12 December 2013

"(பாப்ரி) மசூதியை இடித்தவர்களுக்கும் (இஸ்லாமிய) மார்க்கம்.




எல்லாப் புகழும் அல்லாஹு ஒருவனுக்கே ..... !

இந்தியாவில் பாப்ரி பள்ளிவாசலை இடித்த 100 பள்ளிகளை கட்டும் 2 கரசேவகர்கள்


Welcome to Islam,

Two ex-KaraSevakhs involved in Babri Masjid Demolition embraced Islam, Alhamdhulillah !!!!!


Whomever Allah guides none can misguide, and whomsoever Allah leads astray, none can guide - Al Quran 39:23


இவர்கள் யார் என்று தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. இவர்கள் இப்போது எங்கே? டாக்டர் .அப்துல்லா (பெரியார்தாசன்) கூறுகிறார்:

"
பாபரி மஸ்ஜிதை இடித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம் , இடிக்கபட்ட அன்று பள்ளியின் மேலே உச்சியில் (குப்பாவில்) நின்று அதை ஆவேசத்துடன் இடித்த இரு இளைஞர்கள் தங்கள் இடித்த பள்ளியின் இடிபாடுகளின் கல்லை தங்களின் சொந்த ஊருக்கு எடுத்து
சென்றுள்ளார்கள்.

பாணிப்பூர் என்ற ஊரை சேர்ந்த அந்த இரண்டு இளைஞர்களும் அந்த இடிபாடுகளை ஒரு பள்ளிவாசல் முன்பு கொட்டி அதில் சிறுநீர் கழித்து அங்குள்ள இஸ்லாமியர்களை மனம் புண்பட செய்துள்ளனர்.

அல்லாஹ்வின் இறை இல்லத்தை இடித்த இவர்கள் இரண்டு பேரின் நிலை அடுத்த மூன்று நாட்களில் தலைகீழாக போனது... இருவருக்கும் உச்சகட்ட பைத்தியம் பிடித்தது , பைத்தியம் என்றால் கடுமையானது தன்னை தானே நிர்வாணம் ஆக்கி கொள்வது , கண்ணில் படும் பெண்களின் ஆடைகளை கிழித்து உறவு கொள்ள முயற்சி செய்யும் அளவிற்கு கொடுமையாக இருந்தது., தனது தாயுடனே உறவு கொள்ள முயற்சி
செய்யும் கொடிய நிலைக்கு இவர்கள் ஆளாகி போனார்கள் (அல்லாஹு அக்பர் ).

இந்த இருவரின் குடும்பம்மும் நல்ல வசதி வாய்ப்பை உடையது. இந்த நோய்க்கு மருத்துவம் செய்ய பல இடங்களின் முயன்று அனைவரும் கைவிட அந்த இருவரின் பெற்றோரும் அமெரிக்காவில் உள்ள எனது மனதத்துவ ஆசிரியரை தொடர்பு கொண்டு மருத்துவம் செய்ய அழைக்க அவர் தற்போது தன்னால் வரமுடியாது என்று சொல்லி எனது மாணவர் இந்தியாவில் இருக்கிறார் அவரை அழைத்து பாருங்கள் என்று சொல்லிரிக்கிறார்.

அவர்கள் என்னை அழைக்க நான் அங்கு சென்று பார்த்தேன்.., (சுபஹானல்லாஹ்) இந்த நோயின் தன்மையானது சுமார் ஆறுமாத காலம் எடுத்துதான் இந்த நிலையை அடைய முடியும் . இது தான் அறிவியலின் நிலை ஆனால் இந்த இருவருக்கும் வந்திருப்பது ஆச்சரியமானது , மூன்று நாட்களில் இவர்களுக்கு இந்த நோய் உச்சத்தை அடைந்து விட்டது. இதற்க்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரித்துவிட்டேன்.

அவர்கள் என்னிடம் பாபரி மஸ்ஜிதை இடித்த பிறகுதான் இப்படி ஆகியது என்று சொன்னார்கள் ஆதலால் வேறு வழி இல்லை என்பதால் நீங்கள் பள்ளியில் இருக்கும் இமாம்களிடம் ஓதி பாருங்கள் என்று சொல்லி விட்டு நான் வந்து விட்டேன்.

நான் அப்போது இஸ்லாமியனாக இருந்தவனில்லை எனினும் சும்மா சொல்லிட்டு வந்தேன்

ஆனால் நான் சொன்னதை மனதில் வைத்து டெல்லியில் பெரிய பள்ளியில் இமாமை சந்தித்து நடந்ததை அழுது புலம்பி சொல்லி இருகிறார்கள் இவர்களின் பெற்றோர்கள்.

இவர்கள் செய்த காரியத்திற்கு அல்லாஹ்வே தண்டனை வழங்கி உள்ளான் நீங்களே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் , நானும் இவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் ஆனால் இவர்களுக்கு குணமானால் என்ன செய்வீர்கள் என்று அந்த இமாம் கேட்க,என்ன வேண்டாலும் செய்வோம் என்று சொல்லி இருகிறார்கள் அவர்களின் பெற்றோர்கள்..,

இமாம் அவர்கள் இருவரையும் இஸ்லாத்தில் இணைத்து விடுங்கள் என்று சொல்லி இருகிறார் அதை ஏற்றுக்கொண்டு பள்ளி வாசலில் அழுது புலம்பி அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கூறி உள்ளனர் அனைவரும்... அல்லாஹு அக்பர் - அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அவர்கள் பள்ளிவாசலை விட்டு வெளிஏறி வந்த உடனே
(
சுபஹானல்லாஹ் - அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன் )

தங்களின் நிர்வாண கோலத்தை மறைக்க தனது தந்தையின் தலை பேட்டாவை எடுத்து மறைதார்களாம் அந்த இருவரும்.-அல்ஹம்துலில்லாஹ்.

நான் இதை அந்த இமாம் இடத்திலையே நேரடியாக கேட்டு தெரிந்து கொண்டேன்.

தற்போது இருவரும் இஸ்லாத்தில் இணைந்து எந்த கையால் பள்ளி வாசலை இடித்தார்களோ அதே கையால் பல பள்ளிவாசலை கட்டி வருகிறார்கள் , இங்கு கூட சேலத்தில் ஒரு பள்ளி வாசல் கட்டி வருகிறார்கள். நான் இஸ்லாத்திற்கு வந்த செய்தி அறிந்து என்னை இருவரும் நேரடியாக சந்திக்க வந்தனர் என்று கூறி முடித்தார் dr .அப்துல்லாஹ் அவர்கள்.
Dr Abdullah Video :

http://www.youtube.com/watch?v=vLTtbFokWJA


Baabri Masjid Karasevkh converts Islam

http://www.youtube.com/watch?v=hls7dIFGoQ4
http://www.youtube.com/watch?v=3_clFYR7lKQ
http://www.youtube.com/watch?v=gHOCvswNwzU

- IQRA NETT News

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home