11 September 2014

பிரா அணிவதால் மார்பக கேன்சர்?

பெண்கள் ‘கப்‘ பிரா அணிவதால் மார்பக புற்றுநோய் வராது என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடலின் எந்த ஒரு பகுதியும் தொடர்ச்சியாக பாதிப்புக்கு ஆளாகும் போது, அந்த பகுதியில் கேன்சர் வர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. பெண்கள் தங்கள் மார்பகத்தை எடுப்பாக காட்டுவதற்காக அணியும் ‘கப்‘ பிராவினால் மார்பக கேன்சர் வர வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், மார்பகத்தின் வடிவத்தை மிகவும் கவர்ச்சியாக காட்டுவதற்கு அணியும் கப் பிராகளுக்கும் கேன்சருக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறுகின்றனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். அமெரிக்காவில் சியாட்டில் நகரில் பிரட் ஹட்சின்சன் கேன்சர் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் தான் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘கப் பிரா அணிவதற்கும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.

ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் அணிந்தாலும் மார்பக புற்றுநோய் வராது‘ என தெரிவித்தனர். மாதவிலக்கு முடிந்த 55ல் இருந்து 74 வயதுடைய பெண்கள் ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம், பிரா அணிவதால் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இல்லை என தெரியவந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home