ஆண் டிரைவர்கள் மட்டுமே அதிக விபத்துக்குள்ளாகிறார்கள் ஆய்வில் தகவல் !!
பெண் வாகன ஓட்டுநர்களை
விட ஆண் வாகன ஓட்டுநர்களே அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். இதை நாம்
கூறவில்லை. மேலைநாட்டில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு
தெரிவிக்கிறது.
கவனச் சிதைவு காரணமாக பெண் ஓட்டுநர்களைவிட
ஆண் ஓட்டுநர்கள் இரண்டு மடங்கு விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். விபத்தைச்
சந்தித்த ஆண்களில் 10 பேரில் ஒருவர், கவனச் சிதைவால் விபத்து ஏற்பட்டது
என்று ஒத்துக்கொண்டிருக்கின்றார். ஆனால், 20 பெண்களில் ஒருவர்தான் கவனச்
சிதைவால் விபத்தைச் சந்தித்திருக்கின்றார்.
மேலும், வாகனத்தைச் செலுத்தும்போது
கவனத்தை இழந்து ஏறக்குறைய விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டதாக மூன்றில்
ஒரு பங்கு ஆண்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் ஐந்தில் ஒரு பங்கு
பெண்களுக்குத்தான் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆண்களின் கவனத்தை அதிகமாகச் சிதைக்கும்
விஷயம், கார் ஸ்டீரியோவை சரிசெய்வது. இதன் காரணமாகவே சாலையில் இருந்து
பார்வையை விலக்க நேர்வதாக 76 சதவீத ஆண்கள் கூறியிருக்கின்றனர்.
மூன்றில் இரண்டு பங்கு பேர், வாகனத்தைச்
செலுத்தும்போது பானம் பருகுவது, சாப்பிடுவது போன்றவற்றால் கவனத்தை
இழக்கின்றனர். ஆய்வில் பதில் தெரிவித்தவர்களில் பாதிப் பேர் சிடியை
எடுப்பது, வைப்பதில் சாலையில் தடுமாறிவிடுவதாகக் கூறியிருக்கின்றனர்.
கால்வாசிக்கு மேற்பட்டோர், செல்போன் பேசுவதன் மூலம் பிரச்சினையைத்
தேடிக்கொள்கின்றனர். வாகனத்தை ஓட்டும்போது எஸ்.எம்.எஸ். அனுப்புவது தங்கள்
வழக்கம் என்று பலர் கூறியிருக்கின்றனர்.
வாகனத்தை ஓட்டிக்கொண்டே வழித்தடப்
படத்தைப் பார்ப்பது, ‘ஷேவிங்’ செய்வது, முத்தமிடுவது, செய்தித்தாளில்
பார்வையை ஓட்டுவது போன்றவையும் ஆண்களுக்கு விபத்தை ஏற்படுத்துகின்றன.
நமது இன்று ஒரு தகவல் கட்டுரையாளர் ரமேஷ்
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home