9 May 2014

பேஷ் பேஷ்.. நன்னா இருக்கு வந்து விட்டது காபி பேக்


லண்டன்: டீ பேக் போலவே பயன்படுத்திய பின் தூக்கி எறியும் (யூஸ் அண்ட் துரோ), காபி பேக் விற்பனைக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் டீ பேக் விற்பனை அமோகமாக நடக்கிறது. சுடச்சுட பாலில் டீ பேக்கை சிறிது நேரம் ஊற வைத்தால், டீ ரெடியாகி விடும். அதேபோல் காபி பேக்கை தயாரித்துள்ளார். டென்மார்க்கை சேர்ந்த உல்ரிக் ரஸ்முசென் என்பவர் இதை உருவாக்கி உள்ளார். இதுகுறித்து உல்ரிக் கூறியிருப்பதாவது: ஒரு நாள் காலையில் காபி போட்டு குடிக்க சமையல் அறைக்கு சென்றேன்.

அங்கு பில்டர் சரியாக வேலை செய்யவில்லை. எரிச்சலாக இருந்தது. சமையல் அறையில் சில டீ பேக் இருந்தன. அப்போது ஐடியா தோன்றியது. டீ பேக் போலவே ஏன் காபி பேக் தயாரிக்க முடியாது என்று நினைத்தேன். உடனடியாக டீ பேக் ஒன்றை துண்டித்து அதில் இருந்த டீ தூள்களை எடுத்துவிட்டு காபியை நிரப்பி பில்டர் செய்து பார்த்தேன். அதன்பின், காபி பேக் தயாரித்தேன். இந்த பேக்கில் வெந்நீரை ஊற்றினால், உள்ளே இருக்கும் காபித் தூள் பில்டராகி அடியில் நிரம்பும். அதில் பால், சர்க்கரை சேர்த்து குடிக்க வேண்டியதுதான். இவ்வாறு உல்ரிக் கூறியுள்ளார். ஐந்து விதமான காபி பேக்களை இவர் அறிமுகம் செய்துள்ளார். இதில் 300 மில்லி வெந்நீர் ஊற்றி பில்டர் காபி தயாரிக்கலாம். இரண்டு கப் காபி ரெடி.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home