பிரசவத்தை எளிதாக்க கார் மெக்கானிக் கண்டுபிடித்த புது கருவி.
ஓடன் கருவி என்று பெயரிடப்பட்ட இந்த
கருவி அர்ஜென்டினாவை சேர்ந்த ஜோர்ஜ் ஓ‘டன் என்ற 59 வயது கார் மெக்கானிக் கண்டுபிடித்தது. இதன்மூலம் எளிதாக பிரசவம் நடக்க கர்ப்பிணி பெண்களுக்கு
மருத்துவர்கள் உதவ முடியும். இதில் கையால் பிடிக்கும் வகையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பை உள்ளது. உராய்வை
குறைக்க லூப்ரிகன்ட் செலுத்தப்பட்ட இந்த பை
காற்று நிரப்பும் வகையில் உள்ளது. இதன்மூலம் சிக்கலான பிரசவத்தில் குழந்தை வெளிவராத போது குழந்தையின்
தலையை சுற்றி இந்த பிளாஸ்டிக் பையை வைத்து
காற்றால் நிரப்பவேண்டும். இதனால் தலையை சுற்றி பிளாஸ்டிக் பை கெட்டியாக பிடித்துக்கொள்ளும், பின்னர் மெதுவாக வெளியில் இழுத்தால் குழந்தை பத்திரமாக பிரசவிக்கப்படும்.
இதன்மூலம் மிக சிக்கலான பிரசவங்கள் கூட எளிதாக நடைபெறுகிறது.இந்த கருவியை உலக சுகாதார நிறுவனம் அர்ஜென்டினா கர்ப்பிணி பெண்களிடம் சோதித்துப் பார்த்ததில், சுகமான பிரசவம் நடந்துள்ளது. இதனால் சிசேரியன் அறுவை சிகிச்சைகள் குறையும். இந்த முறையை இந்தியா சீனா மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் பயன்படுத்த உள்ளோம். இதன்மூலம் பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்களினால் இறக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்ற முடியும். ஒரு ஆண்டில் பிரசவ நேர சிக்கல்களினால் பிறக்கும் குழந்தைகளில் 56 லட்சம் குழந்தைகள், 2,60,000 பெண்கள் இறக்கிறார்கள். இதைத் தயாரிக்க 50 டாலர்கள் ஆகிறது. இந்த கருவியை கனடாவை சேர்ந்த கிரான்ட் சேலஞ்சஸ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பென்டன் டிக்கின்சன் கம்பெனியுடன் சேர்ந்து தயாரிக்க உள்ளது. ஏழை நாடுகளில் இந்த கருவி அதிக அளவில் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
-அஷ்ரப்இதன்மூலம் மிக சிக்கலான பிரசவங்கள் கூட எளிதாக நடைபெறுகிறது.இந்த கருவியை உலக சுகாதார நிறுவனம் அர்ஜென்டினா கர்ப்பிணி பெண்களிடம் சோதித்துப் பார்த்ததில், சுகமான பிரசவம் நடந்துள்ளது. இதனால் சிசேரியன் அறுவை சிகிச்சைகள் குறையும். இந்த முறையை இந்தியா சீனா மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் பயன்படுத்த உள்ளோம். இதன்மூலம் பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்களினால் இறக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்ற முடியும். ஒரு ஆண்டில் பிரசவ நேர சிக்கல்களினால் பிறக்கும் குழந்தைகளில் 56 லட்சம் குழந்தைகள், 2,60,000 பெண்கள் இறக்கிறார்கள். இதைத் தயாரிக்க 50 டாலர்கள் ஆகிறது. இந்த கருவியை கனடாவை சேர்ந்த கிரான்ட் சேலஞ்சஸ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பென்டன் டிக்கின்சன் கம்பெனியுடன் சேர்ந்து தயாரிக்க உள்ளது. ஏழை நாடுகளில் இந்த கருவி அதிக அளவில் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home