வேறு ஆணிடம் சோரம் போவதுதான் கணவனுக்கு மனைவி செய்யும் மிகப்பெரிய கொடுமை
மும்பை:வேறு ஆணிடம் சோரம் போவதுதான்
கணவனுக்கு மனைவி செய்யும் மிகப்பெரிய கொடுமை என்று மும்பை ஐகோர்ட் கூறியுள்ளது.இந்த வழக்கில்
சம்பந்தப்பட்ட தம்பதிக்கு 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு குழந்தையும் பிறந்தது. 2005ம் ஆண்டு காசநோயால் பாதிக்கப்பட்ட மனைவி தன் தாய் வீட்டுக்கு
சென்றார். 2005ம் ஆண்டு ஜூன் மாதம் தாய் வீடு
சென்றவர் 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் கணவன் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது அவர் 3 மாதம் கர்ப்பமாக இருந்தார். இடைப்பட்ட காலத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே
தாம்பத்திய உறவு நடக்காத நிலையில் மனைவி கர்ப்பமாக
இருப்பது கணவனை மனதளவில் பெருமளவில் பாதித்தது.
எனவே விவாகரத்து கோரி பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் விவாகரத்து வழங்குவதை மனைவி எதிர்த்தார். மனைவியான தனக்கு கணவன் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு என்றும் வாதிட்டார். அதே நேரத்தில் இரண்டாவது குழந்தைக்கு தான் தந்தை அல்ல என்று நிரூபிக்க மரபணு சோதனை செய்ய வேண்டும் என்று கணவன் கோரினார். ஆனால் மரபணு சோதனை செய்ய மனைவி மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து கோர்ட் கணவனுக்கு விவாகரத்து வழங்கியது.இந்த தீர்ப்பை எதிர்த்து மனைவி மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் வி.கே.தகில்ரமணி மற்றும் வி.எல். அச்சிலியா ஆகியோரை கொண்ட பெஞ்ச், விவாகரத்து வழங்கி பாந்த்ரா கோர்ட் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. இரண்டாவது குழந்தைக்கு கணவன் தந்தை அல்ல என்பதால் அதற்கு பராமரிப்பு செலவு வழங்க தேவையில்லை என்றும் கூறினர்.மனைவி ஒருமுறை சோரம் போனாலே விவாகரத்து வழங்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வேறு ஆணிடம் சோரம் போவது ஒரு கணவனுக்கு மனைவி செய்யும் மிகப்பெரிய கொடுமை என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
-அஷ்ரப்எனவே விவாகரத்து கோரி பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் விவாகரத்து வழங்குவதை மனைவி எதிர்த்தார். மனைவியான தனக்கு கணவன் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு என்றும் வாதிட்டார். அதே நேரத்தில் இரண்டாவது குழந்தைக்கு தான் தந்தை அல்ல என்று நிரூபிக்க மரபணு சோதனை செய்ய வேண்டும் என்று கணவன் கோரினார். ஆனால் மரபணு சோதனை செய்ய மனைவி மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து கோர்ட் கணவனுக்கு விவாகரத்து வழங்கியது.இந்த தீர்ப்பை எதிர்த்து மனைவி மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் வி.கே.தகில்ரமணி மற்றும் வி.எல். அச்சிலியா ஆகியோரை கொண்ட பெஞ்ச், விவாகரத்து வழங்கி பாந்த்ரா கோர்ட் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. இரண்டாவது குழந்தைக்கு கணவன் தந்தை அல்ல என்பதால் அதற்கு பராமரிப்பு செலவு வழங்க தேவையில்லை என்றும் கூறினர்.மனைவி ஒருமுறை சோரம் போனாலே விவாகரத்து வழங்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வேறு ஆணிடம் சோரம் போவது ஒரு கணவனுக்கு மனைவி செய்யும் மிகப்பெரிய கொடுமை என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home