11 December 2013

தானம்!!!..................




கிழிந்த உடையையும் மிஞ்சிய உணவையும் தருவது மட்டும் தர்மம் ஆகாது உயர்ந்த உதவியையும் சிறந்த ந்ன்மையையும் செய்வதே ந்ல்ல தர்ம்மாகும் கர்மம் என்பது முற்ப்பிறப்பிற்கு நாம் செய்யும் பரிகாரம் தர்மம் என்பது வரும் பிறப்பிற்கு நாம் செய்யும் உபகாரம் நிழல் படத்துக்காக சிரித்து வைப்பார் போலியான தலைவர்கள் புகழ் படத்துக்காக கொடுத்து வாழ்வார் போலியான வள்ளல்கள் பணத்தினால் வந்த பயன் பரிதவிப்பவருக்கு கொடுத்து மகிழும் குணத்தினால் வந்த பயன் பாசமுள்ளவரிடம் பகிர்ந்து வாழும் நலமே விளம்பரத்துக்காக் வியாபாரமாய் செய்யப்படும் தானம் நீர் மேலெழுத்து இரக்கத்துக்காக இனிமையாய் கொடுக்கப்படும் தானம் கல் எழுதியஎழுத்து நாய்க்கு எலும்பு தந்து வள்ளல் என்று வேடமிடுகிறார் பசிக்கு மோர் தந்து தலைவர் என்று நாடகமாடுகிறார் பசித்தவனுக்கு ஒளித்தது திருடனுக்கு உணவாகும் கதிரவனுக்கு ஒளிக்காதது காமுகனுக்கு விருந்தாகும் கொடுப்பது சிறிது என்று தயங்காதே வாங்குப‌வர்க்கு அது பெரிது எடுப்பது சிறிது என்று திருடாதே இழந்தவருக்கு அது பெரிது கைகளில்லாத மேகமும் கருணையைம் பொழிகிறது கைகள் உள்ள மனிதனோ கருமியாய் இருக்கிறான்!!!!
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home