8 March 2014

சருமப் பராமரிப்பில் உருளைக்கிழங்கு.



சருமத்தின அழகை அதிகரிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும், அந்த ஆசையால் பலர் கடைகளில் விற்கப்படும் கண்டகண்ட அழகு சாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்துவதால், சருமத்தின் அழகானது அதிகரிப்பதற்கு பதிலாக சருமப்பிரச்சனைகள் தான் அதிகரித்திருக்கும். எனவே எப்போதும் சரும அழகை அதிகரிப்பதற்கு ஆசைப்படும் போது இயற்கை வழிகளைப் பின்பற்றினால் சருமத்தில் எந்த பிரச்சனையும் வராமல் சரும அழகை அதிகரிக்க முடியும்.

உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சம அளவில் எடுத்து அதில் சிறிது தேன் சேர்த்து சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து  கழுவினால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி சருமம் பொலிவோடு இருக்கும்..

சருமத்தில் உள்ள அதிகப்படியான வறட்சியை போக்கி அழகை அதிகரிக்க வேண்டுமானால் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து அதில் 2டீஸ்பூன்  பால் பவுடர் மற்றும் 2டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி 25 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும்.

உருளைக்கிழங்கை அரைத்து அதில் 23 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சாஸ் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவைத்து கழுவ  வேண்டும். எலுமிச்சை சாறு, உருளைக்கிழங்கு சாறு மற்றும் முல்தானி மெட்டி ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து அதனை சருமத்தில்  தடவி நன்கு உலர வைத்து முதலில் வெதுவெதுப்பான நீரில் அலசி பின் குளிர்ந்த நீரில் கழுவி இறுதியில் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இதனை  தினமும் செய்து வந்தால் முகப்பருவால் ஏற்பட்ட தழும்புகள் படிப்படியாக மறையும்.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home