படித்து பாருங்கள் சிந்திப்பீர்கள்
1. பணக்காரனாக
மாறிவிட்டான் பாகன், இன்னும் பிச்சை எடுகிறது யானை.
2. ஆணி குத்திய காலுடன்
செருப்பு தைக்கும் சிறுவன்.
3. அழைத்த குரலுக்கு
ஒடிவர ஆள் இல்லை, நெடுச்சாலை வாகன விபத்தில்,
உயிருக்கு போராடி கொண்டு இருந்த
ஆம்புலன்ஸ் டிரைவர்.
4. எரிவாயீவு விலை
ஏற்றத்தை கண்டித்து கட்சியினர் எரித்துவிட்டனர்,
ஏழைகளின் குடிசைகளை.
5. குங்குமம் வார இதழை
விரும்பி படிக்கும் வாசுகி இன்று விதவையானாள்.
6. பட்டினி சாவை
எதிர்த்து, இன்று ஊர் மக்கள் உண்ணாவரதம்.
7. அதிக வலி எடுக்கும்
போது அம்மா என்று கதற விடுகிறது அனாதை குழந்தைகள்.
8. அரசியல்வாதிகள் செய்த
லஞ்ச ஊழலை மறைக்க லஞ்சம் வாங்கினார்,
லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி.
9. ஆயிரம் பெற்றோர்கள்
இருந்தும் முத்தான் ஒரு குழந்தைகளும் இல்லை,
முதியோர் இல்லத்தில்.
10. வெள்ளைசாமிக்கு, கருப்புசாமி போல நல்ல
வெள்ளை நிறமாக இருக்கவேண்டும் என்கிற ஆசை.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home