சிந்திப்போம்...!
செயல் படுவோம்..!

நன்றி :- M.a.g.m Muhassin
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home