16 March 2014

உலகின் புரிந்து கொள்ள முடியாத மர்மங்களில் 'பெர்முடா' முக்கோணமும் ஒன்று!



உலகின் புரிந்து கொள்ள முடியாத மர்மங்களில் 'பெர்முடா' முக்கோணமும் ஒன்று. 'பெர்முடா
முக்கோணம்' என்பது ஒரு கடல் பிரதேசம் ஆகும்
பெர்முடா, ப்ளோரிடா, போர்டேரிகோ ஆகிய மூன்று பிரதேசங்களுக்கு இடைப்பட்ட சுமார் 39.3 இலட்சம் சதுர கிலோமீற்றர் ( 15 இலட்சம் சதுர மைல் ) வரை பரப்பளவுள்ள முக்கோண வடிவ கடல் பகுதியே பெர்முடா முக்கோணம் எனப்படுகிறது.
இந்தப் பகுதியினூடாகச் செல்லும் கப்பல்களும் இதன் மேலாகப் பறக்கும் விமானங்களும் மாயமாய் மறைவதும் விபத்துக்குள்ளாவதும் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருந்து வருகின்றது.
இவ்வாறான மர்மம் இருப்பது தெரிய வந்தது 1945.12.05 அன்று நடந்த ஒரு சம்பவம் மூலம் ஆகும்.
1945 ம் ஆண்டு பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்ற அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த flight -19 என்னும் விமானங்கள் 5 மாயமாக மறைந்து போயின. மோசமான காலநிலை காரணமாக விமானங்கள் விபத்துக்குள்ளாகி யிருக்கலாம் என்றே முதலில் கருதப்பட்டது.
ஆனால், ஆய்வுகளின் படி அன்று வானிலை மிக அமைதியாக இருந்ததாகவும் விமானத்தை ஓட்டிய விமானிகள் மிகவும் அநுபவம் வாய்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது.
காணாமல் போன விமானங்களைத் தேடி 13 பேர் கொண்ட மீட்பு குழுவொன்று இன்னுமொரு விமானத்தில் புறப்பட்டது. ஆனால், பயிற்சி விமானங்கள் போலவே மீட்பு விமானமும் மாயமாய் மறைந்து போனது.
இன்றுவரை அந்த ஆறு விமானங்களுக்கும் அதில் பயணித்தவர்களுக்கும் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.
மூன்று வருடங்கள் கழித்து 1948.01.30 அன்று அசோரசில் இருந்து பெர்முடா நோக்கி புறப்பட்ட Star tiger என்னும் வர்த்தக விமானம் மாயமாக மறைந்தது.
இதே வருடம் 1948.12.28 இல் 32 பயணிகளுடன் பெரடேரிகோவிலிருந்து மியாமி நோக்கி புறப்பட்ட விமானம் மாயமாக மறைந்து போனது.
தொடர்ந்து 1949.01.17 அன்று பெர்முடாவில் இருந்து ஜமேக்கா நோக்கி புறப்பட்ட Star Ariel விமானம் காணாமல் போனது.
1955.08.26 அன்று இப்பகுதியினூடு சென்றுகொண்டிருந்த சிறிய கப்பல் ஒன்று மாயமாய் மறைந்து போனது.
963.08.28 அன்று இந்த பகுதியில பறந்துகொண்டிருந்ந விமானம்; மாயமாய் மறைந்தது.
1969 ம் ஆண்டு இந்த முக்கோணத்தின் மீது பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தின் ரேடியோ தொடர்பு அறுந்து போய் பின்பு அதன்கெதி யாருக்கும் தெரியாமல் போனது.
இதேபோல் 1945 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட, கடற்பயணம் மேலோங்கி இருந்த காலங்களில் இவ்வாறான பல இழப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும். இது பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள் இல்லாவிட்டாலும் வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளில் எந்த இடம் என்று குறிப்பிடப்படாத இழப்புகள் பற்றிய தகவல்கள் உள்ளன.
எனினும், இதுவரை கிடைக்கப் பெற்றிருக்கின்ற கணக்கின்படி 4000 இற்கு மேற்பட்ட மனிதர்கள் பெர்முடா முக்கோண வலயத்தில் மாண்டிருக்கிறார் கள். விமானங்களின் ஒரு சில சிதைந்ந பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த மர்மங்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் பலவிதமான விளக்கங்களைத் தருகின்றனர். சில இயற்கை நிகழ்வுகள்தான் இதற்குக் காரணம் என்பதே இவர்களின் வாதமாகும்.
இந்த கடல் பகுதியில் இராட்சஷ சுழிகள் உருவாகுவதோடு இந்தச் சுழிகளே கப்பல்களை விழுங்குவதாக சிலர் கூறுகின்றனர்.
இந்த முக்கோண பகுதியில் ஏனைய இடங்களை விட வலுவாக இருக்கின்ற மின்காந்தப் புலமானது கப்பல் மற்றும் விமானங்களின் திசையறி கருவிகளைத் தாக்கிவிடுகின்றது. இந்தக் குழப்பத்தினால் அவை வேறு திசையில் பயணித்து, விபத்துக்குள்ளவதாக சிலர் தெரிவிகின்றனர்.
கடலுக்கு அடியில் இருந்து வெளிப்படும் மெதேன் ஹைத்தரைட் வாயுவானது வெளியாகி உயர்ந்து செல்லும்போது தண்ணீரின் அடர்த்தி குறைவடைந்து விடுவதனால் கப்பல்கள் மூழ்கி விடுகின்றன. விமான பறப்பு வழிகளின் காற்று மண்டலம் ஐதாகி விடுவதனால் விமானங்கள் பறக்கமுடியாது விழுந்துவிடுகின்றன. என்கின்றனர் சிலர்.
வேறு சிலர் இந்த பகுதியில் எதோ ஒரு அமானுஷ்ய சக்தி உலாவுவதாகவும் அவைதான் இந்த காணாமல் போதல்களுக்குக் காரணம் எனவும் கூறுகின்றனர்.
யார் என்ன கூறினாலும் பெர்முடா முக்கோணம் பல மர்மங்களை கொண்ட பயங்கர இடமாகவே இன்றும் கருதப்படுகின்றது. அதனால்தான் 'பிசாசுகள் முக்கோணம்' - Evils Triangle என்று இது அழைக்கப்படுகின்றது.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home