ஒருவர் வளர்ப்பில் வளரும் பிள்ளைகள்!
பதின்ம பருவம் பட்டாம் பூச்சிக் குழந்தைகளின் பெற்றோருக்கு...
நமது சமூகக் கலாசாரங்களில் மிகவும் சிரமமானதும் சவாலானதுமான விஷயம் ஒற்றைத் தாய் அல்லது தந்தையாக இருப்பது. அம்மா, அப்பா என இரண்டு பேரும் இருந்தாலுமே பதின்ம வயதுப் பிள்ளைகளைக் கையாள்கிற பருவத்தைப் போராட்டமாக எதிர்கொள்ளும் போது, இருவரில் ஒருவர் மட்டுமே அந்தப் போராட்டத்தை எதிர்கொள்ளும் போது சுமைகளும், பிரச்னைகளும் பன்மடங்கு அதிகரிக்கும்.
ஒற்றைத் தாய் அல்லது தந்தையாக இருக்கிற எந்த ஆணும், பெண்ணும் அப்படியொரு நிலையை வேண்டுமென்றே திட்டமிட்டு வரவழைத்துக்
கொள்வதில்லை. இருவராகச் சேர்ந்து வாழத் தொடங்குகிறவர்களுக்கு இருவரில் ஒருவரது இறப்பு, விவாகரத்து, கைவிடப்படுவது என ஏதேனும் ஒரு காரணத்தால் பிரிவை சந்திக்க நேர்கிறது. அம்மா, அப்பா ஆகிய இரண்டு பாத்திரங்களையும் ஒருவரே தரித்து செயல்பட வேண்டிய நிர்பந்தத்தில், பிள்ளைகளின் எல்லா தேவைகளையும் ஒருவரே கவனிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு அவர்களுக்கு உண்டாகிறது.
பதின்ம வயதுப் பிள்ளைகளை வளர்ப்பது என்கிற ஏற்கனவே சிக்கலான ஒரு காரியத்தை, ஒற்றைத் தாய் அல்லது தந்தையாக இருப்பவர்கள், இன்னும் சிக்கலுடன் எந்தவித உதவிகளும் இல்லாமலே சந்திக்க வேண்டியிருக்கிறது. அம்மா அல்லது அப்பா என ஒருவரின் வளர்ப்பில் வளரும் பிள்ளைகளுக்கு வாழ்வாதாரத்தைப் பற்றி, எங்கே, எப்படி வாழ்வது என்பது பற்றி, யார் தமக்குப் பாதுகாப்பு என்பது பற்றிய கவலைகள் இருக்கும். இவை தவிர, அவர்களுக்கு வேறு சில கவலைகளும், பதற்றங்களும் இருக்கும். தவிர ஒற்றைத்தாய் அல்லது தந்தை வளர்க்கும் பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கு குடும்பம் உடைந்து, பிரிகிற போது தாம் ஒதுக்கப்பட்டதாக, ஏமாற்றப்பட்டதாக, அவமானப்படுத்தப்பட்டதாக ஒரு உணர்வு இருக்கும்.
அந்த வயதிலேயே அவர்கள் மீது குடும்பப் பொறுப்புகள் சுமத்தப்படும். அவர்களைவிட வயதில் சிறிய உடன்பிறப்புகளைப் பார்த்துக் கொள்ள வேண்டிய கூடுதல் பொறுப்பும் சேரும். அப்படியொரு வாழ்க்கை முறை அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தலாம். தவிர, உறவுகளைப் பற்றியும், திருமணத்தைப் பற்றியும் அவர்களது மனத்தில் ஒரு பிரத்யேக அபிப்ராயம் ஏற்படலாம். இந்த வயதில் அவர்களுக்கு எழுகிற கேள்விகளுக்கு சுலபமான எந்த பதிலும் இல்லை. அவர்கள் சந்திக்கிற பிரச்னைகளை மாயமாக்க எந்த வழிகளும் இல்லை.
