மலையை அசைத்துப் பார்க்கும் மார்க்கெட்டிங் மங்கைகள்!
மார்க்கெட்டிங் ஒரு மாயாஜாலம்!
நிறுவனம் என்கிற கப்பலை ஆரவாரத்தோடு கடலில் செலுத்த வைப்பதும், தரை தட்ட வைப்பதும் இந்தத் துறையின்
கையில்தான் இருக்கிறது. இந்திய மார்க்கெட்டிங் துறையில்
வெற்றிகரமாகக் கப்பலைச் செலுத்திக் கொண்டிருக்கும் சாதனை மங்கைகளான சில கேப்டன்களைப்
பற்றி...
மனிஷா லத் குப்தா
FMCG எனப்படும் அதிகம் விற்பனையாகும் நுகர்பொருள்கள் விற்பனைத் துறையிலிருந்து, வங்கி, நிதித்துறைகளுக்கு வந்தவர் மனிஷா. இரண்டு துறைகளிலும் அசத்தலாகத் தன் முத்திரையைப் பதித்தவர். இப்போது ‘இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கி’ என்று பெயர் பெற்றிருக்கும் ஆக்சிஸ் வங்கியில், தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி. கோல்கேட்-பால்மோலிவ் இந்தியா நிறுவனத்திலும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்திலும் பல தலைமைப் பொறுப்புகளில் இருந்தவரை ஆக்சிஸ் 2010ல் வரவேற்றது. ஆக்சிஸ் குரூப் நிறுவனங்களுக்கான விளம்பரங்கள், அவற்றுக்கான பிராண்டுகளை நிலைப்படுத்தும் பொறுப்புகளை ஏற்றார்.
எட்டாண்டுகள் ஹிந்துஸ்தான் யூனிலீவரிலும், ஆறாண்டுகள் கோல்கேட் பால்மோலிவ்விலும் பணிபுரிந்த அனுபவம் ஆக்சிஸ் வங்கியை தனித்து அடையாளப்படுத்த கை கொடுத்தது. டிஜிட்டல் மார்க்கெட்டிங், வாடிக்கையாளர்களை வழிநடத்தும் முறை, அவர்களை ஈர்க்கும் விதம் என எல்லாவற்றையும் சிறப்பாகக் கையாண்டார். பிராஞ்ச் ஃபைனான்ஸ் என்ற அமைப்பு, உலக அளவில் இருக்கும் பேங்க்குகளை மதிப்பீடு செய்தது. அதன் தரவரிசைப் பட்டியலில் 500 வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் பேங்க், ‘இந்தியாவின் அடுத்த தலைமுறைக்கான பேங்க்காக இருக்கும்’ என்று சொல்லப்படுகிறது. இதற்கெல்லாம் பின்னே மனிஷா லத் குப்தா இருக்கிறார். ஐ.ஐ.எம்., பெங்களூருவின் முன்னாள் மாணவியான இவர், பயோடெக்னாலஜி படித்தவர் என்பது ஆச்சரியத் தகவல்!
நாடியா சௌஹான்
‘ஃபுரூட்டி’, ‘ஆப்பி’ போன்ற பிரபல குளிர்பானங்களைத் தயாரிக்கும் பார்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை இயக்குனர், தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி - நாடியா. அது அவருடைய குடும்ப நிறுவனம்தான். பார்லி அக்ரோ நிறுவனம் தயாரிக்கும் அத்தனை பொருட்களையும் நிர்வகிப்பது, மார்க்கெட் செய்வது, விற்பனை - விநியோகப் பணிகளை மேற்பார்வையிடுவது என எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்கிறார். வேலையையும் வாழ்க்கையையும் குழப்பிக்கொள்ளாமல் பேலன்ஸ் செய்து வெற்றி பெறுவது முக்கியம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் நாடியா. வேலை பார்க்கும் கட்டாயத்தில் உள்ள ஒரு தாய்க்கு இது நூறு சதவிகிதம் பொருந்தக்கூடிய உண்மை. தேர்ந்தெடுத்த வேலையில் விருப்பம், புதிதாக கற்றுக்கொள்வதில் பேரார்வம், அதிரடி அணுகுமுறை... இவைதான் இவரது வெற்றிக்கான மந்திரங்கள்.
