16 November 2014

சென்னையில் 50 மையங்கள் ஆதார் அட்டை எடுக்க எழிலகத்தில் நிரந்தர முகாம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையின் இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணா ராவ் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் மொத்தமுள்ள 6 கோடியே 74 லட்சத்து 18 ஆயிரத்து 169 பேரில், கடந்த 12ம் தேதி வரை 5 கோடியே 62 ஆயிரத்து 250 பேரின் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 74.23 சதவீதம்.
ஆதார் அடையாள அட்டை எடுப்பதற்காக வார்டு, வார்டாக சென்று பதிவு செய்யும் பணி டிசம்பர் மாதத்துடன் முடிவடையும். இதையடுத்து, தமிழகம் முழுவதும் 470 நிரந்தர மையங்கள் அமைக்கப்படும். இந்த, மையங்கள் தாசில்தார் அலுவலகம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் அமைக்கப்படும். சென்னையில் 50 மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 36 மையங்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது.

தற்போது, அரசு ஊழியர்களுக்கு வசதியாக, சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணை யர் அலுவலகத்தில் நிரந்தர முகாம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த முகாமை, வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ஸ்ரீதர் திறந்து வைத்தார். அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மையம் செயல்படும். எழிலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அவர்கள் குடும்பத்தினர் மற்றும் அருகில் உள்ள பொதுமக்களும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம், என்றார்.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home