ஒற்றை அம்மாக்களும், அப்பாக்களும் எதிர்கொள்கிற அனைத்துப் பிரச்னைகளையும் ஒரே தீர்வில் சரிப்படுத்திவிடச் செய்கிற வித்தைகள் இருப்பதில்லை. ஆனாலும் ஒற்றைப் தாய் அல்லது தந்தையாக இருப்போர் நடைமுறையில் கையாளக் கூடிய சில வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றுவது சற்றே சிரமம் என்றாலும், நிச்சயம் கை கொடுக்கக் கூடிய வழிகள் அவை.
என்ன செய்யலாம்?
உங்களுடைய உடல், மனம், ஆத்மா என எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்துக் கொள்ளத் தவறாதீர்கள். இதைச் செய்யத் தவறும் பட்சத்தில் நீங்கள் உங்கள் உறவை இன்னும் சிக்கலாக்கிக் கொள்கிறீர்கள் என்றே அர்த்தம். போதிய ஓய்வெடுங்கள். நன்றாக சாப்பிடுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை பராமரித்துக் கொள்ளுங்கள் உங்களுக்கென ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் சக ஊழியர்களாக, பொது விடங்களில் சந்திக்கிறவர்களாக, உங்களைப் போலவே தனியாக வாழ்பவராக... இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
தனிமை இல்லாதவரை, ஒற்றை பெற்றோராக இருப்பதொன்றும் அத்தனை சிரமமான காரியமல்ல என உணருங்கள். அவர்களிடம் தேவையான போது உதவிகள் கேட்கத் தயங்காதீர்கள். நீங்கள் மிகவும் மனமுடைந்து, உற்சாகமிழந்து, தன்னம்பிக்கை சிதைந்து காணப்படுகிற வேளைகளில் உங்கள் நண்பர்கள் உங்களை உற்சாகப்படுத்தி உங்கள் மனநிலையை மாற்றுவதை அனுமதியுங்கள்.உங்கள் மகன் அல்லது மகளிடம் அவனை(ளை) நீங்கள் அளவு கடந்து நேசிப்பதாக வார்த்தைகளிலும், செயல்களிலுமாக வெளிப்படுத்துங்கள். உங்கள் குழந்தை செய்கிற எல்லா முயற்சிகளையும் அங்கீகரியுங்கள். உங்கள் குழந்தைகளிடம் அவர்கள் தனித்துவமும், நல்ல மதிப்புகளும், அன்பும் கொண்ட அருமையான பிள்ளைகளாக வருவார்கள் என அடிக்கடி சொல்லுங்கள். எல்லைகள் கடந்து அவர்களை நேசியுங்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கு மிகச் சிறந்த உதாரணமாக இருங்கள். அப்போதுதான் அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும். உங்களது நல்ல குணங்களை அவர்களும் பின்பற்றத் தொடங்குவார்கள். உங்களுடைய நம்பிக்கைகளிலும், கொள்கைகளிலும் நீங்கள் எப்போதும் உறுதியாகவும், உண்மையாகவும் இருப்பீர்கள் என்பதை பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள். உங்கள் பிள்ளைகள் நேர்மையாகவும், பொறுப்பாகவும், கருணையோடும், நீதியோடும் நடந்து கொள்ள விரும்பினால், நீங்கள் அப்படி வாழ்ந்து காட்டுங்கள். அவர்களிடம் எப்போதும் உண்மையையே பேசுங்கள். எப்போதும் உங்கள் செயல்களுக்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளத் தயங்காதீர்கள்.உங்கள் பிள்ளைகளிடம் நிறைய பேசுங்கள். அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றிய விருப்பங்கள், குடும்பத்தின் கொள்கைகள், எல்லைகள் பற்றி எடுத்துச் சொல்லுங்கள்.