யார் சொல்கிற யோசனையாக இருந்தாலும் புறக்கணித்து விடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார். 2009லிருந்து பார்லி அக்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்திய அத்தனை புதிய பொருட்களின் மார்க்கெட்டிங் மூளையும் நாடியாதான். அவற்றில் ‘எல்.எம்.என்.’ என்கிற கார்பனேட் செய்யப்படாத எலுமிச்சை பானம், ‘செயின்ட்’ ‘ஹிப்போ’, ‘கிராப்போ’ ஆகிய பழரசங்கள் முக்கியமானவை. இவருடைய தந்தை பிரகாஷ் சௌஹான் பெரிய தொழிலதிபர். அவர் போகும் மார்க்கெட்டிங் மீட்டிங்குகளுக்குக் கூடவே போவார் நாடியா. அப்போது அவருக்கு வெறும் 11 வயது. அங்கேதான் மார்க்கெட்டிங் பாடங்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அதோடு மார்க்கெட்டிங் ஆட்களோடு பல ஏரியாக்களுக்குப் போய், வாடிக்கையாளர்களின் நாடித்துடிப்பையும் உணர்ந்து கொண்டார். அந்த அனுபவங்கள் நாடியாவுக்கு இப்போதும் உதவிக் கொண்டிருக்கின்றன.
சங்கீதா பெண்டுர்கர்
மும்பை பல்கலைக்கழகத்தில் பி.பார்ம் படித்தவர். மார்க்கெட்டிங் துறைக்கு வந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. ஆரம்பத்தில் மருந்துத்துறையில்தான் சங்கீதாவுக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. அவருடைய தோழி ஒருவர் எம்.பி.ஏ. நுழைவுத்தேர்வு எழுதப் போக, இவர் துணைக்குப் போயிருக்கிறார். பிறகு என்ன... பூனா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. வாங்கும் அளவுக்கு வந்துவிட்டது ஆர்வம். மார்க்கெட்டிங் துறைக்கு வரவு! மருந்துத் துறைக்கு இழப்பு! நிதி நிறுவனம், நுகர்பொருள்கள் விற்பனை, மருந்துக் கம்பெனி என்று பல துறைகளில் பணியாற்றியிருக்கிறார் சங்கீதா. நோவார்டிஸ், ஹிந்துஸ்தான் லீவர், கோக கோலா, எச்.எஸ்.பி.சி. வங்கி என எல்லாமே புகழ்பெற்ற நிறுவனங்கள். இப்படியான பல்துறை அனுபவமும் அதில் கற்றுக்கொண்ட பாடங்களும் அவரை மிக நன்றாக, அழுத்தமாக மார்க்கெட்டிங் துறையில் காலூன்ற வைத்து, கெல்லாக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியில் உட்கார வைத்திருக்கிறது.
‘கெல்லாக்ஸ் விரும்பாத குழந்தைகளே இல்லை’ என்ற பெயரை அது இந்தியா முழுக்கத் தக்க வைத்திருக்கிறது. கடந்த பிப்ரவரியில், கெல்லாக் நிறுவனம், ப்ராக்டர் - கேம்பிள் நிறுவனத்திடம் இருந்து ‘ப்ரிங்கிள்ஸ்’ஐ வாங்கியிருக்கிறது. அப்படியென்றால் கெல்லாக் நிறுவனம், கொறிப்பதற்கான ஸ்நாக்ஸ் விற்பனையிலும் இறங்கப்போகிறது என்று அர்த்தம். இது சங்கீதா பெண்டுர்கருக்கு மிகப்பெரிய சவால்தான். ஆனால், அவருக்கு சவால்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும். கெல்லாக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக, மார்க்கெட்டிங்கிலிருந்து நிர்வாகத்துக்கு அடி எடுத்து வைத்திருக்கிறார். போட்டிகள் நிறைந்திருக்கும் மார்க்கெட்டிங் உலகில், நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. புதிய பிராண்டுகளை உருவாக்கி, மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து, நிறுவனத்தின் சொத்துகளாக அவற்றை உருவாக்கி, மிகப் பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்ட வேண்டிய கடமையும் சேர்ந்திருக்கிறது!
சுபர்ணா மித்ரா
டைட்டான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவுக்கு உலகத் தலைவர் பதவி சாதாரணமாகக் கிடைத்துவிடக் கூடியதல்ல. அந்த நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் சுபர்ணா மித்ரா. பி.இ. எலெக்ட்ரிக்கல் எஞ்சினீயரிங் முடித்துவிட்டு, ஐ.ஐ.எம். கொல்கத்தாவில் மார்க்கெட்டிங் படித்தவர் சேர்ந்த இடம் ஹிந்துஸ்தான் யூனிலீவர். மார்க்கெட்டிங்கிலும் விற்பனையிலும் அவருக்கு நல்ல அனுபவங்களைக் கற்றுக்கொடுத்த இடம் அது. முக்கியமாக சில்லறை வணிகத்திலும், வெவ்வேறு விதமான வாடிக்கையாளர்களின் வாழ்க்கைமுறையைக் கூர்ந்து கவனித்ததிலும் அவர் கற்றுக் கொண்டது ஏராளம். இப்போது டைட்டான் வாட்சுகளுக்கான பிரமாண்ட வெற்றிக்குப் பின்னால் இருக்கும் மார்க்கெட்டிங் மூளை சுபர்ணாதான் என்று அடித்துச் சொல்கிறார்கள்.
