21 November 2013

நபி இஸ்ஹாக் அலைஹி வசல்லம் வரலாறு



பிஸ்மில்லாகிர் ரஹ்மானிர் ரஹீம்

" அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹுவின் திரு பெயரால் ஆரம்பம் செய்கிறேன் "

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

ரப்பி சித்னி இல்மன்

யா அல்லாஹ் எங்களது அறிவாற்றலை அதிகப்படுத்துவாயாக ..

நண்பர்களே அல்லாஹுவின் நெருக்கத்தை நாட விரும்பும் என் மார்க்க சகோதரர்களே மக்களை மக்களாக பார்க்கும் நல்ல  உள்ளங்களே அனைவரின் மீதும் அல்லாஹுவின் சாந்தியும் சமாதானமும் உண்டகுவதாகுக ..

நண்பர்களே இன்றையதினம் இன்ஷா அல்லா நாம் வரலாறு தொடர்ச்சியில் காணவிருப்பது நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களது இரண்டாவது புதல்வரான நபி இஸ்ஹாக்  அலைஹி வசல்லம் அவர்கள் மேலும் நாம் நாம் இவருடைய வரலாறை தனிமைபடுத்தி பார்க்க முடியவில்லை அல்லா இவரின் வரலாறை மிக விரிவாக  தனது திருமறையில் பதியவில்லை அது ஏன் என்றும் நமக்கு வினவ வாய்ப்புள்ளது என்னிடம் அதை கேட்டால் நான் அல்லா என்ன சொன்னானோ அதுதான் "ஆமான்ன சள்ளன்ன " கட்டுப்பட்டோம் ஆஜரானோம் ஆனால் நமது மாற்று மத நண்பர்களுக்கு இதனை தெளிய வைக்க  வேண்டியது நமது கடமையாகவும் உள்ளது அதற்காக சிறு விளக்கத்தை நான் உங்களுக்கு தர விரும்புகிறேன்

அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகிறான் நாம் ஒவ்வொரு கூடத்திற்கும் ஒவ்வொரு மொழிக்கும் நாம் நம்முடைய தூதர்களை அனுப்பாமல் விட்டதில்லை மேலும் மார்க்க  அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்  அல்லாஹ் இவ்வுலகில் ஒருலட்சத்து நாற்பதாயிரத்திற்கும்  அதிகமான நபிமார்களை அனுப்பி இருக்கிறான் என்று  இவ்வாறு இருக்க அல்லாஹ் தனது திருமறையில் தனது வார்த்தையால்  இருபத்தி ஐந்து நபி மார்களின் பெயர்களை மட்டும்தான் குறிப்பிடுகிறான் நமது எண்ணம் போல் அல்லாஹ் தனது அணைத்து நபி மார்களின் பெயரையும் அவர்களது வரலாறையும் குரிபிட்டிருந்தான் என்றால்  குரான் 144 அத்தியாயமாக 30 ஜூஸ்சுவாக  மாறாக 3000 ஜூஸ்சுவாக இருக்கும் ஆனால் இன்றளவில் நாம் இந்த 30 ஜூஸ் சுவையே  பாரமாக இருக்கும் மக்கள் மத்தியில் அல்லாஹுஅக்பர் 3000 ஜூஸ் இருந்தால் நீங்களே உங்களின் கேள்வியை உங்களிடமே கேட்டுகொல்லுங்கள் "படைதவனிர்க்கு தெரியும் படைபினத்தின் பலவீனம் " ஆதலால் நமது பலவினத்தை உணர்ந்த அல்லாஹ் அவர்களுக்கு சிரமத்தை கொடுக்ககூடாது என்பதற்காக அவன் தனது விருபத்தின்படி எந்த சமூகம் மிகவும் மோசமாக வாழ்ந்ததோ அவர்களை  வைத்து நமக்கு படிப்பினை வழங்குவதற்காக நமக்கு இவ்வாறு அல்லாஹ் வழங்கினான் என்பதை நான் உணருகிறேன் அனைத்தையும் அல்லாஹுவே அறிந்தவன் நமக்கு அவனே போதுமானவன் .

