வேலைக்கு போகும் பெண்களா கணடிப்பா படிங்க?
எங்கு பாதுகாப்பு தேவை
கூலி வேலை முதல் ஐடி கம்பெனி வரை பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். ஈவ் டீசிங் தொடங்கி ஆசிட் வீச்சு, பாலியல் பலாத்காரம் என பல ரூபங்களில் காத்திருக்கிறது பெண்களுக்கான பிரச்னைகள். வேலைக்குப்போகும் பெண்கள் எந்த விதத்தில் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது? மேலே படிங்க...
வேலைக்குச்செல்லும் பெண்கள் முதலில் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். வேலை செய்யும் இடத்தில் குடும்ப பிரச்சனைகளை அனைவரிடத்திலும் சொல்வது நமக்கு நாமே தேடிக்கொள்ளும் வினை. குறிப்பாக கணவனை இழந்த பெண்கள், விவாகரத்தான பெண்கள் தன் சம்பந்தப்பட்ட விஷயங்களை தம்பட்டம் அடிக்காமல் இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் சிறு சிறு தொந்தரவுகளை எதிர்கொள்ளும் மனோபலத்தை உருவாக்கி கொள்ளுங்கள். அதையும் மீறி பாலியல் தொந்தரவுகள் தொடர்ந்து ஏற்படும் பட்சத்தில் வேறு வேலை தேடுவது நல்லது. வேறு வேலையை தேடாமல் அங்கேயே கிடந்து மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள்.
மேலும், பெண்கள் கூடிய மட்டும் இரவு நேரப் பணிகளை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். இரவில் தனியாகச் செல்வதை அறவே தவிர்த்துவிடுங்கள். பாதுகாப்பற்ற இடங்களுக்கு வேலைக்குச் செல்வதை தவிர்த்துவிடுங்கள். பின்னால் யார் வருகிறார்கள் என்பதை கூட கவனிக்காமல் எல்லா விஷயங்களையும் செல்போனில் பேசிக்கொண்டே தெருவில் நடப்பது எவ்வளவு ஆபத்தான செயல் என்பதை உணர்ந்து அப்பழக்கத்தை கைவிடுங்கள். வேலைக்குச் செல்லும் நேரத்தில் தினமும் யாராவது தங்களை தொடர்ந்து வருவது தெரிந்தால் அந்த பாதையை மாற்றுவது சிறந்தது.
அது முடியாத பட்சத்தில் அது பற்றி மகளிர் காவல் நிலையத்தில் உங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என்று சொல்லி புகார் தெரிவியுங்கள். அல்லது 1098 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தெரிவியுங்கள். வீட்டில் இருப்பவர்களிடமும் இந்த பிரச்னை குறித்து தெரிவிப்பது நல்லது. தனியார் நிறுவன அட்மின் மேனேஜர் ஸ்ரீமதி கூறியதாவது:
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். கூடுதல் சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக ஐடி கம்பெனிகளில் உயிரை கொடுத்து வேலை பார்க்கின்றனர். ஐடி பெண்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வேலை செய்கின்றனர். இரவில் பெண்கள் பணிக்கு செல்வதால் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. எனவே பெண்கள் இரவுப் பணி செய்ய தடை விதிக்க வேண்டும். பெண்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் அவர்களது பாதுகாப்புக்கும் பொறுப்பேற்கவேண்டும். பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக இன்னும் அதிகளவில் போராடவேண்டும். பெண்சமூக நல ஆர்வலர் வழக்கறிஞர் மார்கிரெட் கூறியதாவது:
சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. இங்கே பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கடைகளுக்குச் செல்ல வேண்டுமென்றாலும் ஆண் துணையில்லாமல் போகமுடியாத நிலை தான். அதிலும் வேலைக்கு போகும் பெண்கள் தினமும் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். பேருந்துகளிலும், அலுவலகங்களிலும் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். பத்திரிக்கை வெளிச்சத்திற்கு வராமல் எத்தனையோ அவலங்கள் மறைக்கப்படுகின்றன.
இதனைத்தடுக்க நம்முடைய சமூக கட்டமைப்புகளை மாற்றி அமைக்க வேண்டும். அந்த மாற்றத்தை பெண்மையால் மட்டும்தான் செயல்படுத்த முடியும். ஒரு பெண் நல்ல முறையில், தெளிவுள்ள பெண்ணாக வளர அவளது தாய், தந்தையரின் பங்களிப்பு மிகவும் முக்கியம். பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக 24 மணிநேர சேவை மையத்தை நிர்வகித்து வருகிறோம். அதன் தொலைபேசி எண்: 18001027068. இதன்மூலம் பெண்கள் தங்களுக்குத் தேவையான சட்ட விழிப்புணர்வு, சமுதாய விழிப்புணர்வு, பெண் பிள்ளைகளை வளர்க்கும் முறை குறித்த கவுன்சிலிங் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
-அஷ்ரப்கூலி வேலை முதல் ஐடி கம்பெனி வரை பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். ஈவ் டீசிங் தொடங்கி ஆசிட் வீச்சு, பாலியல் பலாத்காரம் என பல ரூபங்களில் காத்திருக்கிறது பெண்களுக்கான பிரச்னைகள். வேலைக்குப்போகும் பெண்கள் எந்த விதத்தில் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது? மேலே படிங்க...

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home