கலக்கப்போகும் அட்டகாச பைக்குகள்
நொய்டாவின் 'இந்தியா எக்ஸ்போ மார்ட்' அரங்கத்தின் நடந்த 12வது ஆட்டோ
எக்ஸ்போ கண்காட்சியில், இரண்டாவது தளம் முழுவதும் திரும்பிய பக்கம் எல்லாம்
புதுப்புது பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்தன. பள பள டிஸைன்களில்
பார்வையாளர்களை திணறடித்தது. இங்கே நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் உடனடியாக
விற்பனைக்கு வரப்போவது இல்லை. ஆனால், இன்னும் இரண்டு ஆண்டுகளில் நம்
நாட்டில் என்னென்ன பைக்குகளை எதிர்பார்க்கலாம் என்பதை ஒரு அதிரடி
டிரெய்லராக இந்த கண்காட்சி நம் கண்முன் காட்டியது.
சுஸூகி ஜிக்ஸர், ஹோண்டா சிபிஆர் 500ஆர்., டிவிஎஸ் டிராக்கன் என ஸ்போர்ட் பைக்குகள் ஒரு பக்கம், ஹார்லி டேவிட்சன், ட்ரையம்ப், மோட்டா குஸி என சூப்பர் பைக்குகள் இன்னொரு பக்கம், யமஹாவின் புத்தம் புதிய ஸ்கூட்டர்கள் ஒரு பக்கம் என எந்த பைக்கை பார்ப்பது, எந்த பைக்கை விடுவது என திணறிப்போனார்கள் ஆட்டோமொபைல் ரசிகர்கள். எக்ஸ்போவில் இடம்பெற்றிருந்த சில முக்கியமான பைக்குகள் விவரம் இங்கே...
எச்.எக்ஸ்.250ஆர்:
ஹஸ்ட்டருடன் மற்றும் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கையும் காட்சிக்கு நிறுத்தியிருந்தது ஹீரோ. எச்.எக்ஸ்250ஆர் என பெயரிடப்பட்டிருந்த இந்த பைக், 250 சிசி திறன்கொண்டது. முன்பக்கம் இரட்டை ஹெட்லைட்ஸ் குடுவைக்குள் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கின் பின்பக்கம்தான் செம சூப்பர். சீட்டுக்கு அடியில் எக்ஸாஸ்ட் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு கீழே ஸ்டைலான டெயில் லைட் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பைக், 2014 தீபாவளி நெருக்கத்தில் விற்பனைக்கு வரும். அழகான ஃபேரிங் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக்கான இதன் அதிகபட்ச சக்தி 31 பிஎச்பி. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இதன் இரண்டு வீல்களிலுமே டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளன. ஹோண்டா சிபிஆர்250ஆர், கே.டி.எம்-200 பைக்குகளுக்கு போட்டியாக களம் இறக்கப்படும் இந்த பைக்கின் விலை 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எடை 139 கிலோ. பெட்ரோல் டேங்க் 12.9 லிட்டர் கொள்ளளவு கொண்டது.
ஹோண்டா சி.எக்ஸ்-01:
டெல்லி அருகே மானேசரில் ஆராய்ச்சி நிலையம் வைத்திருக்கும் ஹோண்டா, முதன்முறையாக இந்தியாவிலேயே, இந்திய டிஸைனர்களால் டிஸைன் செய்யப்பட்ட 'சி.எக்ஸ்-01 என்ற கான்செப்ட் பைக்கை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்தது. சி.எக்ஸ் என்றால், 'கான்செப்ட் கிராஸ்' என்றும், 01 என்றால், இந்தியாவில் டிஸைன் செய்யப்பட்ட 'முதல் வெர்ஷன்' என்றும் அர்த்தமாம். அதிரடியான, வித்தியாசமான ஹெட்லைட் டிஸைனை கொண்டிருக்கும் இந்த பைக்கின் இண்டிகேட்டர்கள், ஹேண்டில்பாரிலேயே வைக்கப்பட்டுள்ளன. கார்களில் இருப்பதுபோல ஹெட்லைட்டில் எல்இடி டே டைம் ரன்னிங் லைட்ஸ் பொருத்தப்பட்டுள்ளன. ஒற்றை சீட் கொண்ட இந்த பைக்கின் சைலன்ஸர் மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கான்செப்ட் பைக்கில் சிபிஆர்-250ஆர் பைக்கில் இருக்கும் 250 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால், இதே இன்ஜினோடு இது விற்பனைக்கு வருமா? எப்போது தயாரிப்பு துவங்கும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
மஹிந்திரா மோஜோ:
நீண்ட காலமாக கான்செப்ட் பைக்காக இருந்த மோஜோ, இந்த முறையும் கான்செப்ட் பைக்காகவே டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையும் ஹெட்லைட்டுகள் மாற்றியமைக்கப்பட்டிருந்ததோடு, டே டைம் ரன்னிங் விளக்குகளும் பொருத்தப்பட்டிருந்தன. 295 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின்கொண்ட இந்த பைக்கின் அதிகபட்ச சக்தி 26 பிஎச்பி. தொடர்ந்து பல ஆண்டுகளாக கான்செப்ட் நிலையிலேயே இருக்கும் இந்த பைக், ஜூன் மாதவாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
ஹஸ்ட்டர்:
ஹஸ்ட்டர் பைக்கின் முன்பக்கம், கவாஸாகி இசெட் 1,000 பைக்கை நினைவுபடுத்துவதுபோல் உள்ளது. அதிரடியான இரட்டை புரொஜெக்டர் ஹெட்லைட் வசீகரிக்கிறது. இருக்கை, பின்டயருக்கு முன்பாகவே முடிந்துவிடுவது இந்த பைக்கின் பின்பக்கத்தை செம ஸ்போர்ட்டியாக காட்டுகிறது.
