அமெரிக்க ஆயுத விற்பனையும் – ஈரான் என்ற எதிரியும்…!!
2011
ஆம் ஆண்டு மட்டும்
உலக அளவில் ஆயுத வர்த்தகம் என்பது கிட்டத்தட்ட 85 பில்லியன் டாலருக்கும் அதிகம்..இந்த மொத்த ஆயுத
வர்த்தகத்தில் அதிக விற்பனை செய்த விற்பனையாளர் வழக்கம் போல நம்ம
பெரியண்ணன் அமெரிக்கா தான்..அமெரிக்காவின் ஆயுத விற்பனை என்பது கிட்டத்தட்ட 66
பில்லியன்
டாலருக்கும் அதிகம்..அடுத்து ரசியா வெறும் 4.8 பில்லியன் டாலர் மட்டும் தான்..இதில்
வேடிக்கை என்னெவன்றால்
அமெரிகாவின் ஆயுத விற்பனை என்பது 2010 ஆம் ஆண்டில் வெறும் 21 பில்லயன் தான் ..ஆனால் 2011 ஆம் ஆண்டு கிட்டதட்ட 3 மடங்கு கூடியுள்ளது எப்படி
இது சாத்தியம் ….அமெரிக்க
ஆதரவு மீடியாக்களில் வரும் செய்திகளை தொடர்ந்து கவனிக்கும் மக்களுக்கு நன்கு
தெரியும் இந்த அளவு ஆயுத விற்பனை உயர்வதற்கான காரணம் என்னவென்று ?
மீடியாவில் சில ஆண்டுகளாக தொடர்ந்து
வரும் செய்தி
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்று..அதில் பின் உள்ள மர்மம் இது தான்..அமெரிக்காவின்
இந்த செய்தியின் மூலம் ஈரானை எதிரியாக பார்க்கும் அமெரிக்க நட்பு அரபு நாடுகளில் ஆயுத
விற்பனை படு ஜோராக நடந்துள்ளது..சவூதி அரேபியா மட்டும் கிட்டத்தட்ட 33 பில்லியனுக்கும் அதிகமான ஆயுதங்களை
வாங்கி குவித்துள்ளது..இது
அமெரிக்காவின் மொத்த ஆயுத விற்பனையில் பாதிக்கும் அதிகம்..அதை போல கத்தார் , யு எ இ என், குவைத என அரபு நாடுகளின் பட்டியல் தான்
முதல் பத்து இடங்களில் பெரும்பாலும்..எது எப்படியோ இந்த ஆயுத
விற்பனையின் மூலம்
அமெரிக்காவுக்கு பலவிதத்தில் லாபம் தான் எப்படி என்றால்..
1 , ஒருவேளை அமெரிக்கா ஈரானை தாக்கும் பட்சத்தில்
ஈரான் அரபு நாடுகளை தாக்கக்கூடும் என்ற பொய்யை மீடியக்ளின் மூலம் பரப்பும் பட்சத்தில் அமேரிக்கா
வளைகுடா நாடுகளுக்கு விற்ற ஆயுதத்தை கொண்டே ஈரானை தாக்க முடியும் ..
2 ,மத்திய கிழக்கில் அணு ஆயுதம் உள்ள ஒரே நாடு
மற்றும் அரபு நாடுகளுடன் எப்பொழுதும் போர் என்ற ஒன்றை எதிர்பார்த்துக் காத்துக்
கொண்டிருக்கும் இஸ்ரேல் என்ற உண்மையான எதிரி ஈரான் அணு ஆயுதம் என்ற
பொய்யின் மூலம் மறக்கடிக்கப்படுகிறது ..
3,அமேரிக்கா பெட்ரோலியத்தை அரபு நாடுகளில்
குறைந்த விலையில் வாங்கி அதிக அளவு லாபத்துடன் பண்ட மாற்று முறைபப்டி
ஆயுதங்களை விற்பனை செய்வதன் அமெரிக்காவிற்கு மட்டும் தான் லாபம்..
இதில் வேடிக்கை என்னவென்றால் முன்பு இதை போலத்தான்
ஈராக் ரசாயன ஆயுதம் என்ற பொய்யை அல்லது வளைகுடா நாடுகளை ஈராக் தாக்கும்
என்ற பொய்யை கூறியே அமெரிக்கா ஆயுத விற்பனையை அரபு நாடுகளில்
பெருக்கியது..இன்று
ஈரானை அணு ஆயுதம் தயாரிக்கிறது என்ற பொய்யை கூறுவதன் மூலம் அமெரிக்கா ஈரான் என்ற தனது
எதிரியை தனிமப் படுத்துவது மற்றும் ஆயுத விற்பனையும் அரபு நாடுகளில் சூடு
பிடிக்கவைத்துள்ளது..
ஒருவேளை நாளை ஈரான் என்ற எதிரியை ஒழித்தால்
கூட சூடான் என்ற வறுமையில் வாழும் நாட்டை கூட மிகப்பெரிய ஆயுதத்தை தயாரிக்கிறது என்ற பொய்யை கூறி
அரபு நாடுகளில் அமெரிக்கா ஆயுத விற்பனையை செய்தாலும்
ஆட்சரியபப்டுவர்கில்லை ….எது
எப்படியோ அமெரிக்கா தனது சுயநலனுக்காக மூன்றாம் உலக நாடுகளை
தாக்குவதும் , அருகருகே
உள்ள இரு நாடுகளை
எதிரியாக காட்டி தனது ஆயுத விற்பனையை அதிகரிப்பதையும் தொடர்ந்து கொண்டு
தான் உள்ளது ..அமெரிக்காவின் இந்த ஆயுத விற்பனைக்கு தரகர்கள் அடிமை மீடியாக்கள்
என்றால் ,மிகையில்லை…
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home