இவ்வாறு திருமறையில் அல்லாஹ் குறைவான இடங்களில் நபி இஸ்ஹாக்  அலைஹி வசல்லம் அவர்கள் வரலாறை குரிபிட்டாலும் அல்லாஹ் அந்த வரலாறை நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களுடம் இணைத்தே குறிப்பிடுகிறான் . மேலும் அல்லாஹ் நபி இஸ்ஹாக்  அலைஹி வசல்லம் அவர்களின் வரலாறு குறைவாக இருந்தாலும் அல்லாஹ் அதன் மூலமும் நமக்கு படிப்பினை கொடுத்திருக்கிறான் மாஷா அல்லாஹ் .

நீங்கள் கிருஸ்துவர்களையும் யூதர்களின் கூற்றையும் நீங்கள் கண்டால் இப்ராஹீமுக்கு ஒரு மகன்தான் அவர் நபி இஸ்ஹாக்  அலைஹி வசல்லம் அவர்கள் மட்டுமே என்ற கூற்று இருக்கிறது நபி இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களை பற்றி கூறும் பொழுது அப்படி ஒரு பிள்ளை இல்லை என்று வாதிடும் கூட்டத்தையும் நாம் கண்டிருக்கலாம் மேலும் ஒரு கூட்டம் அவர்களுக்குள் நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களுக்கு இரு புதல்வர்கள் ஒருவர் நபி இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்கள் மற்றும் ஒருவர் நபி இஸ்ஹாக்  அலைஹி வசல்லம் அவர்கள் மேலும் அறுத்து பலியிட துணிந்தது இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களை இல்லை நபி இஸ்ஹாக்  அலைஹி வசல்லம் அவர்களை தான்  என்று மட்டமான பொய்யை பரப்பி வருகிறார்கள் ஏன் இவ்வாறு பரப்புகிறார்கள் என்ற எண்ணம் நமக்கு தோன்றலாம் . சற்று சிந்தித்தால் உங்களுக்கு விடை கிடைக்கும் எனக்கு கிடைத்த விடை அல்லாஹ் தௌராதிலும்  சரி இன்ஜீலும் (bible) சரி இருதிநபியின் அடையாளத்தை குறிப்பிடாமல் விட்டதில்லை  அவ்வாறு இருக்க அவர்கள் வாதிடுவது தங்களுக்கு அனுப்பப்பட்ட நபியையே இறுதிநபியாக மக்களுக்கு காட்டவேண்டும் என்பதற்காகவே என்று நான் கருதுகிறேன் இப்பொழுது சிலபேர் கூற்றுபோல் இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களை அவர்கள் நம்பினால் அவர்கள் வழியாக வந்த ஒரே நபி நமது கண்மணி நாயகம் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மட்டுமே அப்பொழுது நமது நாயகத்தின் நபித்துவத்தையும்  அவர்கள் நம்பியே ஆக வேண்டும் மேலும் இரண்டாவது கூற்று படி நபி இஸ்ஹாக்  அலைஹி வசல்லம் அவர்களை அறுத்து பலியிட துணிந்தவர்கள் என்றால் அவர்களது பரம்பரையில்தான் நபி யாகூப் அலைஹி வசல்லம் நபி மூசா (mosus)அலைஹி  வசல்லம் நபி  ஈசா(jesus) அலைஹி வசல்லம்
இவர்கள் எல்லாம் தோன்றினார்கள் என்பது நாம் அறிந்ததே . இவ்வாறு இருக்க ஒரு சின்ன கருத்துதான் தங்களுடன்  வரவேண்டும் என்பதற்காக தவறான வழிகளில் மக்களை பயன்படுத்திகொன்டர்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை இந்த செயல் இன்றளவில் நடந்துகொடிருகிறது நமது சமூகத்திலும் உங்களது ஈமானை பாதுகாத்து கொல்லுங்கள் நண்பர்களே