இதில் இருப்பது 620 சிசி லிக்விட் கூல்டு, பேரலல் ட்வின் இன்ஜின். இது, அதிகபட்சமாக 9,600 ஆர்.பி.எம்.-ல் 78 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்துகிறது. ஒற்றை சீட் கொண்ட இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் பிரம்மாண்டமாக இருந்தாலும், உள்ளுக்குள் இருப்பது 15 லிட்டர் கொள்ளளவுதான்.
இந்த பைக்கில் பைரவி டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், இது விற்பனைக்கு வரும்போது பைரவி டயர்களுடன் வருமா என்பது சந்தேகம்தான். 160 கிலோ எடை கொண்ட இந்த பைக், 0-100 கி.மீ வேகத்தை 3.8 விநாடிகளில் கடந்துவிடும் என்கிறது ஹீரோ. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 240 கி.மீ.
பஜா பல்ஸர் சி.எஸ்-400:
கே.டி.எம்-390 பைக்கின் பல்ஸர் வெர்ஷனை எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, சட்டென நேக்கட் பல்ஸர் பைக்கை அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தியது பஜாஜ். பல்ஸர் சி.எஸ்-400 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த பைக்கில், சிஎஸ் என்றால், 'க்ரூஸர் ஸ்போர்ட்ஸ்' என்று அர்த்தமாம். கே.டி.எம்-390 பைக்கில் இருக்கும் அதே 375 சிசி இன்ஜின்தான் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இதன் பவர் எவ்வளவு என்பதை பஜாஜ் வெளியிடவில்லை.
முரட்டுத்தோற்றம் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக்கில் பல டிஸைன் புதுமைகள் செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல் டேங்க்கின் மேல் ஸ்பீடோ மீட்டர் மற்றும் கியர் இண்டிகேட்டர் டிஜிட்டல் மீட்டராக வைக்கப்பட்டுள்ளது. டேக்கோ மீட்டர் ஃப்யூல் இண்டிகேட்டர் டிஜிட்டல் அம்சங்கள் எப்போதும்போல் ஹெட்லைட்டுக்கு பின்னால் வைக்கப்பட்டுள்ளன. ஹெட்லைட் முழுக்க முழுக்க எல்இடி. சிங்கிள் சீட் கொண்ட இந்த பைக்கின் சைலன்ஸர், யமஹா சைலன்ஸர்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் எப்போது விற்பனைக்கு வரும் என்ற விவரத்தை பஜாஜ் வெளியிடவில்லை. பவர் 42 பிஎச்பி. கியர்பாக்ஸ் 6 ஸ்பீடு.
ஹோண்டா சிபிஆர்-650 எஃப்:
650 சிசி ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்கான இதை, இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனைசெய்ய திட்டமிட்டிருக்கிறது ஹோண்டா. 2016ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் இந்த பைக் 649 சிசி திறன்கொண்டது. அதிகபட்சமாக 86 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்துகிறது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதை 7 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது ஹோண்டா.
ஹோண்டா ஆக்டிவா 125 சிசி:
125 சிசி திறன்கொண்ட ஆக்டிவாதான் ஹோண்டாவிடம் இருந்து உடனடியாக விற்பனைக்கு வரவிருக்கும் ஸ்கூட்டர். 124.9 சி.சி திறன்கொண்ட இந்த ஆக்டிவா, முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் கொண்டது. 8.6 பிஎச்பி சக்திகொண்ட இந்த ஸ்கூட்டர், அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரஉள்ளது. உத்தேச விலை ரூ.64 ஆயிரம்.
யமஹா ஆல்ஃபா:
யமஹா 'ரே'வில் இருக்கும் அதே 113 சிசி இன்ஜின்கொண்ட ஆல்ஃபா என்னும் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது யமஹா. 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்திருக்கும் இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச சக்தி 7 பிஎச்பி. எடை 104 கிலோ. பெட்ரோல் டேங்க் 5.2 லிட்டர் கொள்ளளவு கொண்டது.
-அஷ்ரப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home