17 November 2013

இணையதளங்களில் உங்களுடைய பிள்ளைகளை ஆபசங்களில் இருந்து தடுப்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா ?

நீங்கள் விரும்பாத அல்லது பார்க்கக் கூடாது என நினைக்கின்ற இணைய பக்கங்களை உங்கள் பிள்ளைகள் உலாவரக் கூடாது என நீங்கள் நினைக்கின்ற பக்கங்களை தடுப்பதற்கு விரும்புகிறீர்களா.?
இவ்வாறான பக்கங்களை தடுப்பதற்கு சந்தையில் பல மென் பொருட்கள் உலா வருகின்றன. ஆனால் நம்மிடமே வழி இருக்க ஏன் வேறு மென் பொருட்களை பயன்படுத்தவேண்டும் விண்டோஸ் Windows XP, Vista, 7 இயங்கு முறைமையிலேயே அதற்கு வழி இருக்கிறது
இதனை மேற்கொள்ள முதலில் உங்கள் கணினியில் உள்ள ஏதாவதொரு administrator கணக்கினூடாக உள் நுழைந்து கொள்ளுங்கள் பின் உங்கள் My Computer இல் உள்ள C டிரைவினுள் சென்று
1. Windows போல்டரை திறந்து அதனுள் இருக்கும் System 32 என்ற போல்டரை திறவுங்கள்
2. பின் அதனுள் உள்ள drivers என்ற போல்டரை திறந்து கொள்ளுங்கள்.
3. இறுதியாக அதனுள் உள்ள etcஎன்ற பெயரில் அமைந்த போல்டரை திறவுங்கள்.
4. அங்குள்ள hosts என்ற பைலை இரட்டைக் கிளிக் செய்து திறவுங்கள்
5. அப்போது Open With என்ற விண்டோ கிடைக்கும். அதில் Netpad ஐத் தெரிவு செய்து Ok பட்டனை அழுத்துங்கள்

6. இப்போது நீங்கள் திறந்து வைத்துள்ள இந்த hosts பைல் தான் உங்கள் கணனிக்கான இணையம் சம்பந்தப்பட்ட அனைத்து தரவுகளையும் ஆளுகை செய்கிறது இதில் சில மாற்றங்கள் செய்து விட்டால் நான் மேற்சொன்ன மாதிரி இணையப் பக்கங்களை தடுத்து விடலாம்
அந்த பைலின் இறுதி வரி 127.0.0.1 localhost என்று இருக்கும். இந்த வரி முடிகின்ற இடத்தில் Curser ஐ வைத்து Enter கீயை அழுத்தி அதாவது அடுத்த வரிக்கு கீழ் பின்வருமாறு தட்டச்சு செய்யுங்கள்
உதாரணமாக நீங்கள் யூ டியூப் (youtube) தளத்தை தடை செய்ய நினைத்தால் 127.0.0.1 இதன் பிறகு ஒரு இடைவெளி விட்டு www.youtube.com. என்று தட்டச்சு செய்ய வேண்டும்

அதாவது 127.0.0.1 www.youtube.com இவ்வாறு அமையும்.
பின் இதனோடு சேர்த்து facebook தளத்தை Block செய்ய நினைத்தால் அதன் கீழ் 127.0.0.1 www.facebook.comஇவ்வாறு அமையும்.
127.0.0.1 localhost
127.0.0.1 www.youtube.com
127.0.0.1 www.facebook.com

இப்படியாக நீங்கள் தடுக்க நினைக்கிற அனைத்து தளங்களின் முகவரிகளையும் வழங்கிய பின் Ctrl+S அழுத்தி save செய்துவிட்டு வெளியேறுங்கள். இனி உங்கள் கணினியில் நீங்கள் தடுத்த தளங்கள் மட்டுமல்ல ஏனைய தளங்களில் இணைக்கப்பட்டிருக்கும் அந்த இணைய தளங்களின் Widgets கூட வேலை செய்யாது. முயற்சித்து பாருங்கள்..


தகவலுக்கு நன்றி
நண்பர் ரிலாக்ஸ் ப்ளிஸ்
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home