1 November 2013

அது என்ன கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா மட்டும் வாயில போட்டவுடனே



அது என்ன கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா மட்டும் வாயில போட்டவுடனே கரைஞ்சு உள்ளே போறது கூட தெரியாம அவ்வளவு நைசா தொண்டைக்குள்ள இறங்கிடுதே, ஆனா நம்ம வீட்ல எப்படி செஞ்சாலும் மைசூர்பா அந்த மாதிரி ரொம்ப சாஃப்டா வரமாட்டேங்குதேங்கிறவங் களுக்கு அதனோட ரகசியம் தான் என்னென்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கும்.. ரொம்ப சிம்பிள்.. மைசூர்பா வோட சூத்திரம் என்ன தெரியுமா? 1:2:3 தான்.. அதாவது 100 கிராம் கடலை மாவு என்றால், 200 கிராம் சர்க்கரை, 300கிராம் நெய் என்ற அளவில் கலவை இருக்கவேண்டும்.. கடலைமாவும் சர்க்கரைப்பாகும் அடுப்பில் வைத்துக் கிளறும்போது இந்த நெய்யை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறிக்கொண்டே வந்தால் ஒரு ஸ்டேஜில் இந்தக்கலவை மாவு பொங்கி எழும்புவதுதான் பதம்.. அப்புறம் என்ன? கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா சுவை உங்கவீட்டிலும்தான்.. ஒரு கிலோவின் விலை அங்கு ரூ.440 என்றால் வீட்டில் செய்யும்போது அதில் பாதிளவுதான் செலவாகும்.. இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டில் முயற்சித்துப்பாருங்களேன்..

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home