நமது சல்லல்லாஹு அலைஹி  வசல்லம் கூறிய பொன் மொழிகலை  இன்று தவறாக உபயோகித்து கொள்ளும் கூட்டங்கள் நிறைய வந்துவிட்டது இதைதான் நபியவர்கள் கூறினார்கள் " பிற்காலத்தில் ஒரு கூட்டம் வரும் அவர்கள் தங்களது வாதத்தில் குரானையும் ஹாதீதையும் தங்களது வாதங்களாக எடுத்து வைப்பார்கள் ஆனால் அவர்களது ஈமான் அவர்களது தொண்டைக்கும் நாவிற்கும் இடையில்தான் இருக்கும் என்று கூறியதாக மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்  மேலும் நாம் அனைவரம் அறிந்த பிரபலமான ஹதீத் நபி முகம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள் யூதர்கள் 72 கூட்டமாக பிரிந்தார்கள் எனதுகூட்டம் 73 கூட்டமாக பிரிவார்கள் அதில் ஒரு கூட்டம் தான் சொர்க்கம் செல்லும் என்று அப்பொழுது நபிதோழர்கள் யா ரசூலுல்லாஹ் அந்த ஒருகூட்டம் யார் என்று வினவினார்கள் நானும் எனது தோழர்களும் எந்த  வலி சென்றோமோ அதன் வழியை தேர்ந்தெடுத்தவர்கள் அந்த வழிக்கு மாற்றமாக எது இருந்தாலும் அதற்கும் இஸ்லாத்திற்கு எந்த சம்மந்தமும் இல்லை " அல்லாஹ் பாதுகாப்பானாக இன்றளவில் நபி தோழர்களை திட்டிகொண்டிருந்த சியா என்ற வலிகேட்டகூட்டதின் நவீனமாக முஸ்லிம்களாக தங்களது பெயர்களில் மட்டும் சூட்டிக்கொண்டு அந்த வழிகெட்ட கூட்டத்தின் வாரிசுகாளாக உருவெடுத்திருக்கும் பல தலைவர்களை நாம் கண்டிருக்கிறோம் ஆதலால் சகோதரர்களே உங்களை நீங்கள் பாதுகாத்து கொல்லுங்கள் மேலும் அல்லாவின் உதவியை நாடுங்கள்  அல்லாஹுவின் பக்கம் விரைன்தொடுங்கள் மறுமை நமக்கு நெருக்கமாக வந்துகொண்டிருக்கிறது ..
யா அல்லாஹ் எங்களுக்கு நேர்வழியை கட்டுவாயாக . ஆமீன் எங்களுக்கு குழப்பங்களில் இருந்து தெளிவு பெற நீ உதவி செய்வாயாக ஏது உண்மை ஏது பொய் என்று பிரித்து பார்க்கு அறிவாற்றலை எங்களுக்கு அதிகப்படுத்துவாயாக ஆமீன் நாங்கள் அறியாமல் தவறு செய்துகொண்டிருந்தால் அதனையும் எங்களுக்கு விளங்க உதவி செய்வாயாக ஆமீன் எங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துகொல்வாயாக எங்களை பாதுகாக்க நீயே போதுமானவன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் .
இவ்வாறு நமது கண்மணி ரசூலை அவர்கள் நிராகரிக்க யூதர்களும் கிறிஸ்துவர்களும் காரணம் தேடிக்கொண்டிருகிரார்கள் இந்த சம்பவங்களை பற்றி அல்லாஹ் தனது திருமறையில் நீங்கள் என்னிகொண்டீர்களா நிச்சயமாக இப்ராஹீம் இஸ்மாயில் இஸ்ஹாக் யாகூப் இவர்களுடைய சந்ததியினரும் யூதர்களாக அல்லது கிறிஸ்துவர்களாக இருந்தார்கள் என்று என்னிக்கொண்டீர்களா இதனை நன்கறிந்திருப்பது நீங்களா அல்லது அல்லாஹுவா என்று நபியே நீர் கேட்பீராக அன்றியும் இதைப்பற்றிய அல்லாஹுவிடம் இருந்து வந்த சாட்சியத்தை மறைபவனைவிட அணியாகாரன் யார் நீங்கள் செய்பவைகளை பற்றி அல்லாஹ் கண்டுகொள்ளதவன் இல்லை .

