14 November 2014

நேருவுக்குத் தூண்டுதலாக இருந்தது இஸ்லாமே..!

நவீன இந்தியாவின் சிற்பியான நேருஜியை முழு தேசமும்
இன்று நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறது.

சீனப்போர் தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னால்
மான்செஸ்டர் கார்டியன் என்ற பத்திரிகை நிருபர் டயாஜின் கின்னுக்கு
நேரு பேட்டி அளித்தார். உங்களுடைய மிகப் பெரிய சாதனை எது
என்று கேட்டபோது அவர் பதிலாகக் குறிப்பிட்டார்:
“இந்துச் சட்டங்களைத் திருத்தியது.”

1952 முதல் 1957 வரையுள்ள கால கட்டத்தில்தான்-
அதாவது 1955இல்தான் இந்துப் பெண்களுக்கு சொத்துரிமை,
மறுமணம் செய்யும் உரிமை எல்லாம் கிடைத்தன.

இந்துமதச் சீர்திருத்த சட்டங்களைக்
கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்திற்கு வித்திட்டது
நேருவின் மீது இஸ்லாம் ஏற்படுத்திய
தாக்கத்தின் விளைவே ஆகும்.

நேருஜி இஸ்லாத்தைப் பெரிதும் நேசித்தார்.
1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்துரிமை,
மணவிலக்கு உரிமை, மறுமண உரிமை போன்றவற்றை
இஸ்லாம் அளித்திருப்பதை நன்கு அறிந்தவர் அவர்.

அது மட்டுமல்ல உருது மொழியை நேரு மிகவும் நேசித்தார்.
அவர் தமது திருமண அழைப்பிதழைக்கூட
உருது மொழியில்தான் வெளியிட்டார்.
இஸ்லாமிய வளர்ச்சியை அவர்
ஒரு வரலாற்று அதிசயம் என்று குறிப்பிடுகிறார்.

(It is strange that this Arab race, which for long ages had lived a sleepy existence,
apparently cut off from what was happening elsewhere,
should suddenly wake up and show such tremendous energy
as to startle and upset the world. 'The story of the Arabs,
and of how they spread rapidly over
Asia, Europe and Africa, and of the high culture and civilization
which they developed, is one of the wonders of history)

இந்து சமுதாயத்தை அது விழுந்திருந்த குழியிலிருந்து
விடுவித்த நேருவை மட்டுமல்ல,
அந்த மாற்றங்கள் ஏற்பட அவருக்குத் தூண்டுதலாக இருந்த
இஸ்லாத்தையும் இன்று சிலர்
எதிரியாகப் பார்ப்பது விந்தையிலும் விந்தை.

நன்றி:
சிராஜுல்ஹஸன்


-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home