அர்விந்த் கெஜ்ரிவால்
அர்விந்த் கெஜ்ரிவால் : நாம் படிக்க வேண்டிய பாடம்...
இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி - உயர் பதவியில் இருந்தபோதே ஒரு ஒலிபெருக்கியை எடுத்துக் கொண்டு டெல்லி
சேரிப் பகுதிகளில் உள்ள மக்களிடம் சென்று மக்களின் உரிமை பற்றி
போதித்தவர்... தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி கார்ப்பரட்
பெரு நிறுவனங்கள் டெல்லி மக்களிடம் தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களில்
ஏமாற்றி அதிகமாக கணக்குக் காட்டி கொள்ளை அடிப்பதை வெளிக்கொண்டு வந்தவர்...
அன்னா ஹசராவுடன் இணைந்து ஜன்லோக்பால் இயக்கத்தை ஆரம்பித்து வழிநடத்தியவர்
...... அன்னா ஹசரா அரசியல் கூடாது என்றார்... அரசியல் அதிகாரமில்லாமல்
நாட்டை மாற்ற முடியாது என்கிற கருத்து கொண்டு - அந்த உண்ணாவிரதத்தில் கூடிய
பல லட்சம் மக்களை ஓரு கட்டமைப்புக்குள் கொண்டுவந்து - அன்னா ஹசாரே
எதிர்த்தபோதும் கவலைப் படாமல் - ஆம் ஆத்மி எனப்படும் ஏழை மக்களின் கட்சியை
ஆரம்பித்தார்....
மக்களை வாட்டும் அன்றாடப் பிரச்னைகளில் நேரடியாக களமிறங்கி,அவரும் அவருடைய
சக தோழர்களும் முதலில் மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்வார்கள்...
அப்படித் திரளும் கூட்டத்தை ஓன்று திரட்டி, போராடினார்கள் ....தண்ணீர்
மற்றும் மின்சாரக் கட்டணங்களில் கொள்ளை அடிப்பதை எதிர்த்துப் போராடிய
போராட்டத்தில் 3 இலட்சம் பொதுமக்கள் கலந்து கொண்டு கொடுங்கோலாட்சிக்கு
எதிராக தம் உணர்வை வெளிப்படுத்தினார்கள்....
கட்சியைப் பதிவு செய்து கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு
சேர்த்தார்...குற்றப் பின்னணி இல்லாத கட்சி நிர்வாகிகளையும்
வேட்பாளர்களையும் தேர்ந்தெடுத்து அவர்களை போட்டியிட வைத்தார். இதுவே
மிகப்பெரிய புரட்சி ....இந்தியாவில் இதுவரை எந்தக் கட்சியிலும் இந்த
வழக்கம் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்...
இந்திய தேசத்தில் இல்லாத முன்னுதாரணமாக ஒரு கட்சியின் தலைவரை எதிர்த்து
இன்னொரு கட்சியின் தலைவரே போட்டியிடும் அதிசயத்தை தொடங்கிவைத்தார் .
செயலலிதாவை எதிர்த்து கருணாநிதி ஒரே சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதை
நாம் கனவினிலும் காண முடியுமா???
3 முறை டெல்லி முதல்வரான சீலா தீட்சித்தை எதிர்த்து நின்று வென்று
அதிர்வலைகளை ஏற்படுத்தினார்...எனக்கும் அர்விந்து கெஜ்ரிவாலுக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை என அறிவித்த அன்னா ஹசாராவே ஆம் ஆத்மியின் வெற்றியைப்
பார்த்து அதிர்ந்து நின்றார்.....
வெறும் மேடையில் நாடகப் போக்கு காட்டிய அன்னா ஹசாராவை விட, அவரின்
உண்ணாவிரதத்துக்கு கூடிய கூட்டத்தை தன் நிர்வாகத் திறமையால் ஒரு
கட்சியாக்கி , எதிர்கால இந்திய அரசியலை தலை கீழாக புரட்டிப் போடும்
புரட்சிகர அரசியலை முன்னெடுக்கும் அர்விந்து கேஜ்ரிவால் - நமக்கெல்லாம் ஒரு
பாடம்....
மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்து மக்களையும் பங்கெடுக்க வைத்து நம்மை நாமே
ஆண்டுகொள்ள நம் கண் முன்னே வழி காட்டிய அர்விந்து கேஜ்ரிவால் -
நமக்கெல்லாம் ஒரு பாடம்....
பாடத்தை சரியாக படிப்போம்...
மக்களை துணையாகக் கொள்வோம்...
மக்களோடு போராடுவோம்... நாட்டை வென்றெடுப்போம்...-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home