மேலும் நபி இஸ்ஹாக்  அலைஹி வசல்லம்  அவர்களது பிறப்பிலேயே அல்லாஹ் நமக்கு படிப்பினையை வழங்குகிறான் அல்லாஹ் தனது மலக்கு  மார்களை நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களிடம் அனுப்பினான் நாம் அனைவரும் அறிந்ததே நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்களை பற்றி இவரை பற்றி சரிவர அறியாமல் இருந்தால் முந்தய பதிவில் நாம் பதிந்திருக்கிறோம் அதனை நீங்கள் படித்துகொல்லுங்கள் . நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் விருந்தாளிகளின் தந்தை என்ற புனை பெயரும் அவருக்கு உண்டு என்பது நாம் அறிந்ததே அவர்கள் முதலில் மலக்குகள்  என்று அறியாமல் அவர்களை அழைத்து கறிசமைத்து விருந்து கெடுத்தார் அவர்கள் பேசிகொண்டே இருக்கார்கள் ஆனால் அவர்களின் கை உணவின் பக்கம் நெருங்கவில்லை அந்த சமயத்தில் நமது தந்தை இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் சற்று அச்சம் கொள்கிறார்கள் அவர்களிடம் நீங்கள்  யார் ஏன் இங்கு வந்தீர்கள் என்று வினவ தொடங்கிவிட்டார் அதற்கு அந்த மலக்குகள் நபி இப்ராஹீமே அச்சமுற வேண்டாம் நங்கள் இருவரும் மலக்குகள் நாங்கள் உனது சகோதரனின் மகனான லூத் அலைஹி வசல்லம் அவர்களது சமூகத்தை அளிக்க அல்லாஹ் எங்களை அனுப்பியிருக்கிறான் என்று கூறினார்கள் லூத் அலைஹி வசல்லம் யார் அதனை இவர்களிடம் ஏன் சொல்லவேண்டும் இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் நாம் லூத் அலைஹி வசல்லம் அவர்களது வரலாறை பதியவிருக்கிறோம் அப்பொழுது காணலாம் மேலும் அந்த மலக்குகள் கூறினார்கள் மேலும் அல்லாஹ் உங்களுக்கு ஒரு சுப செய்தி கூற சொன்னான் அது என்ன வென்றால் உங்களுக்கு சாரா அம்மையாருக்கும் ஒரு அழகான பய்யன் பிறப்பான் அவரது பெயர் நபி இஸ்ஹாக்  அலைஹி வசல்லம் மேலும்  அல்லாஹ் பல நபிமார்கள் இவர்களது சந்ததியினர்களில்  உருவாவார்கள் என்றார்கள் .

