பெண்ணென்று சொல்லிக்கொள்வதில் பெருமை
பத்மஜா நாராயணன் இணையதள உலகில்
பெமிலியர் நேம். இணைய சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளரான இவர் ஒரு வங்கி ஊழியரும் கூட. ‘‘மழைப்பாதையில் நடந்த வெளிச்சம்’’
‘‘தெரிவை’’ என்ற இரண்டு கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் பத்மஜா ஒரு சிறந்த
மொழிப்பெயர்ப்பாளர். பிறமொழி பெண்
எழுத்தாளர்களின் கவிதைகளை, பிறமொழியில் வெளிவந்த பெண்மை சம்பந்தப்பட்ட கவிதைகளை மொழிபெயர்த்து வருகிறார்.
பெண் சம்பந்தப்பட்ட நல்ல இலக்கியங்கள் தமிழ் வாசகர்களை சென்றடைய வேண்டும் என்பது இவரது நோக்கம். காரணம் வாசிப்பை தனது உயிர் மூச்சாக கொண்டவர் இவர். தனது நோக்கம் மற்றும் பெண்மை குறித்து பத்மஜா குறிப்பிடுகையில், ‘‘சில பகிர்ந்து கொள்ளமுடியாத உணர்வுகளை வெளிப்படுத்த காகிதம் எப்போதும் ஒரு வடிகால். என் வாழ்க்கையின் சில கடுமையான கணங்களை தாண்ட எழுத துவங்கிய நான் இன்று ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்ற தடத்தை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கிறேன். சிறந்த மொழிபெயர்ப்புகளை தமிழுக்கு அளித்து நல்லி விருது வாங்க வேண்டும் என்பது எனது நோக்கம்.
பெண் சம்பந்தப்பட்ட இலக்கியங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பது தான் என் முதல் விருப்பம். காரணம் இறைவனது படைப்பில் ஆண் பெண் இருவரும் சமம். அது ஆணோ, பெண்ணோ ஒருவரை விட மற்றொருவர் எந்த வகையிலும் தாழ்ந்தவர் இல்லை. நான் எப்போதுமே பெண்ணாகப் பிறந்ததற்காக பெருமை கொள்பவள். பெண்ணையும் சக மனுஷியாக இந்த உலகம் கொண்டாட இந்த மகளிர் தினக்கொண்டாட்டங்கள் நிச்சயம் தேவை’’. என்கிறார்.
-அஷ்ரப்பெண் சம்பந்தப்பட்ட நல்ல இலக்கியங்கள் தமிழ் வாசகர்களை சென்றடைய வேண்டும் என்பது இவரது நோக்கம். காரணம் வாசிப்பை தனது உயிர் மூச்சாக கொண்டவர் இவர். தனது நோக்கம் மற்றும் பெண்மை குறித்து பத்மஜா குறிப்பிடுகையில், ‘‘சில பகிர்ந்து கொள்ளமுடியாத உணர்வுகளை வெளிப்படுத்த காகிதம் எப்போதும் ஒரு வடிகால். என் வாழ்க்கையின் சில கடுமையான கணங்களை தாண்ட எழுத துவங்கிய நான் இன்று ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்ற தடத்தை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கிறேன். சிறந்த மொழிபெயர்ப்புகளை தமிழுக்கு அளித்து நல்லி விருது வாங்க வேண்டும் என்பது எனது நோக்கம்.
பெண் சம்பந்தப்பட்ட இலக்கியங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பது தான் என் முதல் விருப்பம். காரணம் இறைவனது படைப்பில் ஆண் பெண் இருவரும் சமம். அது ஆணோ, பெண்ணோ ஒருவரை விட மற்றொருவர் எந்த வகையிலும் தாழ்ந்தவர் இல்லை. நான் எப்போதுமே பெண்ணாகப் பிறந்ததற்காக பெருமை கொள்பவள். பெண்ணையும் சக மனுஷியாக இந்த உலகம் கொண்டாட இந்த மகளிர் தினக்கொண்டாட்டங்கள் நிச்சயம் தேவை’’. என்கிறார்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home