26 November 2014

நான் முஸ்லிம் என்பதில் பெருமிதம் அடைகிறேன்

ஒரு நண்பர் சொன்னார் நான் ஒரு கிருஸ்தவன் ஆனாலும் எனக்கு தமிழ் இனத்தின் வலி மட்டும் தான் பெரியதாக தெரியும் மற்றதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

நான் சொன்னது பதில்: சகோ எனக்கு நான் மனிதன் என்ற உணர்வு மட்டும் தான் எப்போதும் இருக்கும் காரணம் இஸ்லாம் எனக்கு அப்படி தான் போதிகின்றது. அப்பாவி மனிதன் எங்கே பாதிக்க பட்டாலும் எனக்கு வலிக்கும். இனம், மதம் பார்த்து வலியை உனர்வது வலி அல்ல அது இன வெறி. என்னிடம் இன வெறி இல்லாததால் தான் ISIS போன்ற இயக்கங்களை என்னால் கண்டிக்க முடிந்தது. நான் அதிகமாக வெறுக்கும் ஒரு அகோரியை பல சர்தார்ஜிகள் சேர்ந்து அடிக்கும் போது எனக்கு வலி தெரிந்தது..........
*அன்டை வீட்டுக்காரன் பசித்திருக்கும் போது நீ மட்டும் உணவு உட்கொன்டால் நீ முஸ்லிம் இல்லை. (அன்டை வீட்டுக்காரன் எந்த மதம் எந்த இனம் என்பது முக்கியம் இல்லை)
*நோயாளியை கண்டிப்பாக நலம் விசாரிக்க வேண்டும்.(நோயாளி எந்த இனம்,மதம் என்பது முக்கியம் இல்லை)
*இறுதி ஊர்வலம் செல்லும் போது கண்டிப்பாக எழுந்து நிற்க வேண்டும். (மரணித்தவர் எந்த மதம் இனம் என்பது முக்கியம் இல்லை)
*கண்ணில் கானும் ஏழைகளுக்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும்.(ஏழை எந்த மதம், இனம் என்பது முக்கியம் இல்லை)
*அருகில் உள்ள அனாதைகளை அரவனைக்க வேண்டும்.(அனாதை எந்த மதம், இனம் என்பது முக்கியம் இல்லை)
இப்படி இஸ்லாம் எங்களுக்கு சொல்லும் கட்டளைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.......அதனால் தான் சொல்கிறேன் எல்லா மனிதர்களையும் மனிதர்களாக மட்டுமே பார்க்க சொல்லும் இஸ்லாத்தை என் வாழ்கை நெறியாக ஏற்றதற்காக பெருமை கொள்கிறேன்.
நபிகளார் சொன்னார்கள் தன் இனத்திற்காக போராடுவது இன வெறி ஆகாது. தம் இனத்தை சேர்ந்தவன் தவறு செய்யும் போது அதை தடுக்காமல் அதை நியாயப்படுத்துவதே இன வெறி ஆகும்.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home