அதற்கு நமது தாய் சாரா அம்மையார் என்னுடைய கேடே நானோ மாதவிடாய் முடிந்து கிளவியான நிலையில் இருக்கிறேன் மேலும் எனது கணவரும் கிலடுதட்டிய வயதினராக இருக்கிறார் இப்பொழுது எனக்கு குழந்தை பிறக்குமா என்று அவர் கேட்டார் அதற்கு வருகை தந்த மலக்குகள் அவர்கள் கூறினார்கள்  என்ன நீங்கள் அல்லாஹுவின் கட்டளையை அட்சரியபடுகிராயா அல்லாஹுவுடைய அருளும் அவனின் பாக்கியங்களும் இவ்வீட்டுலுள்ள உங்க மீதுள்ளன .நிச்சயமாக அவனே புகழுக்கு உரியவன் என்று அவர்கள் கூறியதாக  திருக்குர்ஆன்  சாட்சி  கூறுகிறது மாஷா அல்லாஹ் இந்த சம்பவம் மூலம் அல்லா நமக்கு என்ன
பாடம் கற்பிக்க விருபுகிறேன் என்பதை நான் விளங்கியது அல்லாஹ் தனது குழந்தை செல்வங்களை தனது புறத்திலிருந்து தான் நாடியவருக்கு தான் நாடிய நேரத்தில் கொடுக்கிறான் என்பதுதான் . ஆனால் இன்று நாம் காண்கிறோம் ஏனைய மதத்தவர்களை விட்டுவிடுவோம் நமது மார்க்க சகோதரர்கள் அல்லா பாதுகாப்பானாக இந்த குழந்தை செல்வதிற்க்காக அடங்கி இருக்கும் அல்லாஹுவின் நல்லடியார்களிடம் கேட்பது . மேலும் ஔலியா ஷெய்க் தன்ங்கள் போன்ற பல பெயர்களுடன் போலியானவர்கள் இவ்வேடத்தில் சுத்திக்கொண்டிருக்கிரார்கள் அத்தகையவர்களிடம் பொய் சொல்லுவது மேலும் மருத்துவரிடம் பொய் நீங்கள்  நாடினால் மட்டுமே எங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் போன்ற பலமாதிரியாக தங்களது  படைத்தவனிடம் கேட்காமல் படைபிடம்  கேட்கிறார்கள் அல்லா பாதுகாப்பானாக இத்தகைய பாவங்களிலிருந்து  என்னையும் உங்களையும் நமது மார்க்க சகோதரர்களையும்  மேலும் ஏனைய மக்களையும்  . இதற்காக நான் உங்களை மருத்துவரிடம் செல்லவேண்டாம் என்று கூறவில்லை இஸ்லாம் மருத்துவத்திற்கு தனி மதிப்பு அளிக்கிறது நான் கூறவருவது மருத்துவம் செய்யுங்கள் ஆனால் ஹாலிக்கை  (படைத்தவனை ) மறந்து செய்யவேண்டாம் என்றுதான் கூறுகிறேன் . அவனே குழந்தை செல்வதை அருள்பவன்  அவனின் உதவி இல்லாமல் உலகமே ஒன்றிணைந்தாலும்  ஒரு இலையை கூட பிடுங்க முடியாது என்பதே உண்மை.

மேலும் நாம் தலைப்பிற்கு செல்வோம் இவ்வாறு நபி இஸ்ஹாக்  அலைஹி வசல்லம் அவர்களை பற்றி சுபச்செய்தி செய்த மலக்குகளிடம் நமது தந்தை இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் லூத் அலைஹி வசல்லம் அவர்களின் சமூகத்தை பற்றி தர்க்கம் செய்ய தொடங்கினார்கள் ஏன் ஏன்றால் லூத் அலைஹி வசல்லம் அவர்கள் இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களது தம்பி மகன் மேலும் தனது  மனைவி சாரா அம்மையாரின் சகோதரன் என்பதால் சாரா அம்மையாரும்  வருந்த ஆரம்பித்துவிட்டார்கள் மேலும் இந்த சம்பவத்தை அல்லா தனது திருமறையில் கூறிவிட்டு அல்லாஹ் கூறுகிறான்  மேலும் இப்ராஹீம் சஹிப்புதன்மையுடயவர் இளகிய மனமுடையவர் ஏதற்கும் அல்லாஹுவின் பாலே திரும்பக்கூடியவர் மாஷா அல்லாஹ்  . மேலும் அங்கு வருகைதந்த மலக்குகள் கூறினார்கள் நபி  இப்ராஹீமே (அலைஹி வசல்லம் ) நீர் இந்த விசியத்தை புரகநித்துவிடுவ்வீராக ஏன் என்றால் அல்லாஹுவின் புறத்திலிருந்து கட்டளை வந்துவிட்டது, நிச்சயமாக அவர்கள் தட்டமுடியாத வேதனை அவர்களை வந்தே தீரும் என்று அவர்கள் கூறி சென்றுவிட்டார்கள்

மேலும் நபி இஸ்ஹாக்  அலைஹி வசல்லம் அலைஹி வசல்லம் அவர்களின்  சந்ததிகளில் தான் நிறைய நபிமார்கள் வந்ததாக மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் இவ்வாறு அல்லாஹ் பலஇடங்களில் சிலாகித்து குரிப்பிடுக்றான் மேலும் அல்லா கூறுகிறான் நபி இஸ்ஹாக்  அலைஹி வசல்லம் அவர்கள் அல்லாஹுவின் கட்டளையை நிறைவேற்றும் ஆற்றல் பெற்றவராகவும் மேலும் அல்ல்ஹுவின் மார்க்க நுணுக்கங்களை கண்டறியும் ஆற்றல் பெற்றவராக அல்லாஹ் மேலும் மேலும் இவரை சிலாகித்து கூறுகிறான்,,