குடும்பத்தில் முடிவெடுக்கும் சந்தர்ப்பங்களில் உங்கள் பிள்ளைகளையும் இணைத்துக் கொள்ளுங்கள். விதிகளை விதிப்பது மட்டுமல்ல, அவற்றைப் பின்பற்ற வேண்டியதும் அவசியம் என்பதை உணர்த்துங்கள்.உங்கள் குடும்பத்துக்கென சில வழக்கமான விஷயங்களை, செயல்களை முறைப்படுத்துங்கள். உதாரணத்துக்கு எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பது, படிப்பதற்கான நேரம் ஒதுக்குவது, சரியான நேரத்துக்குத் தூங்கச் செல்வது போன்றவை... குடும்பத்தின் ஒற்றுமையை வலியுறுத்தும் வீட்டு விசேஷங்கள், ஆன்மிக நிகழ்வுகள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள், விடுமுறைக் கேளிக்கைகள், ஞாயிற்றுக் கிழமை விருந்துபசாரங்கள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பழக்குங்கள்.
இவையெல்லாம் தலைமுறைகள் தாண்டியும் அவர்களுக்குள் குடும்ப உறவுகளைப் பற்றிய மதிப்பீடுகளை உணர்ந்து, ஒற்றுமையுடன் வாழக் கற்றுக்
கொடுக்கும்.தினமும் உங்கள் பிள்ளைகளுடன் சிறிது நேரத்தைக் கட்டாயமாக ஒதுக்குங்கள். அந்த நேரத்தை வேறு எந்த தலைபோகிற வேலைக்காகவும் விட்டுக்கொடுக்காதீர்கள். உங்கள் பிள்ளை சொல்வதைக் கேளுங்கள். நிறைய ஊக்கமும், உற்சாகமும் கொடுக்கிற வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். முடிந்தால் அவர்கள் வயதுக்கு மாறி, அவர்களுக்குப் பிடித்தபடியான வேடிக்கையான விஷயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
சந்தோஷத்தையும், அன்பு செலுத்துவதையும் யாரும், யாருக்கும் கற்றுத் தர முடியாது. தனிப்பட்ட முறையில் உங்களுக்கு இருக்கும் கோபம், வெறுப்பு, விரக்தி போன்றவற்றைப் பிள்ளைகளின் மேல் காட்டாதீர்கள். கோபம் என்பது உடலையும், உள்ளத்தையும் மட்டுமின்றி, உறவுகளையும் பாதிக்கிற விஷயம். நீங்கள் பேசுகிற வார்த்தைகள் உங்கள் பிள்ளைகளின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு உதவுவதாக மட்டுமே இருக்க வேண்டும். தன்னுடைய எந்தப் பிரச்னைக்கும் உங்களை அணுகலாம் என்கிற நம்பிக்கையை பிள்ளைகள் உணரும்படி இருக்க வேண்டும் உங்கள் நடவடிக்கை. உங்களுக்கும், உங்கள் வாழ்க்கைத் துணைக்குமான பிரச்னையில், பிள்ளைகளை உங்கள் வசம் இழுக்கும் முயற்சியில் துணையைப் பற்றிய அவதூறு பேசுவதை செய்யாதீர்கள்.
அம்மா, அப்பா என இருவரையும் நேசிக்கவும், இருவரின் நேசத்தைப் பெறவும் உங்கள் பிள்ளைகளுக்கு உரிமை உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.
உங்கள் பிள்ளைகளிடம் அளவுக்கு மீறி உங்களது அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நம்மால் சிறந்த அம்மா அல்லது அப்பாவாக இருக்க முடியவில்லையோ என்கிற தாழ்வு மனப்பான்மையைத் தூக்கிப் போடுங்கள். இந்த உலகத்தில் யாராலும் அப்படி இருக்க முடியாது. எல்லோரிடமும் ஏதோ ஒரு கோளாறு இருக்கும். எல்லோரும் தவறுகள் செய்கிறவர்கள்தான். உங்கள் தவறுகளை உணரவும், அவற்றை உங்கள் வயதுக்கேற்ற முதிர்ச்சியுடன் கையாளவும், மறுபடி அதே தவறுகள் நேராமலிருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.
