கருப்பு சருமம் ஆரோக்கியமானதா?
இன்றைய தலைமுறையினர், செக்கச் சிவந்த மேனியைத் தான், அழகு என்று போற்றி, அதை, பெரிதும் விரும்புகின்றனர்.
* கறுப்பாக இருந்தாலும்,
“களை’யாக இருப்பவர்கள் பலர் உண்டு.
ஒருவருக்கு வெள்ளை
தோல் மட்டும் இருந்துவிட்டால் போதாது; முகம் களையாக இருப்பது அவசியம். அப்படி முகமும், உடல் அமைப்பும் களையாக, வசீகரமாக இருந்தால் தான், ஒரிஜினல் அழகு. அந்த வகையில்,
விதவித
அலங்காரங்களும், நகைகளும்
களையான கறுப்பு தேகம் கொண்டவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும்.* பொதுவாக கறுப்பு நிறம் கொண்டவர்களுக்கு அதிகமாக முகப்பரு வருவதில்லை. சிவப்பாக இருப்பவர்கள் பலரும், முகப்பருவால் அவதிப்படுவதை, கண்கூடாக பார்க்கலாம்.
* கறுப்பாக இருப்பவர்கள், அவர்களது நிறத்திற்கும், உடல்வாகிற்கும் பொருத்தமான ஆடை, அலங்காரம் செய்து கொண்டால், அவர்களை விட அழகானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
* வெளிர் நிறத்திலான ஆடைகள், எளிய அலங்காரம் கறுப்பானவர்களை, மேலும் அழகாகக் காட்டும். வெள்ளைக்கல் பதித்த நகைகள், தங்க நகைகள் சிவப்பானவர்களை விட, கறுப்பானவர்களுக்குத்தான் எடுப்பாகத் தோன்றும்.
* சருமத்திற்கும் உணவு தேவைப்படுகிறது. வாரத்தில் ஒரு நாளாவது, சருமத்திற்கு முல்தானி மெட்டி, சந்தனம், தயிர், மஞ்சள், அரிசி மாவு, தக்காளிச் சாறு, எலுமிச்சைச் சாறு போன்ற எதையாவது ஒன்றை தடவி, ஊற விட்டு, கழுவி வந்தால் இயற்கை மற்றும் எளிய முறையில் உங்கள் அழகைப் பேணலாம்.
* கறுப்பான சருமம் என்று கவலைப்படாமல், ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள். அதுதான் உண்மை.
நீங்கள் கறுப்பான தேகம் கொண்டவர் என்றால், அதுபற்றிய தாழ்வு மனப்பான்மை உங்களுக்கு இருந்தால், இன்றே மறந்துவிடுங்கள். கறுப்பே சிறந்த அழகு!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home