8 March 2014

வீட்டிலேயே எளிமையாக கலரிங் செய்யலாம்



கடைகளில் வாங்கும் ஹேர் டை எனக்கு அலர்ஜியாகி விடுகிறது. பார்லர்களிலோ செலவு அதிகம். வீட்டிலேயே எளிமையாக கலரிங் செய்ய வழி  உண்டா?  

வழிகாட்டுகிறார் அழகுக்கலை நிபுணர் பத்மா...

உண்டே! ஹென்னா பவுடர் - ஒரு கப், நெல்லிக்காய் பவுடர், கத்தா பவுடர் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) இரண்டும் தனித்தனியாக - டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் - 1 (சாறு), பீட்ரூட் சாறு - 1 கப், டீ அல்லது காபி டிகாக்ஷன் - தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.

எல்லாவற்றையும் ஒரு நாள் முன்னதாகவே இரும்புப் பாத்திரத்தில் போட்டு ஊற வைக்கவும். அடுத்த நாள் இந்தக் கலவையை முடியில் பரவலாக  அப்ளை செய்து, 2 மணி நேரம் கழித்து அலசவும். இப்படிச் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். ஆரஞ்சு வண்ணத்தில் கலரிங் செய்தது போன்ற  தோற்றம் கிடைக்கும்.

தண்ணீருக்கு பதிலாக காஃபி அல்லது டீ டிகாக்ஷன் சேர்ப்பதால் நல்ல வண்ணம் கிடைக்கும்.  வறண்ட ஸ்கால்ப் உள்ளவர்கள், சைனஸ், ஆஸ்துமா  பிரச்னை உள்ளவர்கள் எலுமிச்சைப் பழம் பயன்படுத்த வேண்டாம். மாதம் ஒரு முறை செய்து கொள்வது நல்லது.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home