இந்தியாவில் டைட்டானுக்கான தனி இடத்தைத் தக்க வைத்தது ஒற்றை மனுஷியான சுபர்ணா என்றால் மிகையில்லை. டைட்டான் வாட்சுகளுக்கும் அதே போல நிறுவனத்தின் ஸ்பெஷலான ஸ்விஸ் ரக வாட்ச் ‘க்ஸைலிஸ்’க்கும் பொறுப்பேற்றிருக்கிறார். எந்த ரகமாக இருந்தாலும், கொஞ்சம் புதுமை கலந்து, புத்துயிரூட்டுகிற வேலையை அதற்குச் செய்தால், வாடிக்கையாளர் மாறினால்கூட அது வேகமாக விற்றுத் தீர்ந்துவிடும் என்பதில் சுபர்ணாவுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு பொருளுக்கு மதிப்பு இருந்தால்தான் வாடிக்கையாளர் தேடி வருவார் என்பதிலும் உறுதியாக இருக்கிறார் சுபர்ணா.
வர்ஜினியா ஷர்மா
ஐ.பி.எம். கார்பரேஷனில் 12 ஆண்டுகளாக உலக அளவில் பணியாற்றியிருக்கிறார் வர்ஜினியா. இந்தியாவில் இருக்கும் ஐ.பி.எம். சாஃப்ட்வேர் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி இவர். மார்க்கெட்டிங் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவுக்குத் தலைமை ஏற்றதுமே அதன் உள்கட்டமைப்பையும், இந்தியாவில் சாஃப்ட்வேர் தீர்வுகளுக்கான செயல்திறனை அதிகப்படுத்தவும் முன் முயற்சி எடுத்தவர். அன்றாட நிகழ்வுகளையும் ஊடகங்களையும் தொடர்ந்து, அதற்கேற்ப மார்க்கெட்டிங் உத்திகளை வடிவமைப்பதில் திறமைசாலி. ஐ.பி.எம்.முக்கு வருவதற்கு முன்னால், வெப்ஸ்பியர் சாஃப்ட்வேர் மற்றும் எஸ்.ஓ.ஏ. நிறுவனத்தில் நிகழ்வுகள் மற்றும் உரையாடல் மார்க்கெட்டிங் பிரிவுக்கு உலகத் தலைவராக இருந்தார்.
அமெரிக்காவிலுள்ள வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்துவிட்டு, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர் இவர். 2010ம் ஆண்டு, சி.எம்.ஓ. கவுன்சிலும், சி.எம்.ஓ. ஆசியாவும் இணைந்து கொடுத்த ‘தகவல் தொழில்நுட்பம் மற்றும் சாஃப்ட்வேர் நிபுணர்’ விருது பெற்றவர்.
மார்க்கெட்டிங்கும் ஐ.டி. துறையும் விரைவில் ஒன்றாக இணைந்து செயல்பட ஆரம்பிக்கும் என்று நம்புகிறார் வர்ஜினியா. அதற்கான முன் முயற்சிகள் சாஃப்ட்வேர் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆரம்பித்துவிட்டன என்றும் நம்புகிறார். அப்படி நடந்தால், மார்க்கெட்டிங், ஐ.டி. துறைகள் இரண்டிலும் செய்யப்படும் முதலீடுகளுக்கு மிகப் பெரிய வருவாய் கிடைக்கும் என்கிறார் வர்ஜினியா. பல தலைமை மார்க்கெட்டிங் அதிகாரிகளால் உத்திகளில் அதிக ரிஸ்க் எடுக்கப்படுகிறது என்கிற கருத்தும் அவருக்கு இருக்கிறது. ‘இனி வரும் காலங்களில் பெண்கள்தான் மார்க்கெட்டிங் துறையில் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள்’ என்கிறார் இந்தப் பெண்மணி, கூலாக!
-அஷ்ரப்மனிஷா லத் குப்தா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home