7 November 2013

இன்றை முஸ்லிம் பிரதேசங்களும் ஆட்சியாளர்களும்! அல்குர்ஆன் விடுக்கும் எச்சரிக்கையும்!



இன்றைய முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தபோதிலும் கலப்படமான சிந்தனைகளாலும் உணர்வுகளாலும் செயலாக்க அமைப்புகளாலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டவர்களாக இருந்துவருகிறார்கள்.

இவர்கள் இஸ்லாத்தை அவர்களது தீனாக கருதும் அதேவேளை குப்ர் ஆட்சியார்களால் தாங்கள் ஆட்சிசெய்யப்படுவதற்கு உடன்பட்டவர்களாகவும் குப்ர் சட்டங்களும், செயலாக்க அமைப்புக்களும் தங்கள் மீது நடைமுறைப்படுத்தும் விடயத்தில் மௌனித்துவருகிறார்கள்!

இஸ்லாம் மேலோங்கவேண்டும் எனும் சிந்தனை ஒருபுறமிருக்க தேசியவாதத்திலும் பிரிவினைவாதத்திலும் பிராந்திய உணர்வுகளிலும் உழன்று வருபவர்களான நாம் காண்கிறோம்!

அமெரிக்காவையும், பிரிட்டணையும், ரஷ்யாவையம் எதிரிகளாக கருதும் அதேவேளை இந்த நாடுகளது உதவியை நாடுபவர்களாகவும் நேசக்கரம் நீட்டுபவர்களாகவும் தங்கள் பிரச்சினைகளுக்கு குப்பார்களான அவர்களிடம் தஞ்சம் அடையக்கூடியவர்களாக இருப்பதையும் நாம் காண்கிறோம்!

மூமின்கள் அனைவரும் சகோதரர்கள் என்று ஏற்றுக் கொள்ளும் அதேவேளை தங்கள் இனத்தின் மீதும் நாட்டின்மீதும் வெறித்தனமான பற்றுதல் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள்!

இவையெல்லாம் இஸ்லாத்திற்கு முறண்பட்டவையாக இருப்பினும் அரபுமக்கள் அரபுவாதத்திலும், துருக்கியர்கள் துருக்கிய தேசியவாதத்திலும், பாரசீகர்களும் ஈராக்கியர்களும் சிரியர்களும் எகிப்தியர்களும் அவரவர் நாட்டு இனவாதத்திலும் கண்மூடித்தனமாக மூழ்கியிருக்கிறார்கள்!

இஸ்லாத்தின் சட்டங்களில் நம்பிக்கை வைத்திருப்பதாக கூறும் அதேவேளை இஸ்லாத்தின் சட்டங்களோடு அடிப்படையில் முறண்படும் ஜனனாயகத்திற்காகவும் சுதந்திரந்திர உரிமைகளுக்காகவும் இறையான்மை மக்களுடையது என்று கூறும் மக்களாட்சி மற்றும் பொதுவுடைமைக் கொள்கைகளுக்காகவும் அழைப்பு விடுக்கக்கூடியவர்களாக இருப்பதனைக் காண்கிறோம்!

இதற்கு மேலாக முஸ்லிம் பிரதேசங்களிலும் அரசமைப்பு, பொருளாதாரம், கல்வி, வெளிவிவகாரக்கொள்கை மற்றும் உரிமையியல் விவகாரம் ஆகியவற்றில் முஸ்லிம்கள் மீது குப்ர் சட்டங்களும் அதன் செயலாக்க அமைப்புகளும் நடைமுறைப்படுத்தப்படுவதை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்கிறார்கள்!

இவ்வாறன ஆட்சியாளர்களை பார்த்து அல்குர்ஆன் மிகக் கடுமையாக எச்சரிக்கிறது.

'
நம்முடைய தூதர் எவற்றையெல்லாம் உங்களுக்கு கொடுக்கிறாரோ அவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் இன்னும் அவர் எவற்றைவிட்டும் விலக்குகிறாரோ அவற்றை விட்டும் நீங்கள் விலகிக்கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 59:7)

ஆகவே அல்லாஹ் அருளியதைக்கொண்டு அவர்களுக்கு மத்தியில் ஆட்சிசெய்வீராக மேலும் உம்மிடம் சத்தியம் வந்தபின்னர் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். (அல்குர்ஆன் 5:48)

அல்லாஹ் அருளியதைக் கொண்டு அவர்களிடையே ஆட்சி செய்வீராக மேலும் அல்லாஹ் உங்களுக்கு அருளிய சிலவற்றில் அவர்கள் உம்மை குழப்பத்தில் ஆழ்த்திவிடக் கூடும் என்பதால் நீர் எச்சரிக்கையுடன் இருப்பீராக (அல்குர்ஆன் 5:49)

இன்னும் எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக்கொண்டு ஆட்சிபுரியவில்லையோ அவர்கள்தான் காபிர்கள் ஆவார்கள்! (அல்குர்ஆன் 5:44)

இன்னும் இஸ்லாம் அல்லாத மார்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) அவரிடமிருந்து ஒருபோதும் ஒப்புக்கொள்ளப்டமாட்டாது. ( அல்குர்ஆன் 3: 85)

நபியே கூறுவீராக நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் அப்போது அல்லாஹ் உங்களை நேசிப்பான் மேலும் உங்கள் பாவங்களை மன்னிப்பான் ( அல்குர்ஆன் 3: 31)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home