ரேஷன் அட்டை கிடைக்காதவர்கள் அதிகாரிகளுக்கு எஸ்எம்எஸ், இ-மெயில் அனுப்பி நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்
சென்னை: எழிலக வளாக கூட்டரங்கில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில்,
பொது விநியோக திட்ட செயல்பாடுகள் குறித்து, துறை அதிகாரிகளுடன் ஆலோசனை
கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:ரேஷன்
அட்டையில் முகவரி மாற்றம், இடம் மாறுதல் கோரி பெறப்படும் மனுக்கள் மீது
உடனுக்கு டன் தீர்வு காண வேண்டும். குடும்ப அட்டை கேட்டு மனு செய்யும்
குடும்ப அட்டைதாரர் களிடம் செல்போன், இமெயில் வசதி இருந்தால் செல்போன் எண்
அல்லது இமெயில் முகவரியை தவறாமல் மனுவில் குறிப்பிட வேண்டும். இதன்மூலம்
அவர்களுடைய மனுவின் நிலை பற்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு தகவல் தெரிவிக்க
முடியும்.
வருகிற ஜூன் மாதம் முதல், குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தகவல் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட வழங் கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள், துணை ஆணையாளர், மண்டல உதவி ஆணையாளர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் ஆகியோரின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி, அதன் மூலம் தகவல் பெற்றுக் கொள்ளலாம். மேற்கூறிய அலுவலர்களின் இமெயில் முகவரிக்கும் கோரிக்கைகள் அனுப்பி தகவல்கள் பெற்றுக் கொள்ளலாம். அதிகாரிகளின் செல்போன் எண் மற்றும் இமெயில் முகவரிகள் உணவு துறையின் இணைய தளத்தில் (www.consumer.tn.gov.in அளிக்கப்பட்டுள்ளது.
-
அஷ்ரப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home