மேலும் இவருக்கு புதல்வராய்  நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களை அல்லாஹ் அருளினான் இவ்வாறு  அல்லாஹ்  சில இடங்களில்  இவரை பொறுமையாளர்  என்றும் சிலாகிக்கிறான்  மேலும் இவரைப்பற்றி அல்லாஹுவே அனைத்தையும் அறிந்தவன் இவரை பற்றி இன்ஷா அல்லாஹ்  நாம் முடிந்தால் தேடிப்பார்ப்போம் இல்லாவிடில் இன்ஷா அல்லாஹ் மறுமை  நாளில் கேட்டு தெரிந்துகொள்வோம் அல்லா நாடினால் . இன்ஷா அல்லாஹ் .
மாஷா அல்லாஹ் இத்துடன் நபி இஸ்ஹாக்  அலைஹி வசல்லம் அவர்ளின் வரலாறு முடிவுற்றது எனது சிறிய தேடலிலிருந்து இன்ஷா அல்லாஹ் மேலும் நாம் தேடமுயற்சிப்போம் . இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் நபி லூத் அலைஹி வசல்லம் அவர்களது பதிவை இன்ஷா அல்லாஹ் அறிய முயற்சிப்போம் .
இதில் எனக்கு அறியாத பல சம்பவங்கள் உள்ளது என்பதே உண்மை ஆதலால் நாம் நம் வரலாறுகளை தேட முற்படுவோம் . இல்லையென்றால் நம் சுய அடையாளத்தை தொலைத்து வெறும் ஜடமாக வாழும் நிலைமை ஏற்பட்டாலும் அச்சரியம் இல்லை ஏன் என்றால் இன்றைய இந்திய முஸ்லீம்களின் நிலை அதுதான்


யா அல்லாஹ் நாங்கள் எதனை அறிய முற்பட்டோமோ அதனை எங்களுக்கு மேலும் மேலும் தெளிவு படுத்துவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு வலுவான ஈமானை வழங்குவாயாக  ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு இந்திய முஸ்லீம்களுக்கும் பாலஸ்தீனில் உன்னுடைய எதிரிகளான யூத நாசராநிகளிடம்  போர் புரியும் என் தாய்ம்மார்கள் தந்தைமார்கள் என் சகோதரிகள் என் சகோதரர்கள் மேலும் என் சொந்தம்மான பிஞ்சிலேயே உனக்காக சஹீத் என்னும் உயர் அந்தஸ்திற்காக  போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் மேலும் காஸ்மீரில் இராக்கில் சிரியாவில் பர்மாவில் அஸ்ஸாமில் குஜராத்தில்  போன்ற உலகம் முளுவதும் உன் தீனுக்காக போராடிக்கொண்டிருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் வெற்றியை வழங்குவாயாக . ஆமீன் அவர்களையும் அவர்களின் உடமைகளையும் பாதுகாப்பாயாக ஆமீன்
எங்களை யூத நாசராநிகளின் மற்றும் சைத்தானின் சூழ்ச்சிகளில் எங்களை பாதுகாப்பாயாக ஆமீன்
மரணிக்கும் பொழுது முஸ்லீமாக மரணிக்கும் பாக்கியத்தை தந்தருள் வாயாக  ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

இன்ஷா அல்லாஹ் எதை  தெரிந்துகொண்டோமோ அதன் படி  அமல் செய்யும் தௌபிக்கை அல்லாஹ் தண்டருல்வானாக ஆமீன்
யா அல்லாஹ் குரானுடன் எங்கள் அனைவரையும் தொடர்பு படுத்துவாயாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

நண்பர்களே படித்து உங்களது நண்பர்குக்கு இந்த பதிவுகளை பற்றி எத்தி வையுங்கள் அவர்களை இந்த பக்கத்தில் இனைய வேண்டுகோள் விடுங்கள் அல்லாஹ்  ரஹ்மத் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

வாஹிர்தவான அல்ஹம்துலில்லாஹி  ரப்பில்  ஆலமீன்

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு 

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home