இப்படிச் செய்தீர்களானால் எப்படிப்பட்ட பிரச்னையையும் சர்வசாதாரணமாகக் கையாளவும், எப்படிப்பட்ட சூழலையும் மாற்றவும், உங்கள் பலம் என்ன என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு உணர்த்தவும் உங்களால் முடியும். நீங்கள் நம்புகிற விஷயங்களில் உறுதியாக இருங்கள். உங்கள் பிள்ளைகளுக்கான விதிகளையும் எல்லைகளையும் வரையறுத்து, அவற்றை மீறினால் உண்டாகக் கூடிய பக்க விளைவுகளைப் புரிய வையுங்கள். உங்களுக்கு முடியாத, களைப்பான சந்தர்ப்பங்களில் உங்கள் சுயநலத்துக்காக நீங்கள் உருவாக்குகிற அந்த விதிகளைத் தளர்த்த நினைக்காதீர்கள். உங்களைவிட்டுப் பிரிந்து போன துணை, எக்காரணம் கொண்டும் குடும்ப விதிகளை பிள்ளைகள் பின்பற்றுவதில் ஊக்கமாகவோ, ஆதரவாகவோ நிற்கப்போவதில்லை. ஆனாலும் மனம் தளராதீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காதீர்கள்.
உங்கள் பிள்ளைகள் அம்மா, அப்பா என இருவரின் அரவணைப்பையும் அருகாமையையும் இழந்து வளர்வது உண்மைதான். அந்தக் குறையை ஈடுகட்டும் வகையில் அவர்களுக்கு அதீத செல்லமும், சலுகைகளும் கொடுக்காதீர்கள். உங்கள் இரக்கத்தை சாதமாக்கிக் கொண்டு, நினைத்ததை சாதித்துக் கொள்ள முயல்கிற அவர்களது மனோபாவத்தை ஊக்கப்படுத்தாதீர்கள். பெரும்பாலான ஒற்றைத் தாய் அல்லது தந்தைகளுக்கு பொருளாதாரச் சிக்கலை எதிர்கொள்வதுதான் மிகப்பெரிய சவால். பலரும், அதை ஈடுகட்ட முன்பைவிட அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். அதைக் காரணம் காட்டி, உங்கள் பிள்ளைகளுடன் செலவிடுகிற நேரத்தைத் தவற விடாதீர்கள். பிள்ளைகளுடன் பேச, அவர்கள் பேசுவதைக் கேட்க நீங்கள் ஒதுக்க வேண்டிய நேரம் மிகமிக முக்கியமானது, அவசியமானது.
அம்மா, அப்பா என இருவரும் சேர்ந்திருக்கிற குடும்பங்களில் இருவருக்கும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பிள்ளைகளைப் பற்றிய சேதிகள் வந்து சேரும். இருவருக்குமிடையே கருத்துப் பரிமாற்றங்கள் இருக்கும். அது சாத்தியமில்லாத ஒற்றைத் தாய் தந்தையர், தனக்கு ஆதரவையும், நல்ல ஆலோசனைகளையும் கொடுக்கக் கூடிய ஒரு உறவு அல்லது நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம். தனி நபராக நீங்கள் சந்திக்கிற பிரச்னைகளை அவர்களிடம் பகிர்ந்து கொண்டு, கருத்து கேட்கலாம். உங்களது மனதுக்கு நெருக்கமான உறவினர் யாரேனும் ஒருவரை வாரம் ஒரு முறையோ, இரு முறையோ சந்தித்து உங்கள் தன்னம்பிக்கைக்கு உற்சாகம் ஏற்றிக் கொள்ளலாம். கடவுள் நம்பிக்கை இருந்தால், அதற்கான நேரம் ஒதுக்கவும் தவற வேண்டாம்.
ஆரோக்கியமான குடும்பத்துக்கான ஆதாரம் குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை அல்ல. ஒற்றை ஆளாக இருந்தாலும் நீங்கள் உங்கள் குடும்பத்தின் மேல் காட்டுகிற அக்கறைதான் பெரிது. குடும்ப நபர்களுக்கிடையிலான உரையாடல்கள் நிற்கும் போதும், தடைப்படும்போதும், அன்பின்றி நடந்து கொள்ளும் போதும், அனாவசிய சண்டைகளுக்கு அடிபோடும் போதும்தான் ஒரு குடும்பம் உடைகிறது. அதைத் தவிர்ப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது.
நன்றி குங்குமம்தோழி
-அஷ்ரப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home